Followers

Monday, March 18, 2019

திமுக தலைமை முஸ்லிம்களுக்கு இடம் ஒதுக்காதது பற்றி .....



திமுக தலைமை முஸ்லிம்களுக்கு இடம் ஒதுக்காதது பற்றி .....
கலைஞரைப் போலவே ஸ்டாலினும் இஸ்லாமிய மக்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்துள்ளதாக பலர் பதிவிடுகின்றனர். ஸ்டாலின் இடத்தில் இருந்து இதனை பார்க்க வேண்டும். முஸ்லிம் லீக் என்பது திமுகவின் ஒரு அங்கம்தான். யாரை ஆதரிக்கச் சொல்கிறார்களோ அவர்களை ஆதரித்து விட்டு போக வேண்டிய நிர்பந்தம்தான் முஸ்லிம் லீக்குக்கு. எனவே முஸ்லிம் லீக்குக்கு கொடுத்த சீட்டானது திமுக என்ற கட்சிக்கு கொடுத்ததாகவே பொருள்படும். அடுத்து கேரளாவைப் போன்று முஸ்லிம்கள் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் விதமாக மக்கள் தொகை இல்லை.
திமுக சார்பில் எத்தனை முஸ்லிம்கள் விருப்ப மனு தாக்கல் செய்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இங்கு 80 சதவீதம் பணம்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. கொள்கை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். நேர் காணலில் திமுகவும், அதிமுகவும் "தேர்தலுக்காக எத்தனை கோடி செலவு செய்வீர்கள்?" . என்ற கேள்வியைத்தான் பிரதானமாக வைத்துள்ளனர்.
கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் பஷீர் அகமது என்ற சாதாரண தொண்டரை திமுக நிறுத்தியது.. அவர் சேர்மனாக இருந்த சாதனைகள் அவரை வெற்றி பெற வைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறின.. அவர் ஓட்டிற்கு பணம் கொடுக்காமல் பிரச்சாரம் செய்தார்.. எதிரே திண்டுக்கல் சீனிவாசன், ஓட்டிற்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று மந்திரி ஆனார்.. அங்கே பஷீர் முகமதுவை பாராட்டி மக்கள் பேச வில்லை, சீனிவாசன் வெற்றி... வெற்றி... என்று பேசினார்கள்..
சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டும் கொடுத்த சீட்டுக்கள் 10. முஸ்லிம் லீக் - 5 , மமக - 5 .
இன்று கேள்வி கேட்க கூடியவர்கள் எத்தனை முஸ்லிம்களை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தீர்கள்?
கொடுத்த ஐந்து சீட்டுக்கும் ஆள் இல்லாமல் ஒரு சீட்டை ஜவாஹிருல்லா திருப்பி கொடுத்தார். இந்த சீட்டையும், முஸ்லிம் லீக்கின் ஒரு சீட்டையும் சேர்த்து எஸ்டிபிஐக்கு கொடுத்து திமுக அணிக்கு இழுத்திருந்தால் அன்றே ஸ்டாலின் முதல்வராகியிருப்பார். அதை கெடுத்தது நம்மிடையே உள்ள சுயநலம்.
30 கோடி தனது சொந்த காசை போட்டு செலவு செய்து வெற்றி பெறும் வேட்பாளர் நேர்மையாக நடக்க முடியுமா? 30 கோடியை 60 கொடியாக எப்படி மாற்றுவது என்ற சிந்தனைதான் வெற்றி பெற்றவர்களுக்கு இருக்கும். இத்தகைய சூழலில் மக்களுக்காக உழைக்கிறேன் என்ற வாதம் கானல் நீராகத்தான் வெளிப்படும். ஒரு நேர்மையான முஸ்லிம் தற்போதுள்ள சூழலில் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்குட்பட்டு அரசியல் பண்ணுவது என்பது இயலாத காரியம். வெற்றி பெற்று வரும் ஒன்று அல்லது இரண்டு எம்பிக்களால் சுதந்திரமாக பேசி விடவும் முடியாது. ஸ்டாலினும், எடப்பாடியும் எழுதி கொடுப்பதைத்தான் பாராளுமன்றத்தில் பேச முடியும்.
பிறகு வேறு என்னதான் செய்வது? ஒரு அமைப்பாக, ஒரு குழுவாக இருந்து கொண்டு எங்களிடம் 1 கோடி வாக்காளர்கள் உள்ளார்கள். இந்த இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் எங்களின் வாக்கு உங்களுக்கு என்று வெளிப்படையான பேரங்கள் பேசலாம். 3.5 சதவீத இட ஒதுக்கீடு நமக்கு இவ்வாறுதான் கிடைத்தது. ஒன்று அல்லது இரண்டு எம்பிக்கள் கிடைப்பதை விட இது போன்ற கோரிக்கைகளால் ஒட்டு மொத்த இஸ்லாமியரும் பயன்பெருவர்.
மற்றபடி விகிதாச்சார முறைப்படி தேர்தல் என்று வருகிறதோ அன்றுதான் இஸ்லாமியரின் வாக்குகளுக்கோ கட்சிகளுக்கோ முறையான அங்கீகாரம் கிடைக்கும். அது வரை நமது வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நமது உயிருக்கும் உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத கட்சிகளை ஆதரித்து விட்டு போக வேண்டியதுதான்.
சட்டசபை தேர்தலில் தினகரனை ஆதரிக்கலாம். பாராளுமன்ற தேர்தலில் தினகரனை ஆதரிப்பது மறைமுகமாக மோடி அரியணை ஏறவே வழி வகுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன் நான் திமுக காரன் கிடையாது 

