Followers

Wednesday, March 20, 2019

நியூஸிலாந்த் பாராளுமன்றத்தில் கூட்டம் குர்ஆன் வாசிப்போடு தொடக்கம்!

நியூஸிலாந்த் பாராளுமன்றத்தில் கூட்டம் குர்ஆன் வாசிப்போடு தொடக்கம்!
துப்பாக்கி சூடு நடத்தியவன் நியூஸிலாந்திலிருந்து இஸ்லாத்தை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் நேற்று நியூஸிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ததோடு குர்ஆன் வாசிப்போடு கூட்டம் தொடங்கியது. எங்கெல்லாம் இஸ்லாம் மூர்க்கமாக எதிர்க்கப்படுகிறதோ அங்குதான் இஸ்லாம் அதிகம் வளரும்.
நியூஸிலாந்து பிரதமருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி!
------------------------------------------------
பாராளுமன்றத்தில் ஓதப்பட்ட குர்ஆன் வசனத்தின் மொழி பெயர்ப்பு!
2:153 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏

2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:154 وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
2:155 وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏ 
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156 الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏ 
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.





No comments: