Followers

Friday, March 13, 2015

சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!



(இந்த இடத்தில் தான் தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)

//இது என்னங்க புதுசா கீது யாரவது அண்ணணுக்கு மட்டுமே தெரிஞ்ச வரலாற கொஞ்சம் இந்த பச்சமண்ணுக்கு எடுத்து சொல்ரிங்களா//
-Suriya Prakssh shanmugam!

சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட சாம நத்தம் கிராமம்!

மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது.

சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதில் சமணர்கள் தோற்கின்றனர். தோற்ற சமணர்களை சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றனர். இந்த வரலாறு மக்களுக்கு சொல்லப்படாமல் வஞ்சகமாக மறைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . முன்பு இந்த இடம் ஒரே சாம்பல் திட்டுகளாக குன்று போல் காட்சியளிக்குமாம். தற்போது ஓரளவு சமப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்து கட்டுரையாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மதுரை சரவணன் மேலும் சொல்கிறார்.....

எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது. மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம் என வரலாற்றை தமக்கு தெரிந்த மாட்டில் சொன்னார்.

மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் “சாம்பல் நத்தம்” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.

பெரிய புராணம் இந்த சமண கழுவேற்றம் பற்றி நிறைய பேசுகிறது. அது பற்றி தனி பதிவாக படங்களோடு ஆதாரங்களோடு பதிகிறேன்.

தகவல் உதவிக்கு நன்றி

மதுரை சரவணன்

13 comments:

suvanappiriyan said...


Ram nivas!

//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....

மதவாதம், மிதவாதம் வேற....

பயங்கரவாதம், தீவிரவாதம் வேற....

எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதீங்க....//

கீழே நான் தரும் ஆதாரங்கள் எல்லாம் இந்து மதத்தின் தீவிரவாதம் இல்லையா?

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

suvanappiriyan said...


Ram nivas!

//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....

மதவாதம், மிதவாதம் வேற....

பயங்கரவாதம், தீவிரவாதம் வேற....

எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதீங்க....//

கீழே நான் தரும் ஆதாரங்கள் எல்லாம் இந்து மதத்தின் தீவிரவாதம் இல்லையா?

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

suvanappiriyan said...


Ram nivas!

//#அண்ணே.... வாத, பிரதிவாதம் வேற.....

மதவாதம், மிதவாதம் வேற....

பயங்கரவாதம், தீவிரவாதம் வேற....

எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காதீங்க....//

கீழே நான் தரும் ஆதாரங்கள் எல்லாம் இந்து மதத்தின் தீவிரவாதம் இல்லையா?

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

suvanappiriyan said...


Ram nivas

//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழேற்றி கொன்றார்கள் அப்படின்னா இருக்கு?????

#பிறகெதுக்கு இதை பதிஞ்சீங்க.....

சரியா சொல்லுங்க.... கழுவில் ஏறுனவங்க எத்தனைபேர்....//

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச் சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

suvanappiriyan said...


Ram nivas

//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழேற்றி கொன்றார்கள் அப்படின்னா இருக்கு?????

#பிறகெதுக்கு இதை பதிஞ்சீங்க.....

சரியா சொல்லுங்க.... கழுவில் ஏறுனவங்க எத்தனைபேர்....//
திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.

-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.

-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'

-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.

-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'

'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'

-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

suvanappiriyan said...


Ram nivas

//#இதோட அர்த்தம் எட்டாயிரம் பேரை கழுவிழேற்றி கொன்றார்கள் அப்படின்னா இருக்கு?????

#பிறகெதுக்கு இதை பதிஞ்சீங்க.....

சரியா சொல்லுங்க.... கழுவில் ஏறுனவங்க எத்தனைபேர்....//

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.

'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.

படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.

suvanappiriyan said...

//அண்ணே Nazeer Ahamed
எண்ணாயிரம் என்றால் என்னனு கேட்டேன்.

அதை சொல்லலீயே?//

"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.]

-முனைவர் கொடுமுடி ச. சண்முகன் (2006). பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் 1, 2 (முன்னுரை பகுதியில் எண்ணாயிரம் நூல் எதை பற்றியது என்பதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம்). சென்னை: மீனாகோபால் பதிப்பகம்.

@சென்னி

suvanappiriyan said...

அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார்.

-பெரியபுராணம்

“வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யங்கள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையைஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே”

-நாலாயிரத் திவ்விய பிரபந்தம் (திருவரங்கப்பதிகம்) பாடல் 879இல்,


suvanappiriyan said...

