பெருநாள் விடுமுறை தம்மாமில்!
ரியாத்திலிருந்து ரெயிலில் பயணமானேன்! தம்மாமில் இறங்கி அங்கிருந்து ரஹிமா நோக்கி சென்றோம். என்னை அழைப்பதற்கு சகோதரர் ராஜனும், சகோதரர் ஈஸாவும் வந்திருந்தனர். ரஹிமா என்ற ஊரின் தற்போதய பெயர் ராஸ் தனூரா. தம்மாமிலிருந்து 60 கிலோ மீட்டரில் உள்ளது இந்நகரம். அரம்கோ பெட்ரோல் எடுக்கும் நிலையமும் இங்குதான் உள்ளது. ஒரு நாள் ரஹிமாவில் தங்கி விட்டு மறுநாள் தம்மாமில் உள்ள சகோதரர் மாலிக் இடத்துக்கு பயணமானோம். அங்கு சகோ ராஜா, சகோ பஷீர், அவரது மகன், சகோ மாலிக் அனைவரோடும் பொழுது நலமாக கழிந்தது. லூலூவில் நடந்த இசைக் கச்சேரிக்கும் சென்றிருந்தோம். மலையாள நிகழ்வு. ஆனால் அவர்கள் அதிகம் பாடியது தமிழ் பாடல்களைத்தான். தமிழன்டா....
மறுநாள் திரும்பவும் கடற்கரையில் குளிக்க ரஹிமா நோக்கி பயணமானோம். சகோ ராஜனும் சகோ ஈஷாவும் சுடச்சுட பருப்பு வடையும், இனிப்பு போண்டாவும் பழ ரசங்களும் கொண்டு வந்திருந்தனர். அதனை சாப்பிட்டு விட்டு குளிக்க கடற்கரையில் இறங்கினோம். முன்னேற்பாடோடு செல்லாததால் குளியல் உடைகள் நான் எடுத்துச் செல்லவில்லை. அதனால் என்ன? தமிழர்களின் பாரம்பரிய உடையான கைலியோடு கடலில் குளிக்க இறங்கினேன். நண்பர்களும் இறங்கினர். கடலின் நீர் மிக தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தது. கடலில் நல்ல அலைகளும் இருந்தது. இருட்டத் தொடங்கியவுடன் கரையேறினோம்.
ரியாத்தை விட தம்மாமில் சூடு அதிகம். வியர்வையும் நம் ஊரைப் போல நிறைய வெளியேறுகிறது. கடற்கரை அருகில் இருப்பதால் இந்நிலை. தொடர்ந்து துல் ஹஜ் நோன்பு, நெய் சோறு, பிரியாணி, தம்மாம் சூடு அனைத்தும் சேர்ந்து எனது வயிற்றை கலக்கி விட்டது. . பிறகு எலுமிச்சை கலந்த பால் கலக்காத டீ இரண்டு முறை குடித்து நிலைமையை சரியாக்கினேன்.
இத்தனை நிகழ்வுகளுக்கிடையேயும் ஒரு வேளை தொழுகையை கூட நாங்கள் அனைவரும் தவற விடவில்லை. இறைவனை நினைவு கூறும் இந்நிகழ்வை நாம் அனைவரும் நமது வாழ்வில் கடைபிடிப்போம்.
பெருநாள் விடுமுறையும் நலமுடன் கழிந்தது.
புதன் கிழமை இரவு 12 மணிக்கு சகோ ராஜாவின் வாகனத்தில் ரியாத் வந்து அல் பெய்க்கில் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு நலமுடன் வீடு வந்து சேர்ந்தோம்.
No comments:
Post a Comment