Followers

Monday, August 05, 2019

ஹஜ்ஜூப் பெருநாள் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்று!

ஹஜ்ஜூப் பெருநாள் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்று!
வருடா வருடம் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ஹஜ்ஜூப் பெருநாள் (பக்ரீத்) பற்றி இந்த பதிவில் பார்போம்.
யுட்யூபில் ஆடு வளர்ப்பு பற்றி காணொளியைப் பார்த்தீர்கள் என்றால் அதன் உரிமையாளர்கள் பெரும்பாலானோர் பக்ரீத் பெருநாளை உத்தேசித்தே ஆடு வளர்ப்பதாக சொல்வர். ஹஜ்ஜூப் பெருநாளன்று பெரும்பாலான ஆடுகள் விற்பனைக்கு வந்து காசு பார்த்து விடுகிறான் முதலாளி. ஐந்து ஆடுகள் 10 ஆடுகள் வளர்க்கும் சிறு விவசாயி கூட நல்ல விலை கிடைக்க காத்திருப்பது ஹஜ்ஜூப் பெருநாளுக்காகத்தான்.
இந்திய முஸ்லிம்களின் ஹஜ்ஜூப் பெருநாள் பற்றி சற்று பார்போம்.
இந்திய முஸ்லிம்கள் மொத்த மக்கள் தொகை தோராயமாக 25 கோடி என்று வைத்துக் கொள்வோம்.
இவர்களில் குறைந்த பட்சமாக வசதி படைத்த 10 சதவீதம் பேர் ஆடு அறுத்து பெருநாளை கொண்டாடுவதாக வைப்போம்.
ஒரு நல்ல கொழுத்த ஆட்டின் விலை 10000 என்று வைப்போம்.
2.5 சதவீதம் x 10000 = 25000 கோடிகள் நேரிடையாகவும் மறை முகமாகவும் இந்திய பொருளாதாரத்தில் பண சுழற்சி ஏற்படுகிறது.
ஒரு நடுத்தர ஏழை விவசாயி 10 ஆடுகளை வளர்ப்பதாக உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.
2.5 ÷ 10 = 25 லட்சம் விவசாயிகள் இதனால் பலனடைகின்றனர்.
இந்திய பொருளாதாரத்தில் 125000 கோடி பணப் புழக்கம் ஏற்படுகிறது.
40 கோடி மக்கள் இலவசமாக குர்பானி இறைச்சியை பெற்றுக் கொள்கின்றனர்.
25 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.
ஆடு வளர்க்கும் விவசாயியின் கைகளில் பணப் புழக்கம் ஏற்பட்டால் தனது குடும்பத்தினருக்கான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முனைவான். இதனால் பல்வேறு தொழில்கள் நசிவடையாமல் காக்கப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரமே மக்களின் பணப் புழக்கத்தில் தான் இருக்கிறது. மேலும் இந்த பணப் புழக்கம் வெளி நாடுகளுக்கு செல்லாமல் முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறுகிறது.
ஆடு வளர்ப்பவர்களில் பெரும்பாலானோர் இந்து விவசாயிகள். முஸ்லிம்களின் பண்டிகையின் மூலம் பலனடைவது இந்து குடும்பங்கள் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
'பாரத் மாதா கீ ஜே' 'ஜெய் ஸ்ரீராம்' என்று கத்தியை தூக்கிக் கொண்டு மனித ரத்தம் குடிக்க வரும் இந்துத்வாவாதிகளிடமோ ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களிடமோ இந்த கணக்கை சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு மூளையில் ஏதும் ஏறாது. ஏனெனில் சிறு வயது முதலே தப்பும் தவறுமாக வரலாறுகள் போதிக்கப்பட்டு இஸ்லாமிய வெறுப்பு ஏற்றப்பட்டுள்ளது. எனவே இவர்களை தூரமாக்கி விட்டு நமது தொப்புள் கொடி உறவுகளான இந்து மக்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளது என்பதை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும.
வசதி படைத்த இஸ்லாமியர்கள் தனித்தோ கூட்டாகவோ குர்பானி கொடுத்து இறை கட்டளையை நிறைவேற்றுவதோடு நசிந்து வரும் இந்திய பொருளாதாரத்தையும் மேலே கொண்டு வர நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.


2 comments:

Dr.Anburaj said...

ஆடு வளர்ப்பவர்களில் பெரும்பாலானோர் இந்து விவசாயிகள். முஸ்லிம்களின் பண்டிகையின் மூலம் பலனடைவது இந்து குடும்பங்கள் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
--------------------------------
இந்த கட்டுரை இதுவரை சரிதான்.பின் தொடரும் பத்தி இந்து இயக்கங்கள் மீது தேவையற்ற அவதூறு பிரச்சாரம்.
---------------------------------------------

Dr.Anburaj said...


முஸ்லீம்கள் ஆடுகளைத் தின்பது விவசாயிகளின் பொருளாதாரம் என்பது உண்மை.

அதுபோல் பசு க்களை சாப்பிடாமல் இருப்பதுவிவசாயிகளின் பொருளாதாரம் என்பதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

3 வேளையும் இறைச்சி உணவு உண்பது நல்ல பண்பாடு அல்ல.
சைவஉணவு பெருகினாலும் விவசாயிகளுக்கு காய்கறி விற்பனையில் பொருளாதாரம் உயரும்.

பாலை பண்பாடு மாற வேண்டும்.
இசுலாத்தில் குறிஞ்சி முல்லை மருத பண்பாடு பேணப்படவில்லை. அரக்ககுணம் நிறைந்த பாலை பண்பாடுதான் உள்ளது.