Followers

Sunday, November 04, 2018

ஹோலி டிரினிட்டி சர்ச் இனி ஈஸா இப்னு மரியம் பள்ளிவாசல்

அமெரிக்கா - நியூயோர்க்கில் உள்ள ஹோலி டிரினிட்டி சர்ச் இனி ஈஸா இப்னு மரியம் என்ற பள்ளிவாசல் ஆக அறியப்படும்.
சர்ச்சுக்கு ஆட்கள் வருவதில்லை. ஆனால் தினம் தினம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. எனவே அங்குள்ள மக்களின் தொடர் முயற்சியால் மாதா கோவிலாக இருந்த அந்த கட்டிடம் ஏக இறைவனை மட்டுமே வணங்கக் கூடிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு சில மாற்றங்களை அங்குள்ள முஸ்லிம்கள் தற்போது செய்துள்ளனர். இனி இங்கு ஏசுநாதர் நபிகள் நாயகத்தைப் போல் இறைத் தூதராக மட்டுமே பார்க்கப்படுவார்.
அளவற்ற அருளாளனான அல்லாஹ் ஒரு குமாரனை எடுத்துக் கொண்டதாக அந்தக் கிருஸ்துவர்கள் கூறுகின்றார்கள். கிறிஸ்துவர்களே! நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்.
(திருகுர்ஆன் 19:88, 89),
“ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது, அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வுக்குத் தகுமானதில்லை. ஏனென்றால், வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அந்த அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருகின்றது.
(திருக்குர்ஆன் 19:92, 93).
எல்லா புகழும் இறைவனுக்கே!
---------------------------------------------
"நாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது." - (அப்போஸ்தலர் 17:29)
"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்." - (ரோமர் 8:16)
"அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்." - (இரண்டாம் கொரிந்தியர் 6:18)
* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.
* இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.
* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.
இதிலிருந்து "குமாரர்' எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே பைபிளில் கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். "புதல்வர்கள்' எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் இறைமகன் என்று பைபிளில் குறிப்பிடப்பட்ட அனைவருமே கர்த்தரின் புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.


4 comments:

ASHAK SJ said...

நல்ல முன்னேற்றம், வாழ்த்துக்கள். அமைதி மார்க்கத்தை ஏற்க அனைவரும் முன் வரவேண்டும்

Dr.Anburaj said...

இசுலாம் அரேபிய மண்ணை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது.

குரான் கொண்டாடப்படும் இடங்கள் பாழாகி கிடக்கின்றன.

ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான். சிரியா யேமன் இப்படி பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கின்றது.

ASHAK SJ said...

இந்த பட்டியல் நீள காரணம் இஸ்லாம் அல்ல

ASHAK SJ said...

இந்த பட்டியல் நீள காரணம் இஸ்லாம் அல்ல