தமிழ் இலக்கிய வரலாற்றில் சமண நூல்களும் பௌத்த நூல்களும் அழிக்கப்பட்டதற்கு ஆங்காங்கே பல குறிப்புகள் உள்ளன. மிகவும் அண்மை காலமான 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும்கூட இத்தகைய செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் சமணத் தமிழ் காப்பியமான சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த பின்னர் சைவர்கள் பலர் அவரைப் பற்றிப் புறம் கூறியதையும் சமண சமயத்தவராகிய மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையை மறைத்துவிட்டதையும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான வளையாபதியை அவர் பார்த்தும் பதிப்பிக்க முடியாமல் போனதையும் தன்னுடைய என் சரித்திரத்திலும் வேறுபல கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திருக்குறளுக்குச் சமணராகிய கவிராஜ பண்டிதர் எழுதிய உரையைப் பேராசிரியர் சக்ரவர்த்தி நயினார் 1949இல் வெளியிட்டார். சக்ரவர்த்தி நயினாரே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் திருக்குறளுக்கும் சமண சமயத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆய்வுக் குறிப்புகளாகக் கொடுத்தும் வெளியிட்ட நூல்கள் இன்றைய நிலையில் பெரும்பான்மையோர் கண்ணில்படாமேலேயே உள்ளன. ஐச்சிறுங்காப்பியங்களில் ஒன்றான நீலகேசி நூலினையும் அதற்குச் சமய திவாகர வாமன முனிவர் எழுதிய சிறந்த உரையையும் சக்ரவர்த்தி நயினார் பதிப்பித்து 300 பக்கங்களுக்கு மேற்பட்ட சிறந்த ஒரு ஆங்கில முகவுரையும் எழுதியுள்ளார். இன்றுவரை தமிழ்ச்சூழலில் இத்தகைய குறிப்புகள் ஓரங்கட்டப்பட்டே உள்ளன என்பதை விளக்க வேண்டியதில்லை. ஜனநாயக காலத்திலேயே சமண சமயம் சார்ந்த நூல்களும் சமணர்கள் எழுதிய கருத்துகளும் இவ்வாறு மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் இருப்பதைப் பார்க்கின்ற நாம் வைதீகர்ளும் சைவர்களும் அரசு அதிகாரம் பெற்றிருந்த காலத்தில் சமணர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டுமா?

பொ. வேல்சாமி
நாமக்கல்

-காலச்சுவடு

suvanappiriyan said...

நவம்பர் இதழில் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா?” என்ற வினாவிற்குத் தன் முன்முடிபாக இல்லை என்று கூறுகிறார் கட்டுரையாளர் பி.ஏ. கிருஷ்ணன்.

அவரே ஓவியங்கள், சிற்பங்கள், கோவில் விழாக்கள், நம்பியாண்டார் நம்பியின் பாடல்கள், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், ஜினபுராணம், அதைப் பார்த்து எழுதிய ராபர்ட் டி நொபிலி ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன என்று கூறுகிறார். ஒரு நிகழ்வைக் குறிக்க இவ்வளவு சான்றுகள் போதுமானதேயாகும்.

நம்பியாண்டார் நம்பி பாடல்களில் பதினொரு இடங்களில் கழுவேற்றம் குறிக்கப்படுகிறது என்று கூறிக் “கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே” “சமண்கணம் கழுவேற்றி” எனப்படும் இடங்களைக் கட்டுரையாளரே மேற்கோள் காட்டுகிறார். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் “கழுவில் ஏற்ற முறை செய்க” என்று அரசன் மந்திரியிடம் கூறியதையும் “எண்பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் கழுவேறினார்” என்று வருவதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

கழுவேற்றியதை நியாயப்படுத்துவது என் நோக்கம் அல்ல. “தோற்றால் இறப்போம்” என்று கூறிப் போட்டியில் இறங்கின சமணர் சிலராவது தாமே கழுவெறியிருக்கலாம் என்பதே மேற்கண்ட சான்றுகள்மூலம் தெரிகிறது. மதுரையை அடுத்த எண்பெரும் குன்றில் எண்ணாயிரம் பேர் அன்று இருந்திருப்பது நிச்சயம் சாத்தியம் இல்லை. சமணரில் “அஷ்ட சகஸ்ரர்” (எண்ணாயிரவர்) என்ற ஒரு பிரிவினர் இருந்தனர். அந்த அஷ்ட சகஸ்ரரில் ஒரு சிலர் போட்டியில் தோற்றுக் கழுவேறியிருக்கக் கூடும். ஆயிரவைசியரில், தில்லை மூவாயிரவரில் ஒருவர் இருந்தாலும் அவரை ஆயிரவர், மூவாயிரவர் என்று தானே அழைப்போம். அதுபோல் சமணர் எண்ணாயிரம் பிரிவினரில் ஒரு சிலர் கழுவேறியிருக்கக் கூடும்.

“சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தில் மதம் சார்ந்த சண்டைகள் இருந்ததாகத் தெரியவில்லை” என்கிறார். இளங்கோவடிகளின் சம காலத்தவரான சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையில் “சமயக் கணக்கர் தம் நிறம் கேட்ட காதையில்” ஐந்து சமயவாதிகள் தம் மதமே உயர்ந்தது என்று வாய்ச் சண்டை போடுகின்றனரே அது சமயச் சண்டை இல்லையா?

