Followers

Saturday, August 24, 2019

மூலதனங்கள் இந்தியா நோக்கி வராததன் முக்கிய காரணம்!

மூலதனங்கள் இந்தியா நோக்கி வராததன் முக்கிய காரணம்!
நான் ஒரு முதலாளி. ஒரு நாட்டில் முதலீடு செய்ய உத்தேசிப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா என்று யோசிப்பேன். அதன் பிறகுதான் எனது மூலதனத்தை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கொண்டு செல்வேன்.
இங்கு சவுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வெளி நாட்டவரின் மூலதனத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. மலையாளிகளில் பலர் கோடிக்கணக்கான ரூபாய்களை சவுதியில் வந்து கொட்டுகிறார்கள். பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் அவர்கள் கைகளில்தான். திமுக, அதிமுக, விநாயக சதுர்த்தி, கிருட்டிண ஜெயந்தி என்று இங்கு யாரும் உண்டியல் தூக்கிக் கொண்டு வசூலுக்கு வர மாட்டார்கள். கொடுக்கவில்லை என்று மிரட்ட மாட்டார்கள்.அனைத்து பொருட்களுக்கும் மொத்தமாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி. இது ஒன்றைத் தவிர வேறு வரிகள் கிடையாது. கொள்ளை சம்பவங்கள் வெகு அரிதாகத்தான் நடைபெறும். கடை அடைப்பு கிடையாது. இதனால் துணிந்து தனது பொருளாதாரத்தை இங்கு வந்து கொட்டுகிறான் மலையாளி.
நமது நாட்டை எடுத்துக் கொள்வோம். என்று பாபரி மசூதி கயவர்களால் தரை மட்டமாக்கப்பட்டதோ அன்று வீழ்ந்தது இந்தியா. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில தேசவிரோதிகள் இந்து மதத்தை பயன்படுத்திக் கொண்டு மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி 10க்கு மேற்பட்டவர்களை அடித்தே கொன்றார்கள். மோடியோ அமீத்சாவோ இதற்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? மாறாக அந்த கட்சிகளால் கவுரவிக்கப்பட்டார்கள். மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட சாத்வி பிரயாக்சிங் பாஜக சார்பில் எம்பியாக்கப்படுகிறார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் குண்டு வெடிப்பு சூத்ரதாரி அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார். குஜராத்தில் 3 நாட்கள் நேரம் தருகிறேன் அதற்குள் உங்களின் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள் என்று வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டவர் இன்று நமது பிரதமர். பல கொலைகளை செய்து குற்றச்சாட்டால் சிறை சென்றவர் நமது உள்துறை மந்திரி. இவ்வாறு நாட்டில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு நிச்சயமற்ற சூழல் தொடரும்போது எந்த முதலீட்டாளர் நமது நாட்டில் முதலீடு செய்ய முனைவார்.
இது பற்றி எந்த ஊடகங்களும் விவாதம் நடத்துவதில்லை. தெரிந்தே இந்த உண்மைகளை மறைத்து விட்டு வேறு விசயங்களை பிரதானமாக பேசுகின்றனர். எது மூல காரணங்களோ அதனை சரி செய்யாமல் இன மோதல்களை தடுக்காமல் பொருளாதாரம் மீளும் என்பது வெறும் கானல் நீராகத்தான் இருக்கும். தினமும் வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. வேலையிழந்தவர்கள் போராட்டத்தில் குதித்தால் அதனால் வரும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உலக நாடுகளை சுற்ற மோடி கிளம்பி விட்டார். அழகிய எனது நாட்டை பாசிச வாதிகளிடம் இருந்து இறைவன் காப்பாற்றுவானாக!


No comments: