110 கோடிகளை புல்வாமாவில் உயிரிழந்த 44 மத்திய ஆயத்தப் படை வீரர்களுக்கு நிதியாக அளித்த விஞ்ஞானி முர்தாஜ் அப்துல் ஹமீத்!
இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா என்கிற இடத்தைச் சார்ந்தவர் முர்தாஜ் அப்துல் ஹமீத், 44 வயதான இவர் கண் பார்வை இழந்தவர். இவர் மும்பை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.
இவர் பிறவியில் கண் பார்வையை இழந்தவர் என்பதால் அரசு சலுகை மூலம் பொருளாதாரவியலைக் கற்று பின்னர் விஞ்ஞான ஆய்வுகளில் இறங்கியுள்ளார். இவர் தற்பொழுது “ஃபியூயல் பர்ன் எஞ்சின்” என ஒரு கருவியை கண்டு பிடித்துள்ளதாகவும், அதன் மூலம் கேமரா மற்றும் ஜிபிஆர்எஸ் உதவியின்றி வாகணங்களைச் சோதனை செய்ய இயலும் என்றும் இது புல்வாமா போன்ற கார் வெடி குண்டு தாக்குதலை தடுக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 தியாகிகளின் குடும்பங்களுக்கு வருமான வரிக்குட்பட்ட 110 கோடியை பிரதமர் தேசிய நிதி ஆணையத்திடம் நன்கொடையாக அளிக்கப் போவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவரது இந்த செயல் தேச பக்தி என்பது வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்திடம் அல்ல... காலம் அறிந்து வினையாற்றும் முர்தாஜ் அப்துல் ஹமீத் போன்றவர்களிடத்தில் தான் உள்ளது என்பதைக் காட்டுகிறது!
2 comments:
பணம் கொடுத்தப்பின் பதிவு செய்திருக்கலாம்.
ஆனால் எந்த ஊடகத்திலும் இந்த செய்தியில்லையே ஏன் ?ஏன் ? இந்த செய்தி உண்மைதானா ?
Post a Comment