''பாபரி மசூதி இடிக்கப்பட்டபோது உபியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். அதை காரணமாக வைத்து ஒரு முஸ்லிமும் எங்கும் குண்டு வைக்கவில்லை. மாறாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் சம்பந்தமே இல்லாமல் மும்பையில் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டு வெடிக்கிறது. தாவூத் இப்றாஹிம் என்ற நிழல் உலக தாதா வின் ஏற்பாட்டில் வைக்கப்படுகிறது. இவனைப் போன்ற தாதாக்களெல்லாம் உளவுத் துறையோடும் காவல் துறையோடும் நெருங்கிய தொடர்பில் இருப்பர். கடல் வழியாக எவ்வாறு உள்ளே வந்தனர்: அவர்களை வழி நடத்தியது யார்? ஹேமந்த கர்கரே கொல்லப்பட்டது! என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.''
''கோவை மக்கள் மிக அன்பாக பழகக் கூடியவர்கள். ஒரு கான்ஸ்டபிளின் கொலைக்காக சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் ஒட்டு மொத்த இஸ்லாமியர் மீதும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.(இதனால் விளைந்த மாற்றம்.... முஸ்லிம்களிடம் இருந்த பெரும்பாலான வணிகங்கள் மார்வாடிகள் வசம் சென்றது. முஸ்லிம்களின் பொருளாதாரம் தமிழகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். மார்வாடிகளின் பொருளாதாரம் வட மாநிலங்களுக்கு செல்லும். அவர்களே வேலை வாய்ப்பும் பெறுவர்)
ராஜீவ் காந்தியையும், இந்திரா காந்தியையும் கொன்ற போது இவ்வாறு ஒட்டுமொத்த சமூகமும் தாக்கப்படவில்லை. இதிலுள்ள மறைமுக அரசியலை புரிந்து கொள்ளுங்கள்.''
சத்தியம் டிவியில் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன். 23-08-2019
1 comment:
இவர் 23 ம் புலிகேசி. இவரது அபிப்ராயங்களை தொலைக்காட்சி சேனலில் கேட்டிருக்கின்றேன்.விபரம் பத்தாது.
Post a Comment