Followers

Saturday, August 17, 2019

நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில்...

மதரீதியாக சமூக வலை தளத்தில் கேள்வி எழுப்பியவருக்கு நடிகர் மாதவன் உங்களைப் போன்றவர்களின் மரியாதை கிடைக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் மாதவன் நேற்று ஆவணி ஆவிட்டத்தை தனது வீட்டில் கொண்டாடியது குறித்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் மாதவன் வீட்டில் இந்துக்கடவுள்கள் புகைப்படத்துடன் சிலுவையும் இருந்தது. அதைக்குறிப்பிட்டு ஒருவர், "பின்னணியில் ஏன் சிலுவை இருக்கிறது. அது என்ன கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம் என்று விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கோபத்துடன் பதில் அளித்துள்ளார் . அதில், "உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என நம்புகிறேன். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்காமலேயே சீக்கிய மதத்துக்கு மாறினேனா என்று கேட்டீர்கள்.
எனக்குத் தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. ஏன் உலகின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. அத்தகைய தலங்களில் இருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்தன, சிலவற்றை நானே வாங்கினேன். எனது வீட்டில் எல்லா மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்களும் பணியில் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்துப் படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர்.
எனது பால்ய பருவத்திலிருந்தே எனக்கு இது கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படித் திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துபட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்றுக் கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும்" என்று தெரிவித்துள்ளார் மாதவன்.
நன்றி: தீக்கதிர்


8 comments:

vara vijay said...

So now wahabi saudi slave suvanappiriyan will also agree that every religion is equal and acceptable. If suvi do this then he will be labeled as kaffir and as well as he will be acquessed of committing most henious crime in the universe. And after that his head will be striked off.

suvanappiriyan said...

இந்து மதம் யாரையும் எதனையும் கடவுளாக்க அனுமதிக்கிறது. எனவே மாதவன் தர்ஹாவுக்கும் போகலாம்: சர்ச்சுக்கும் போகலாம். அத்தி வரதரை தரிசிக்கவும் போகலாம்.

ஆனால் இஸ்லாம் இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைக்க அனுமதியில்லை. தாயைக் கூட கடவுளுக்கு இணையாக பாவிக்கக் கூடாது.

எனவே இரண்டு மார்க்கங்களுக்கும் வித்தியாசம் உண்டு தோழரே!

suvanappiriyan said...

//saudi slave suvanappiriyan//

ஹா...ஹா.... நான் படைத்த இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அடிமை இல்லை. ஒரு நல்ல நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கிறது.

ஆனால் உங்களைப் போன்றவர்கள் சாதி வித்தியாசத்தில் யாருக்கு யார் அடிமையாக இருக்கிறீர்கள் என்று உங்களின் மனசாட்சியிடமே கேட்டுக் கொள்ளுங்கள். :-)

vara vijay said...

I don't mean you are slave of saudi country, I want to point out your are inactiveness towards Saudi's unlawful rule over your hollyland. I can't believe that you only fear Allah. You fear Saudi's rule more against Allah and his prophet.

vara vijay said...

What is your answer for my question will you accept all religions are equal. Answer it first.

Dr.Anburaj said...

வரலாறு தெரியாது வளா்ந்து விட்ட நடிகன். முகலாய அரேபிய படையெடுப்புகளில்இவன் குடும்பம் சிக்கவில்லை.இவனது பாட்டியோ புட்டியோ அரேபிய வல்லாதிக்க வாதிகளிடம் சிக்கி குமுஸ் பெண்ணாக வாழ்ந்து சீரழிந்து சாக வில்லை.இவன் குடும்பத்து பெண்கள் அடிமைச் சந்தையில் அரேபிய காடையர்களால் ஏலம் விடப்படவில்லை. எனவே இந்த நடிகர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

இந்துக்களை முறைப்படுத்துவதே பெரிய பிரச்சனை.அதில் கவனம் செலுத்துங்கள். மற்ற விஷயங்கள் தானாகவே சீர் திருந்திவிடும்.

suvanappiriyan said...

//What is your answer for my question will you accept all religions are equal. Answer it first.//

எப்படி ஒன்றாகும்?

இஸ்லாம் ஒரு கடவுள்தான் என்கிறது. இந்து மதம் கல்லும் மண்ணும் மனிதனும் கூட கடவுள் என்கிறது.

இஸ்லாம் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்கிறது. இந்து மதம் மனிதனை நான்கு வர்ணங்களாக பிரித்து அவர்களுக்குள் பிறப்பிலேயே வித்தியாசத்தை கொண்டு வருகிறது.

இஸ்லாம் கணவன் இறந்தால் பெண்களை மறுமணம் செய்து கொள்ளச் சொல்கிறது. இந்து மதம் இளம் விதவையாக இருந்தாலும் திருமணமாகாமல் வாழ்வை கழிக்க வேண்டும் என்கிறது.

எவ்வாறு எல்லா மதங்களும் ஒன்றாகும்?

vara vijay said...

Good. So Suvanapriyan will not accept other religions are also equal Islam. Then why r u expecting others to give equal status to Islam. If madavan is treating all religion equally that is because of Hinduism. And suvi belief of islamic supremacy because of wahhabism.