Followers

Monday, March 18, 2019

நியூஸிலாந்த் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்....

நியூஸிலாந்த் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்....
கடந்த வெள்ளியன்று பாசிச சிந்தனை கொண்ட ஒரு மிருகத்தால் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த அளவு வெறி ஏன் அவனுக்கு ஏற்பட்டது? இஸ்லாத்தில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது. பள்ளி வாசலில் இவர்களின் தொழுகை முறை எப்படி இருக்கும்? என்ற ஆவல் நியூஸிலாந்த் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனை அறியும் பொருட்டு தினமும் அனைத்து பள்ளி வாசல்களுக்கும் அந்த வெள்ளை இன மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர். பல கேள்விகளை கேட்கின்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறான எழுச்சியின் பயனாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் 350 நியூஸிலாந்த் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். 50 பேரை கொன்ற அவனுக்கு அவனது நாட்டவரான 350 பேரை என்ன செய்து விட முடியும்? எதிர்ப்பில்தான் இஸ்லாம் வளர்ந்துள்ளதாக சரித்திரம் சொல்கிறது. அந்த சரித்திரம் நியூஸிலாந்திலும் தொடர்கிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே...
------------------------------------------------------
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’
(அல்-குர்ஆன் 3:54)