புலவர் செ. இராசு
ஈரோடு

காலச்சுவடு

suvanappiriyan said...


“சமணர் கல்வெட்டுகள், நூல்களில் கழுவேற்றம் கூறப்படவில்லை” என்கிறார். போரில் தோற்ற எந்த அரசர் தம் தோல்வியை எழுதினர்? அதுபோல்தான். ஆனால் “ஜினபுராணம்” நூலில் கூறப்பட்டிருப்பதாக ராபர்ட் டி நொபிலி கூறியதைக் கட்டுரையாளரே கூறியுள்ளார்.

“கழுவேற்றத்தில் சம்பந்தருக்கு விருப்பம் இல்லை” என்கிறார். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சம்பந்தர் கூற்றாகச் “சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும்” என்ற தொடர் வருகிறது. சம்பந்தர் கழுவேறல் பொருத்தமானதே என்கிறார்.

“கழு என்பது வேள்வி நடத்தப்படும்போது நாட்டப்படும் கம்பம்” என்கிறார். ஒரு கொலைக் கருவியைப் புனிதம் ஆக்குகிறார். சேக்கிழார் “கொல் நுனைக்கழு” என்றே கூறுகிறார். இன்றும் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கழுமரமும் ஈரோடு நகர் அய்யனாரப்பன் கோவிலில் உள்ள கழுமரமும் கொலைக் கருவிகளாகவே காணப்படுகின்றன.

“தென்னிந்தியா வந்தவர்கள் ஆடையணியாத வானத்தையே ஆடையாக உடுத்திய திகம்பரர்கள்” என்கிறார். ஆடையணியாதவர்கள் மூத்த துறவிகளான மிக மிகச் சிலரே. இல்லறத்தார், இளந் துறவிகள் அனைவரும் திகம்பர சமணமாக இருந்தாலும் ஆடையுடுப்பவரே. வானம் ஆடையல்ல. திக்குகளே ஆடை (திக்+அம்பரர்- திகம்பரர்).

“சமணம் அரசர்கள் மதம், பெரு வணிகர்கள் மதம்” என்று கூறியவர் “சமண மதம் மேன்மக்கள் மதமாக இருந்திருக்க முடியாது” என்று கூறுகிறார். “இது மக்கள் மதமாக என்றுமே இருந்திருக்க முடியாது” என்றும் கூறுகிறார். சமணத்தில் சாதாரண இல்லறத்தார் கடமைகள் பற்பல கூறப்படுகின்றன. பிற மதம்போல் சமணமும் மக்கள் மதம் என்பதைப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன.

மதுரை பொன்கொல்லன் ஆதன் ஆதன்
உப்பு வாணிகன் வியக்கன்
பணித வாணிகன் நெடுமலன்
கொழு வாணிகன் எளசந்தன்
அறுவை வாணிகன் இள ஆட்டன்

போன்றோர் பழந்தமிழ்ச் சமணக் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர். “நிகம” என்னும் வணிகக் குழுவினரும் குறிக்கப்படுகின்றனர்.

தேவார மூவருக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் கால இடைவெளி 500 ஆண்டுகள் அல்ல. சுமார் 350 ஆண்டுகள்தான். இறுதியில் “வாய்மொழிக் கதைகளில் உண்மை புதைந்திருக்கலாம்” என்று கூறி முடிக்கின்றார். இது வழக்குத் தொடுத்தவர் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வது போன்றது.
புலவர் செ. இராசு
ஈரோடு

காலச்சுவடு

suvanappiriyan said...

//வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி மணிமேகலை சிலப்பதிகாரம் எல்லாம் எழுதினவங்க யாருணே?
அதை அழிக்க எந்த ரப்பரும் ஏன் கிடைக்காம போச்சு?//

நமக்கு சாதகமான நூல்களை வாழ விடுவதும் நமக்கு எதிராக உள்ள நூல்களை ஆற்றில் வீசுவதும் தீயிட்டுக் கொளுத்துவதும் அதிகாரத்திலிருப்போர் செய்து வரும் வழக்கம்தானே! அவ்வாறு கழுவிலேற்றப்பட்ட செய்திகள் தாங்கிய பெரும் பாலான புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம்.

நீங்கள் குறிப்பிட்ட சமண நூல்கள் மக்களிடம் பிரபல்யம் ஆகாமல் பார்பனர்களின் நூற்களான கம்பராமாயணமும் மகாபாரதமும் மக்களிடம் புழக்கத்திலிருப்பதிலிருந்தே தெரியவில்லையா? நீதி நூலான திருக்குறள் பின்னே தள்ளப்பட்டது ஏன்? ராமாயணமும் மகாபாரதமும் முன்னுக்கு கொண்டு வரப்பட்டதும் ஏன்?

@சென்னி

suchee said...

தலை வணங்குகிறேன்.