Followers

Friday, March 22, 2019

நியூசிலாந்தில் அரசாங்கமே ஏற்பாடு செய்த ஜுமுஆ தொழுகை!

நியூசிலாந்தில் அரசாங்கமே ஏற்பாடு செய்த ஜுமுஆ தொழுகை!

நியூசிலாந்தில் இன்று(22.03.19) திறந்த வெளியில் நடந்த ஜுமுஆ தொழுகை!

- பிரதமர் உட்பட பிறமதத்தவர்களும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியோடு முஸ்லிம்களை கொலை செய்த இனவெறியர்களுக்கு அடுத்த மரண அடி!

இன்று(22.03.19) நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரின் ஹாக்லி பார்க்கில்
திறந்த வெளியில் ஜுமுஆ தொழுகையை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடி நிறைவேற்றினர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்...
இந்த நிகழ்வை அரசாங்கமே ஏற்பாடு செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இதில் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் உட்பட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

பெரும்பாலான பிறமத சகோதரிகள் தங்களது தலையில் முக்காடு அணிந்த நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அந்த நாட்டின் பிரதமர் உட்பட.

இஸ்லாத்தை அழிக்க வேண்டு என்ற இனவெறியர்களின் ஆசையில் மண் அள்ளிப்போடும் விதமாக  அந்த அரசாங்கமே ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் கூறிய வார்த்தைகள் அனைவரது உள்ளத்தையும் நெகிழச் செய்தது.

முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிக்காட்டிய ஒருபொன்மொழியை நியூசிலாந்து பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அந்த பொன்மொழி:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது,
ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும்.

உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன.
அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
நூல்: முஸ்லிம் 5044

நாங்களும் உங்களது துக்கத்தில் பங்கெடுக்கின்றோம்.
நாம் அனைவரும் ஒருவரே! என்று நியூசிலாந்து பிரதமர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் ஈர்த்தது.

(அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

---------------------------------

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விடமாட்டான்.
(அல்குர் ஆன் 9:32)


1 comment:

Dr.Anburaj said...

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை நியுசிலாந்துமக்களும் அரசும் பிரதமரும் தேற்றும் முயற்சி தான் தங்கள் பதிவு.இது அம்மக்களின் பண்பாட்டிற்கு ஒரு அடையாளம். ஆனால் இசுலாமிய தேச காடையர்களால் எஸ்டி இன ஆண்கள் ஒட்டு மொத்தமாக சுட்டுக் கொல்லப்பட்டு அனைத்து பெண்களும் செக்ஸ் அடிமைகளாக வைக்கப்பட்டு கொடூமை செய்யப்பட்ட நிகழ்வில் அரேபிய சமூகமோ முஸ்லீம் மக்களோ நியுசிலாந்து மக்கள் காட்டிய இந்த அற்புதமான பண்பை காட்டவில்லை. கற்பாறைகள் போல் உணா்ச்சியற்று இருந்தார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் “காபீர்கள்“ தொனே என்று பாராமுகமாக இருந்தார்கள்.
இசுலாம் பயங்கரவாதத்தை போதிப்பதை நியுசிலாந்து மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.