Followers

Monday, March 11, 2019

பெண்கள் ஆண் துணையின்றி வெளியில் செல்லக் கூடாது

பெண்கள் ஆண் துணையின்றி வெளியில் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. உடைகளுக்கும் சில கட்டுப் பாடுகளை விதிக்கிறது. திருமணத்துக்கு முன்பே காதல் என்ற பெயரில் ஆண் நண்பர்களோடு சுற்றுவதை வன்மையாக கண்டிக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்த்துக் கொள்ளச் சொல்கிறது. வேலை செய்யும் இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது.
இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வருமா? இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்று பலர் விமரிசிக்கின்றனர். அவர்கள் இந்த வீடியோக்களை பார்க்கட்டும். அந்த பெண்களை பெல்டால் அடித்து ஆடைகளை அவிழ்க்கச் சொல்கிறான் அந்த மனித மிருகம். வலி தாங்காமல் அந்த பெண்களும் உடன் படுகின்றனர். 'உன்னை நம்பி வந்தேனே! இப்படி மோசம் பண்ணிட்டியே' என்று அந்த பெண் கதறுவது மனதை பிசைகிறது. பெண் சுதந்திரம் என்ற பெயரில் கண்டவனோடு சுற்றுவது: லாட்ஜூக்கும் செல்வது: பிறகு கண்ணை கசக்கி என்ன பயன்? இனி அந்த பெண்களின் எதிர்கால வாழ்வு? அத்தனை பேரும் கிராமங்களிலிருந்து கல்லூரிகளுக்கு வந்த இளம் பெண்கள்.
இதிலிருந்தாவது பாடம் படித்து நமது வீட்டு இளம் பெண்களை கண்டிப்புடன் வளர்போம்: இஸ்லாம் சொல்லும் கட்டுப்பாடுகள் பெண்களின் பாதுகாப்புக்கு என்பதை இனியாவது நாம் உணர்வோம். இஸ்லாம் கூறும் பெண் சட்டங்களை மாற்று மத நண்பர்களும் கடைபிடிக்கட்டும். இதனால் அவர்கள் வீட்டு பெண்களும் பாதுகாக்கப்படுவர்.


1 comment:

Dr.Anburaj said...

இந்த கருத்து உயா் வருவாய் பிரிவினருக்கு பொருந்தும்.அந்நாடம் கூலி வேலை செய்து வறுமையில் வாழும் மக்களுக்கு இது பொருந்தாது. பணம் கொடடிக் கிடக்கும் ஒரு சிறிய மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு அரேபிய நாடுகள். அங்கு சாத்தியப்படுவது இந்தியாவில் சாத்தியப்படுமா ? நிறைய யோசிக்க வேண்டும்.
கணவனும் மனைவியும் வேலைக்கு போகும் போது ஆண்துணயோடுதான் போக முடியுமா ?
உடன்பிறப்புகள் யாரும் இல்லாத ஒற்றை பெண்ணாக பிறந்தவள் என்ன செய்வாள் ?
---------------------------------------------------------------------------
கற்பு நெறி தவரும் ஆண்களின் ..... வெட்ட சம்மதமா ? கற்பு நெறி பெண்களுக்கு கட்டாயம் என்பது போல் ஆண்களுக்கும் கட்டயம் என்பது போன்ற ஒரு சமூக அமைப்பு உருவானால் மட்டுமே பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.