Followers

Sunday, March 03, 2019

தேவதாசி

தேவதாசி
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா...!
(நன்றி தோழர்
பால. இராச ராச சோழன்.)


4 comments:

Dr.Anburaj said...

Brahmachariyam -பிரம்மச்சரியம் என்பது வாழ்வின் அடிப்படை.பிறப்பு முதல் திருமணம் ஆகும் வரை கற்பு நெறி தவறாது தனது விந்தை வீணாக்காமல் விரயம் செய்யாமல் வலிந்து வெளியேற்றாமல் சக்தி காத்து வாழ வேண்டும் என்பது இந்து சமய கருத்து.ஸ்ரீராமன் அப்படித்தான் வாழ்ந்தான்.இலக்குவன் அப்படித்தான் வாழ்ந்தாா். காயத்திரி மந்திரம் கற்றுக் கொள்ளும் முன் பிரம்மச்சரிய உறுதி மொழி எடுக்க வேண்டும்.
பிறன் மனைவியை - ஒரு யுத்த கைதி குமுஸ் பெண்ணைப் பார்த்து சத்ரபதி சிவாஜி சொன்னது “ எனது தாயாா் உன்னைப்போல் பேரழகு பெற்றிருந்தாா் என்னால் நான் இதை விட மிக அழகாக பிறந்திருப்பேன் “ என்றாா் .அசல் இந்து பண்பாடு இதுதான். அரேபிய பண்யாடு அந்த பெண்ணணை செக்ஸ் அடிமையாக்கி நாசம் செய்து சந்தையில் விற்று பணம் சம்பாதித்திருக்கும்.

01.இதை 1000 ஆண்டுகளாக மக்களுக்கு சொல்லமல் பாழ்படுத்தியது சண்டாள காண்டுமிராண்டித்தன்மான முகலாளா்கள் ஆட்சி.
02.அதற்கு பின் வந்த ஆங்கிலேய கிறிஸ்தவ ஆட்சியும் பிரம்மச்சரியம் என்ற சொல்லை மறக்கடித்து விட்டது.
03.இதற்கு பின் வந்தது காந்தியின் இயக்கம்.பிரம்மச்சரியம் குறித்து நிறை எழுதினாா்.Self Indugence or Self control என்ற புத்தககத்தில் பிரம்மச்சரியம் குறித்து காந்திஜி தனது சொந்த அனுபவங்களை படித்ததை கேட்டதை விவரிக்கின்றாா். காந்தியை பின்பற்றுவதாகச் சொல்லும் நமது அரசு காந்தியின்இந்த செய்தி ஒவ்வொரு இந்தியனையும் சென்றடைய என்ன செய்தது ? ஏதும் செய்யவில்லை. தறசமயம் புத்தக விற்பனை நிலையங்களில கூட காந்தியின் புத்தகங்கள் கிடைப்பதில்லை.மனிதனை நேசிக்காத அரசு.பணம் கமிஷன் மட்டுமே அரசியல்வாதிகளின் லட்சியம் ஆனது. நாட்டு மக்களின் சீரிய வாழ்வு மனித வளமிக்க வாழ்வு மலர எதும் இவர்கள் செய்யவில்லை. மதச்சார்பின்மை என்ற வியாக்கியானம் வேறு.
04. இன்று திரைப்படங்கள் பெண்களை முக்கால் அம்மணமாக காட்டுகின்றது. பெண்களை சீரழித்து பண்பாட்டை அசிங்கப்படுத்துகின்றது.தவறான உடை பழக்கங்கள் பழகும் முறை ஆகியவற்றைக் காட்டி பெண்களை குழப்பி வருகின்றது. யுதார்த்த உலகில் தாங்கள் தவறான கொள்கையை பின்பற்றியதாக பல பெண்கள் பின்னா் வருத்தப்படுகின்றாாரகள்.
--------------
பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப .பிரம்மச்சரியம் காத்தால் உடலுக்கும் மனதிற்கும் ஆனமாவிற்கும் உன்னதங்கள் வாய்கின்றன- யோக சுத்திரம் 2
பிரம்மச்சரிய ஆஸரமம் உயிர்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது இளைஞா்கள் மகத்தான காரியங்களை நிறைவேற்ற முடியம். நமது தாய்நாடு சிறந்த விளங்க வேண்டுமானால் பிரம்மச்சரிய விரதம் அவசியமானது-சுவாமி விவேகானந்தா்.
----
இப்போது “தவறு“ எங்கே உளளதுஎன்பது அனைவருக்கும் புரியும். முறையாக இந்துக்களுக்கு சமய கல்வியை அளிக்காமல் சமயசார்பின்மை பேசி சமூகத்தை பாழாக்கினாால் விபரீதங்கள் பெரும் அழிவுகள் தொடர்கதையாகும்.

Mohamed Shaheed said...

wow, Super.....

Dr.Anburaj said...

