தீபாவளிக்கு 320 கோடி ரூபாய் சாராய விற்பனைக்கு இலக்கு!
தீபாவளி பண்டிகை விடுமுறை இந்த முறை வார விடுமுறையும் சேர்த்து 3 ந்தேதி முதல் 6ந் தேதி வரை யாக விடுமுறை வருகிறது. போன ஆண்டு ரூ 244 கோடிக்கு சாராய விற்பனை நடந்துள்ளது. அதனை முறியடித்து 320 கோடியாக வியாபாரத்தை காட்ட வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டு மக்கள் நாசமாக போவதற்கு இலக்கு நிர்ணயிக்கும் ஒரே அரசு நமது தமிழக அரசாகத்தான் இருக்க முடியும். இது ஒன்றுக்காகவே இந்த டம்மி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
----------------------------------
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: இப்னு மாஜா 3371
3 comments:
நிச்சயமாக மது எல்லா தீமைக்கும் ஆணிவேராகும், எஸ் டி பி ஐ , பாமக போன்ற கட்சிகளும், சில அமைப்புகளும் தவிர மதுவுக்கு எதிராக பேசுவது இல்லை, பிஜேபி ஆர் எஸ் எஸ் கூட்டமே மதுவால் தான் கூட்டப்படுகிறது
பிஜேபி ஆர் எஸ் எஸ் கூட்டமே மதுவால் தான் கூட்டப்படுகிறது.
------------------------------------------------------
அரைப் பைத்தியம் அசக்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திலேயே மது வழங்கப்பட்ட வீடியோவை இந்த அரை பைத்தியம் பார்க்கவில்லைபோல
Post a Comment