Followers

Monday, August 19, 2019

பகவத் கீதை கூறுவதைக் கேட்போமா!

பகவத் கீதை கூறுவதைக் கேட்போமா!
//Good. So Suvanapriyan will not accept other religions are also equal Islam. Then why r u expecting others to give equal status to Islam. If madavan is treating all religion equally that is because of Hinduism. And suvi belief of islamic supremacy because of wahhabism.// Vara Vijay
மீண்டும் தவறான புரிதல்......
உலக மக்கள் அனைவருக்கும் வேதமும் இறைத் தூதர்களையும் அனுப்பியதாக குர்ஆனில் இறைவன் கூறுகிறான். செம்மொழியான தமிழுக்கும் கண்டிப்பாக இறைத் தூதர் வந்திருப்பார். ஆனால் யாரென்ற உண்மை நமக்கு தெரியவில்லை. திருவள்ளுவராகக் கூட இருக்கலாம்.
'நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'
26 : 196 - குர்ஆன்
சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.
'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 -குர்ஆன்
ஆரியர்களின் வருகைக்கு முன்னால் தமிழகத்தின் தெய்வ நம்பிக்கை எப்படி இருந்தது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதாகத்தானே இருந்தது? சித்தர்களின் பல பாடல்கள் இஸ்லாமிய கருத்துக்களோடு ஒன்றி போகின்றன.
அதே போல் கிருத்துவ மதத்தில் ஏசு நாதர் தனது சீடர்களுக்கு என்ன போதித்தார் என்பதை ஆய்வு செய்தால் அதுவும் இஸ்லாமாகவே இருக்கிறது. பவுல் அடிகள் பிற்காலத்தில் தனக்கு ஏற்றவாறு கிருத்துவத்தை வளைத்துக் கொண்டதுதான் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை படித்தீர்கள் என்றால் அது 90 சதவீதம் குர்ஆனை ஒத்திருப்பதை அறிவீர்கள்.
ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்துப் பாருங்கள். அங்கும் இஸ்லாமிய கொள்கையான ஏக தெய்வ கொள்கையையே காண்பீர்கள். எனவே தவறை உங்களிடம் வைத்துக் கொண்டு இஸ்லாத்தையும் சுவனப்பிரியனையும் குறை காணலாமா?
இனி பகவத் கீதை கூறுவதைக் கேட்போமா!
ஈசுவரா சர்வ புதானாம்
ஹிறுத்தே செர்ஜ்ஜீன் திஷ்டதி
ப்ராமயன் சர்வ புதானி
யந்திரு ரூடானி மாய யா
தமேவ சரணம் : கச்ச
ஸர்வ பாவேன பாரதா
தத் பிலஸாதால் பராம்
சாந்திம் ஸ்தானம்
பிறாய்யஸீ சாசுவதம்
(18 : 61 : 62)
எல்லாப் படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயங்க வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால் அந்த ஏக இறைவனிடம் மட்டுமே சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும்.
யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்
நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.
-குர்ஆன் 2 : 186
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18
மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)
ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)
கண்ணால் காண முடியாதது யாரோ அவனே படைத்த இறைவன் அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறான். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு பார்க்கும் பொருட்கள் யாவும் கடவுள் இல்லை.
-கேனோ உபநிஷத் (1 : 6)
தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
-எசையா (40:18-25)
யாதொரு மனிதக் கடவுளையும் வணங்குவதற்கு கட்டளை இட்டதில்லை.
-ரிக் வேதம் (10:82,3)
மனிதன் இறைவனுக்கு உதாரணம் கூறுகிறான். அந்த மனிதனை நாம்(இறைவன்) படைத்திருப்பதை ஏனோ மறந்து விட்டான்.
-குர்ஆன் 36:78
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.
-குர்அன் 6:103
மேற்கண்ட இந்து இஸ்லாமிய கிறித்தவ வேதங்கள் ஒரே இறைவனையே வணங்கச் சொல்ல உலகம் முழுவதும் இன்று நாட்டுக்கு நாடு இறைவனின் உருவங்கள் வேறுபடுவதைப் பார்க்கிறோம். வழிபாட்டு முறைகளிலும் பெருத்த வித்தியாசங்கள். இவை எல்லாம் எதனால் ஏற்ப்பட்டது என்று என்றாவது சிந்தித்திருக்கிறோமா? மதங்களின் பெயரால் வயிறு வளர்த்த மத குருமார்கள் செய்த புரட்டுகளாலேயே இத்தகைய மாற்றங்களைப் பார்க்கிறோம்.

2 comments:

Dr.Anburaj said...

அரேபிய படையெடுப்பு நடக்கவில்லையெனில் இந்தியாவில் ஒரு முஸ்லீம் இருக்க மாட்டான்.அரேபிய படையெடுப்பினால் ஏற்படுத்தப்பட்ட கூட்டமே இந்தியாவில் முஸ்லீம்கள்.

ஏகன் அநேகன் ஒர்நாம் ஒர்ரூபம் இல்லார்க்கு என்று திருவாசகம் பேசுகின்றதே.

ஏகன் இறைவன் என்பதை இந்துக்களாகிய நாங்கள் அரேபியாவில் பிறந்த காட்டுமிராண்டிகளிடம் கற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ? இந்துக்களுக்கு அரேபிய காட்டுமிராண்டிகளிடம் இருந்து கற்க வேண்டியது ஏதும் இல்லை. கல்வி கலை மருத்துவம் கலாச்சாரம் ஒழுக்கம் என்று அனைத்து துறைகளிலும் மிக உயா்ந்த சாதனைகள் முன்னேற்றம் பெற்ற இந்துக்களுக்கு காட்டறவிகளின் துணை எதற்கு ?

எங்களுக்கு மிகநன்றாக தெரிந்த ஒருவிசயத்தைமீண்டும் மீ்ண்டும் கிளறிக்கொணடிருப்பது ஏன் ?
சுவாமி சித்பவானந்தா் அவர்களால் விளக்கஉரை எழுத்ப்பட்ட ஸ்ரீமத் பகவத்கீதையை கொஞசம் கொஞசமாக இணையத்தில் வெளியிட தாங்கள் தயாரா ?
பெணடாட்டி குமுஸ் வைபபாட்டிகள் என்று ஆடி மாதத்து நாய்கள் போல் வாழும் அரேபியர்களின் கலாச்சாரம் குப்பை.பெண்களை தாயாக பாவிக்கும் பிரம்மச்சரியம் பேணச் சொல்லும் இந்து கலாச்சாரம் சொக்கத்தங்கம்.

vara vijay said...

Suvi, then why don't you accept all religions are equal.