3 comments:

Dr.Anburaj said...

மோடி அரியணை ஏறக் கூடாது என்ற ஒரு கருத்தின்

அடிப்படையில் அனைவரும் தி.முக விற்கு ஓட்டுப் போடுங்கள் என்று அருமையாக பிரசங்கம் செய்தாகிவிட்டது. 2014 தோ்தலிலும் திரு.நரேந்திர மோடிக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை. ஆனால் இறைவன் அரியணையில் ஏற்றி அழகு பார்த்து மக்களுக்கு வலுவான ஒரு அரசை ஊழல் அற்ற அரசை வீரமிக்க அரசை மக்களை நேசிக்கும் அரசை அளித்துள்ளாான். பல முஸ்லீம்கள் இந்த கருத்தை அடிக்கடி எடுத்துக் காட்ட கேட்டிருகின்றேன்.

“அல்லா கொடுப்பதை மனிதர்கள் யாரும் தடுக்க முடியாது
அலலா கொடுக்காததை யாரும் பெற முடியாது“

எனக்கும் இந்த கருத்து உடன்பாடுதான். அல்லா திரு.மோடி அவர்களை அரியணை ஏற்றினால் முஸ்லீம்களால் தடுக்க முடியாது.

Dr.Anburaj said...

மோடி அரியணை ஏறக் கூடாது என்ற ஒரு கருத்தின்

அடிப்படையில் அனைவரும் தி.முக விற்கு ஓட்டுப் போடுங்கள் என்று அருமையாக பிரசங்கம் செய்தாகிவிட்டது. 2014 தோ்தலிலும் திரு.நரேந்திர மோடிக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை. ஆனால் இறைவன் அரியணையில் ஏற்றி அழகு பார்த்து மக்களுக்கு வலுவான ஒரு அரசை ஊழல் அற்ற அரசை வீரமிக்க அரசை மக்களை நேசிக்கும் அரசை அளித்துள்ளாான். பல முஸ்லீம்கள் இந்த கருத்தை அடிக்கடி எடுத்துக் காட்ட கேட்டிருகின்றேன்.

“அல்லா கொடுப்பதை மனிதர்கள் யாரும் தடுக்க முடியாது
அலலா கொடுக்காததை யாரும் பெற முடியாது“

எனக்கும் இந்த கருத்து உடன்பாடுதான். அல்லா திரு.மோடி அவர்களை அரியணை ஏற்றினால் முஸ்லீம்களால் தடுக்க முடியாது.

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் அனைவரும் மதவாத முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளைக் கலைத்து விட்டு திமுகஅல்லது அதிமுக பாரதிய ஜனதாவில் இணைய வேண்டும். அதுதான்சரியான தீர்வு.

தகுதியான நபர்கள் கட்சியில் இல்லாதபோது முஸ்லீம்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்.