ஹஜ் செய்ய வந்த ஒரு வெளி நாட்டவர் கால் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் அமர்ந்து விடுகிறார். இதனைப் பார்த்த சவுதி காவல் துறை அன்பர் அந்த ஹாஜியின் கால்களை பிடித்து அழுத்தி விட்டு அவருக்கு ஏற்பட்டுள்ள சுளுக்கை சரி செய்கிறார்.
எந்த நாடோ... எந்த இனமோ.... எந்த மொழியோ அது பற்றிய கவலை அந்த இருவருக்கும் இல்லை....
ஆனால் இஸ்லாம் அவர்கள் இருவரையும் இணைக்கிறது....
ஒரு காலத்தில் அரபு மொழி பேசாதவர்கள் ஊமைகளை போன்றவர்கள் என்ற திமிர் அரபுகளுக்கு இருந்தது. நீங்கள் உங்கள் தாய் மொழியை பேசினாலும் அவன் பார்வையில் அது ஊமைகளின் பாஷைதான். இஸ்லாம் அரபுலகுக்கு நபிகள் நாயகம் அறிமுகப்படுத்தியவுடன் 'மொழி வெறி இன வெறியை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபு மொழி பேசுபவர் அரபு மொழி பேசாதவரை விட உயர்வானவர் இல்லை. மனிதர்கள் அனைவரும் ஆதமுடைய பிள்ளைகள்' என்று பிரகடனப்படுத்தினார். அன்று முதல் படிப்படியாக அரபுகளின் மொழி வெறி குறைய ஆரம்பித்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
1 comment:
அரபு மொழி பேசுபவர் அரபு மொழி பேசாதவரை விட உயர்வானவர் இல்லை. மனிதர்கள் அனைவரும் ஆதமுடைய பிள்ளைகள்' என்று பிரகடனப்படுத்தினார். அன்று முதல் படிப்படியாக அரபுகளின் மொழி வெறி குறைய ஆரம்பித்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
ஆனால் அதிகாரத்திற்கும் பதவிக்கு மட்டும் குரைசி சாதிக்காரன்தான் -முஹம்மது எ்னற வாள்வீச்சு மன்ன் சாதிக்காரன்தான் வர வேண்டும்.
உயிரைப் பணயம் வைத்து முஹம்மதுவை ஆதரித்து காத்த அன்சாரிகளுக்கு நயவஞ்சகம். என்னே நபி மொழி.நன்றி கெட்ட துரோகம் .
Post a Comment