8 ம் வகுப்பு படிக்கும் போது உறவினா் ஒருவரின் துணையுடன் விவேகானந்தரின் ஞானதீபங்கள் 12 புத்தகத்தையும் வாசித்து அறியும் வாய்ப்பு கிட்டியது. பிரம்மச்சரியம் என்றால் என்ன எனற கேள்விக்கு ஆடு-கிடா, சேவல்-பெட்டை ஆகியவற்றின் உறவுகாட்சிகளைக் கொண்டு மனிதர்களுக்கும் இப்படி ஒரு வாழ்க்கை உள்ளது.அது திருமணத்திற்கு பின்தான் அனுமதிக்கப்பட்டது.அதைத்தான் சுவாமிஜி மிக முக்கியமாக வலியுருத்துகின்றார் என்பது எனக்கு விளக்கப்பட்டது. குறைந்த பட்சம் அதை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று எனக்கு விளக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு வாரத்தில் ஒருநாள் செல்லும் பழக்கம் எனக்கு இருந்தது.திரைப்படங்கள் பார்த்த பின் சரோஜாதேவியுடன் நான் காதல் விளையாட்டு விளையாடுவதுபோல் மனதில் காட்சிகள் வந்தது. விவேகானந்தரின் போதனைக்கு முரணானதே என்று திகைத்தேன். பின்னா் திரைப்படங்கள் பார்த்தால் பிரம்மச்சரிய விரதம் காக்க இயலாது என்று முடிவு செய்து திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விளைவு பொழுது போக்குவது பெரும் பிரச்சனையானது. நண்பர்கள் வட்டத்தில் இருந்தும் நிறைய விலக வேண்டியதாயிற்று. நூலகத்தில் சரண் அடைந்தேன்.பொழுது போக்கு பௌதீகம் வேதியில் காட்டும் புத்துலகம் ஆழ்கடலின் அற்புதங்கள் என்று அறிவியல் புத்தகங்களை படித்து தள்ளினேன். பெரிமேசன் ஆா.கே. நாராயணன் முலக்ராஜ் ஆனந்த போன்ற நாவலாசிரியா்களின் நாவலை படித்து தள்ளினேன். கல்லூரி வாழ்வில் இயற்பியல் எனது மனதைக் கொள்ளை கொண்டது. படித்தேன்.படித்தேன். .சிறு வெற்றிலை கொடிகால் விவசாயியான எனது தந்தை மிகவும ஏ்ழ்மையான நிலை. 9 குழந்தைகள்.நான் 4 வது. சனிக்கிழதை ஞாயிற்றுக்கிழமைகளில் கூலி வேலைக்குப் போவேன். எம்.எஸ்சி படிக்கும் போது கூட கட்டடப்பணிகளில் தடியாள் வேலை பார்ப்பேன். என்னிடம் வேலை வாங்க எங்கள் ஊர் மக்கள் பெரிதும் சங்கடப்படுவார்கள்.ஆனால் உழைப்புதான் கௌரவம் என்று உழைத்து சிறுதொகையை சேமித்து கல்லூரி படிப்பு செலவுகளை சமாளித்து வந்தேன். உயா் மதிப்பெண் மற்றும் பண்பாடு மிக்க மாணவன் என்றுபெயரெடுத்ததால் கல்லூரி நிா்வாகம் ஆசிரியார்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். கடன் பெற்றதுண்டு.ஆனால் இலவசமாக எதையும் யாரிடம் பெற்றதில்லை. எம்.எஸ்சியில் 96 சத மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றேன். கல்லூரி பேராசிரியா் ஆகி பணிநிறைவு பெற்று வாழ்கின்றேன். இன்றும் மாதம் ஒரு தொகை இயற்பியல் புத்தகங்கள் வாங்க செலவு செய்கின்றேன். சந்தேகங்கள் தீர்க்க சில கல்லூரி பேராசிரியா்களுடன் தொடா்பில் இருக்கின்றேன். நிறைய மாணவர்கள் இயற்பியல் பாடங்கள் படிகக சந்தேகம் போக்க வருகின்றார்கள். அவர்களுக்கு இலவசமாக உதவி வருகின்றேன். உயா் தகுதி பெற்ற பல மாணவர்களை உருவாக்கியிருக்கின்றேன். வயதிற்கு தக்க உடல் வருத்தங்கள் பல பிரச்சனைகள் தலை தூக்கி வருகின்றது. இறைவனை தியானித்து உடல் வேதனைகளை குறைக்க வேண்டுகின்றேன். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

அனைத்திற்கும் காரணம் நான் காத்த கற்பு நெறி-பிரம்மச்சரியம்தான். சுவாமி விவேகானந்தா்தான் எனக்கு ஒளி.வழிகாட்டி. இன்றும் வீட்டில் திருவாசகம் முற்றோதுதல் நடத்தி வருகின்றேன். யோகா வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. சமஸ்கிருதத்தில் டிப்ளமோ பெற்றுள்ளேன். சைவ உணவு உண்டுவாழ்கின்றேன்.
முறையான சமய கல்வி பெற்ற ஒரு இந்துவாக வாழ்வதில் பெருமைப்படுகின்றேன்.
எனக்கு கிடைத்த ஒளி மற்ற இந்து இளைஞர்களும் பெற வேண்டும் என விழைகின்றேன்.

Dr.Anburaj said...

திரு.முஹம்மது சாஹீத் அவர்களே தங்களின் பாராட்டுப் பதிவிற்கு நன்றி. தங்கள் பதிவைப் பார்த்த போது மனம் மகிழ்ச்சியில் நீந்தியது. சிறிய வாரத்தை என்றாலும் ஏதோ அதிக மகிழ்ச்சியைத் தந்தது.