Followers

Friday, March 01, 2019

சமணர் தனித்த சமயம்

சமணர் தனித்த சமயம்
சமண விழுச்சிக்கு பின் சைவ சமயம் மாறிய சமணர்கள். நீறுபூசி வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர்
நீறுபூசி வெள்ளாளர் என்போர் சமணத்தில் இருந்து சைவத்திற்க்கு வந்தவர்களாக இவர்களை குறிப்பிடப்படுகிறது. வீரசைவத்தைச் சார்ந்த யோகிஸ்வரர் அல்லது வைராவி அல்லது சிவபண்டாரம் என்போரே நிறுபூசிகள் என்று குறிப்பிடுவதாக கருதுகிறேன்.
இன்றும் வைராவி பிரிவினர்கள் சமணத்தைச் சார்ந்த நயினார் நோன்பை மேற்க்கொண்டு வருகின்றனர். தென் தமிழகத்தின் பல சமண கோவில்களில் இன்று வரை இவர்கள் வழிபாடுகள் செய்து வருகின்றனர். தற்போது கிடைக்கும் தமிழகத்தின் பழமையான சமணம் சார்ந்த கல்வெட்டுகளில் வைராவிகள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கிறது.
இந்த வைராவிகள்தான் பாண்டிய மன்னர்களின் மெய்க்காவலர்களாக இருந்தவர். வைராவி என்றால் "சமணத்தின் இளந்துறவி" என்று பொருள். பிற்காலத்தில் சைவ ஆலயங்களின் மெய்காவலர்கள் இருந்த வைராவியை "இளங்கேள்வி" என்பார்கள். கோவில் தம்பிரான்களை "முதுகேள்வி" என்பார்கள்.
“Jains in this part are called as ‘Neeru Poosi Vellallar’ as they are into farming activities,” says Santhalingam.
http://www.thehindu.com/.../decipherin.../article7813990.ece
இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0598.html
திருக்குறண்டி சமண கோவிலும் வயிராவிகளும்
https://m.facebook.com/permalink.php?
story_fbid=1352914218078583&id=1022417727794902
நவகாண்டம்களில் ஈடுபட்ட வயிராவிகள் பற்றிய தகவல்
http://www.thehindu.com/.../namma.../article2945833.ece
வயிராவிகளின் யோகீஸ்வரர் சிலை, போர்வாள் மற்றும் நவகாண்டம் பற்றிய தகவல்
http://www.tharavu.com/2009/11/700.html
வயிராவிகளின் யோகீஸ்வரமுடையார் கோவில் பற்றிய தகவல்
பொன்னின் தம்பிரான் (வீரசைவர்)
https://m.facebook.com/.../a.1022423.../1340644882638850/...
பழனி அருகே பொருந்தல் என்னும் ஊரில் ஈமச்சின்னத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டின் தாழியும், புரிமணையும், தாழியில் “வயிர” என்னும் எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
https://www.yarl.com/.../149526.../
வயிராவி நிர்வாகம் செய்துவந்த குன்றக்குடி திருக்கோவில்.
https://ta.m.wikisource.org/.../பக்கம்:குன்றக்குடி_அட.../173
பாண்டியர் காலத்தில், கோவிலை சூறையாட வந்த வாணாதிராயர் கூட்டத்திற்கும் காவல் பணியில் இருந்த பொன்னப்ப வயிராவி ஒருவருக்கும் இடையில் நடந்த சண்டையில், அந்த வயிராவி உடல் முழுவதும் விழுப்புண் பெற்ற பின்னரும், தொடர்ந்து சண்டையிட்டு வாணாதிராயர் கூட்டத்தை தோற்றோட செய்து கோவில் செல்வதை காப்பாற்றியதால், பாண்டிய மன்னர் அவருக்கு `திருக்கொடுங்குன்ற நாடாழ்வான் ' என்ற பட்டத்தை அளித்து அதை கல்வெட்டுகளிலும் பதிய செய்தார்.

No comments: