Dr.Safi.
Neonatal Pediatrician
Nagercoil .
நாகை மாவட்டம். மயிலாடுதுறையின் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஒரு கர்ப்பிணி தாய்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது ,
தாயையும்
சேயய்யும் ,
முதல் மூன்று நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் ,
இன்று மீண்டும் அந்த குழந்தையை மிகவும் மோசமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் ,
மருத்துவ விசாரிப்பில் அந்த குழந்தைக்கு அந்த குழந்தையின் தாய்வழி பாட்டி ,
குழ்ந்தையின் வயிற்றை சுத்தமாக்க வெற்றிலைக்குள் ஏதோ ஓர் திரவத்தை சேர்த்து கொடுத்துள்ளார் ,
பிறகு முதல்கட்ட விசாரணையில் அனைத்து குழந்தைக்கும் இது தரும் வழக்கம் என சொல்லி காண்பித்ததில் ,
அது
மேலும் அதை கொடுத்ததால் குழந்தைக்கு அமிலத்தன்மை மிகுந்த மலம் வெளியேறி ,
உணவுக்குழாய் முதல் மலதுவாரம் வரை முழுதும் புண்ணாகி உள்ளது ,
மேலும் மலம் பட்ட இடம் முழுதும் பொங்கி உள்ளது ,
தற்போது அக்குழந்தை மிகவும் கவலைக்குரிய வகையில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிசு அறுவை சிகிச்சை பிரிவில் உள்ளது ,
மொத்தத்தில் சிசு மருத்துவனான நான் சொல்லிக்கொள்வது
பாட்டி வைத்தியத்திற்கு ஜால்ரா போடுவோரே...!!
எனக்கு தெரிந்த சில தான் அன்றாடம் கடந்து வரும் பாட்டி வைத்திய இம்சைகள் பின்வருமாறு
குழந்தை பிறந்த உடனே ,
1. மிக உயரிய சத்துக்கள் நிரம்பிய சீம்பால் தர மறுப்பது ,
2. சர்க்கரை கலசல் ( சர்க்கரை கலந்த நீர் ) கொடுக்க முனைவது ,
3. தொப்புளில் சுண்ணாம்பு வைப்பது ,
4. பனங்கற்கண்டு பொடித்து தருவது ,
5. தலையில் சளி வராமல் இருக்க உச்சி பொடி ( தலை உச்சிக்கும் , சளிக்கும் என்னமா சம்பந்தம் ) வைப்பது ,
6. சிகப்பு , சௌப்பு , மந்தம் ,மாந்தை , வயிறு ஏற்றம் , குடல் குடச்சல் , வயறு உபசம் என நாட்டு மருந்து கடைகளில் விற்கும் ஆதாரமற்ற , சம்பந்தமே இல்லாத , அல்லது வீட்டிலேயே தயாரித்த வசம்பு முதல் எண்ணில் ஆமணக்கு எண்ணெய் வரை அனைத்தையும் அந்த பேச தெரியாத பிஞ்சு வாயில் திணித்தல் ,
7. அழுததற்கெல்லாம் நோய் கற்பித்தல் ,
ஊரில் உள்ள மருத்துவர் அனைவரையும் சந்தித்து , சந்தையில் இருக்கும் அனைத்து மருந்தையும் வாய்வழியாக ஊத்திவிடுதல் ,
8. மூக்கு அடைத்தால் , மூக்கில் ஊதுவது , மூக்கு துவாரத்தை உறிவது , காதுக்குள் ஊதுவது ,
மூக்கில் எண்ணெய் விடுவது என பொல்லாங்கு செய்தல் ,
9.. சிசுவிற்கு கண் கூழை இருந்தால் உடனே தாய்ப்பால் , கழுதைபால் என எதையேனும் ஊற்றுவது ,
10. குழந்தை சிணுங்கினால் , அழுதால் , நெளிந்தால் , உமட்டினால் ,துப்பினால் , உறங்காமல் இருந்தால் ,
என பாரபட்சமே இல்லாமல்
சர்வலோக நிவாரணையாக
அனைத்து அறிகுறிக்கும் ஒரே மருந்து .
சாராயம் கலந்த க்ரைப் வாட்டர் !!
அந்த மருந்தை கொடுத்த உடனே குழந்தை ஏன் உறங்கி விடுகிறது என எவரும் யோசிப்பதில்ல ??
கடைசியாக ...
இந்த பாட்டிகளின் உச்சபட்ச அட்டகாசத்தின் மிக முக்கியமான ஒன்று .
தாய்ப்பால் மாற்ற முனைவது !!
-------பால் பத்தல -------
இதை சொல்லாத பாட்டிமார்களே தற்கால பேறுகால வீடுகளில் இல்லை என்றே சொல்லலாம்த
காரணம் ..
மிக எளிது.
சுணக்கம் ,
சோம்பல் ,
மற்றும்
பாட்டி வைத்தியம் !!
சிசு மருத்துவனின் கடைசி வேண்டுகோள் ..!
தாய்மார்களே ,
பாட்டிகளே...!!
உங்கள் வயதையும் , அதன் காரணமாய் இருக்கும் பேறுகால அனுபவங்களையும் உளமாற மதிக்கின்றோம்
ஆனால்.
எந்த குழந்தையானாலும் சரி ,
அக்குழந்தையின் அழுகை என்பது அந்த சிசுவின் பாஷை ,
அந்த பிஞ்சுக்கு பேச தெரியாது ,
3 மாதம் முடியாத குழந்தைக்கு சிரிக்க கூட தெரியாது ,
ஆக
3 மாதம் வரை ,
அந்த உயிருக்கு தெரிந்ததெல்லாம்
சப்புவது ,
உறிவது ,
அழுவது ,
நெளிவது ,
கை கால் அசைப்பது ,
மல ஜலம் கழிப்பது ,
இவ்வளவுதான் ,
இந்த வாயில்ல சிசுக்களை வைத்துக்கொண்டு உங்கள் விசேஷ சிகிச்சை முறைகளையும் ,அனுபவமிக்க சிறப்பு வைத்தியங்களையும் செய்து கொண்டு அந்த உயிரோடும் , அதன் ஆரோக்கியத்தோடும் தயவுசெய்து விளையாடாதீர் ??
வெற்றிலையும்
பாதரசமும் ...!!!!
என்ன கலவை சார் இது !!!!
எனக்கு தெரிந்தவரை இம்மாதிரி செய்யும் பாட்டிமார்களுக்கு கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்திடவும் வேண்டும் !!
இவை யாவும் தவறு என உணர தண்டனைகள் கொடுக்கப்பட்டால் தான் முடியும் .!
அக்குழந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டி முடிக்கிறேன் ..!!