Followers

Wednesday, August 28, 2019

குவைத் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு...

குவைத் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு இன்று சற்றுமுன் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது:
குவைத்தில் இந்திய தூதரகத்தில் இன்று தங்கள் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இந்தியர்கள் தனிப்பட்ட தகவல்கள் எதையும் கேட்டு இந்திய தூதரகத்தின் எந்த அதிகாரியும், ஊழியர்களும் உங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டுக் மாட்டார்கள் எனவும் யாரும் ஏமாற கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு காரணம் குவைத்தில் இந்திய தூதரகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் என்ற பெயரில் பல இந்தியர்கள் தொடர்பு கொண்டு வங்கி தகவல்கள் கேட்பது மற்றும் உங்கள் பெயரில் அந்த புகார் உள்ளது, அதை சரிசெய்ய பணம் செலுத்த வேண்டும், இந்த வழக்கு உள்ளது என்பது போன்று, பல காரணங்களை கூறி யோசிக்கவிடாமல் பதட்டத்தில் நீங்களும் சுதாரித்துக் கொள்வதற்குள் ஏமாற்றி விடுகிறார்கள்.
இது போன்ற பல்வேறு ஏமாற்று வேலைகளை செய்து பலரை அவர்கள் வலையில் விழவைத்து இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக பல புகார்கள் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களை பற்றி அனைத்து தகவல்களை நன்கு தெரிந்துகொண்டு இவ்வாறு ஏமாற்றி வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே உங்கள் சிவில் ஐடி, வங்கி அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவையின் எந்த தகவலும் தெரியாத எந்த ஒரு நபருக்கும் பகிர்வு செய்யாதீர்கள்.
பலர் வளைகுடாவில் வேலை வேண்டும் என்ற ஆர்வத்தில் எதாவது தளத்தில் விளம்பரம் பார்த்தால் சற்றும் யோசிக்காமல் உடன் பாஸ்போர்ட் நகல், சான்றிதழ்கள் நகல் உள்ளிட்டவை அனுப்பும் செயல்களை செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு, பல நேரங்களில் இது தவறான செயல்களுக்கு பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையே சீரழித்து விடுவார்கள்.
Reporting by Kuwait tamil pasanga Team



No comments: