Followers

Sunday, August 18, 2019

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

உயிர்களிடம் அன்பு வைப்போம்.
சில நாட்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள அறையில் வெளிக் காற்று வரட்டும் என்று ஜன்னலை திறந்தேன். என்ன அச்சர்யம்? ஒரு புறா தனது முட்டையை இட்டு ஜன்னலின் இடுக்கில் ஒரு குஞ்சை பொறித்துள்ளது. என்னை பார்த்தவுடன் அந்த குஞ்சு முதலில் மிரண்டது. தாய் புறாவானது ஜன்னலை திறந்தவுடன் பறந்து போய் விட்டது. குஞ்சானது இவன் நம்மை ஒன்றும் செய்ய மாட்டான் என்று சர்வ சாதாரணமாக ஒரு அலட்சிய பார்வை என்னை நோக்கி பார்த்தது. ஜன்னலின் சிறிய இடுக்கின் மூலமாக வரும் ஏசி காற்றின் சுகத்தில் மூழ்கிப் போயிருந்தது அந்த குஞ்சு.
உடன் ஒரு சிறிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை வெட்டி அது குடிக்க தண்ணீர் வைத்தேன். வேறொரு பிளாஸ்டிக் டப்பாவில் வயர்களை கொண்டு கம்பியில் கட்டி அதனுள் சில நுணுக்கிய கோதுமை துகள்களை போட்டு வைத்தேன். தற்போது வெளியில் உணவு கிடைக்காத போது தாயும் குஞ்சும் நான் வைத்த கோதுமையையும் தண்ணீரையும் குடித்துக் கொள்வார்கள்.
பாலைவன தேசமான சவுதியில் எங்கு பார்த்தாலும் மரங்களை வளர்த்ததால் குருவிகள் தற்போது நிறைய தென்படுகின்றன. சிட்டுக் குருவிகளும் ஆங்காங்கே பார்க்கிறேன். ஆனால் நமது தமிழகத்தில் தற்போது சிட்டுக் குருவிகளின் வாசத்தையே பார்க்க முடிவதில்லை.
இங்கு பாலைவனம் சோலை வனமாகிறது: நாமோ சோலைவனத்தை பாலைவனமாக்கி வருகிறோம்.
-----------------------------------------
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (71)
விளக்கம்:
அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.
(ஒரு வருடத்துக்கு முன்பு நான் இட்ட பதிவு.)




1 comment:

Dr.Anburaj said...

பிறஉயிர்களை ஆதரித்து பேணுவது இந்து பண்பாடு.காக்காய்க்கு தண்ணீா் வைப்பது சிட்டுக்

குருவிக்கு உணவு வைப்பது வீட்டிற்கு வெளியே சிறு தொட்டிகட்டி தண்ணீா் நிரப்பி

கால்நடைகள் குடிக்க உதவுவது இந்து பண்பாடு.

கலால் முறையில் அறுத்து தின்பதுதானே அரேபிய பண்பாடு.சுவனப்பிரியன் சொர்க்கம் புக முடியாது.உங்கள்ஆளுமையில் இந்து பண்பாடு உள்ளது. ஆபத்து. அரேபிய பண்பாடு மட்டும்தான் இருக்க வேண்டும். இல்லையேல் அரேபிய அல்லா தங்களை கொடும் நரகில் போட்டு விடுவாா்.குரீஸ் பெண்கள் 73 கிடைக்காது. கவனம்.