Followers

Sunday, March 17, 2019

நீங்கள் 'பாதுகாவலர்' என்றால் என் மகன் எங்கே?

நீங்கள் 'பாதுகாவலர்' என்றால் என் மகன் எங்கே?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்(JNU) பயோ டெக்னாலஜி படித்து வந்தவர் நஜீப் அஹமத் ( வயது 27) கடந்த அக்டோபர் 15 ந் தேதி 2016 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி (ABVP) மாணவர்களோடு சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. ஒன்பது மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அனைவரும் இந்துத்வாவைச் சேர்ந்தவர்கள். அந்த சம்பவத்துக்குப் பிறகு நஜீப் அஹமத் எங்கிருக்கிறார் என்ற விபரமே தெரியவில்லை.
நேற்று மோடி தனது ட்விட்டர் கணக்கில் தனது பெயருக்கு முன்னால் பாதுகாவலன் என்ற அடை மொழியை சேர்த்துக் கொண்டுள்ளார். நீங்கள் உண்மையிலேயே மக்களின் பாதுகாவலன் என்றால் எனது மகன் எங்கே? என்று கேட்கிறார் நஜீபின் தாயார் ஃபாத்திமா. பதில் சொல்வாரா மோடி?
தகவல் உதவி
NDTV
17-03-2019



1 comment:

Dr.Anburaj said...

டெல்லி காவல்துறையிடம் கேட்க வேண்டிய சின்ன கேள்வியை ஒரு நநாட்டின் பிரதமரிடம் கேட்பது கொஞ்சமும் அறிவுள்ள காரியம் அல்ல.

ஒருவன் மனைவி பாலுறவிற்கு இணங்கவில்லையென்றால் கூட “ நாட்டின் பிரதமர்தான்“ காரணம் என்பீர்களா ?