`#ஆப்’ மூலம் ஏதாவது புகார் வந்தால் `
#முதல்வன்’ பட பாணியில், அதிரடி நடவடிக்கை அடுத்த நிமிடமே பாய்ந்துவிடும். அரசு ஊழியர்களை
#கலெக்டர்_நடவடிக்கைஎடுக்க எடுக்க, மாவட்ட நிர்வாகமும் சிறக்கத் தொடங்கியது.
#நாடாளுமன்றத்_தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவைக் குறிவைத்து, தேர்தல் ஆணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
#சைக்கிள்_பயணம், ஊர்வலம் எனத் தேர்தலில் மக்களை வாக்களிக்க வைக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு உத்திகளைச் செய்துகொண்டிருக்க,
#கேரளா_மாநிலம்_கண்ணூர்_மாவட்ட #ஆட்சியர் கடலில் குதித்தார். `என்ன... மாவட்ட ஆட்சியர் கடலில் குதித்தாரா!’ என்று அதிர்ச்சியடைய வேண்டாம். அந்த மாவட்ட ஆட்சியருக்கு, வயது 32 தான் ஆகிறது. நீச்சலில் கெட்டிக்காரர். மக்கள் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரே கடலில் குதித்து இரண்டு கிலோமீட்டர் நீந்தினார்.
`#கேரளாவின்_பீகார்’ என்றுதான்
#கண்ணூர்_மாவட்டத்தைஅழைப்பார்கள். சாதிக் கலவரம், இந்து - முஸ்லிம் மோதல், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மோதல்களால் ரத்தக் களரியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. கேரளாவிலேயே கண்ணூர் மாவட்டத்தில்தான் அரசியல் கொலைகள் அதிகம் நடைபெற்றுள்ளது.
#கேரள_முதலமைச்சர்_பினராயி விஜயனும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரே. பெயருக்கு முன்போ அல்லது பின்போ தாங்கள் பிறந்த ஊரைச் சேர்த்துக்கொள்வது கேரளவாசிகளின் வழக்கம். அப்படித்தான், விஜயன் என்ற பெயருக்கு முன்னர் `பினராயி' என்ற அவரின் ஊர்ப் பெயரும் ஒட்டிக்கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாகச் சர்ச்சைகள் தொடர்பான செய்திகளுக்கு மட்டுமே அடிபட்டு வந்த கண்ணூர் மாவட்டத்தின் முகம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியுள்ளது. காரணமாக இருப்பவர் ஒரு தமிழர். ஆம்... மாவட்ட ஆட்சியர்
#மிர்_முகமது_அலி தான் அவர்.
கண்ணூரில் கலவரம் அடிக்கடி ஏற்படக் காரணமாக இருந்தவற்றில் போலிச்செய்திகள் முதல் இடத்தில் இருந்தன. போலிச்செய்திகளைக் கட்டுப்படுத்தினாலே கலவரங்கள் ஏற்படுவது குறையும் என்று ஆட்சியர் சிந்தித்தார். போலிச் செய்திகளைப் பரப்புவதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளே அதிகம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. எது உண்மை, பொய் எனத் தெரியாமலேயே மாணவர்கள் இந்தத் தவற்றைச் செய்துகொண்டிருந்தனர். போலிச்செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக `சத்தியமேவ ஜெயதே’ என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் 200 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. போலிச்செய்திகள் மற்றும் அவை ஏற்படுத்தும் விளைவுகள்குறித்து பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளிடத்தில் எடுத்துரைத்தனர். இதன் விளைவாக, போலிச்செய்திகள் பரவுவது குறைய, கண்ணூர் மாவட்டத்தில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
கண்ணூரின் பிற்காலச் சந்ததிகளை சிறந்த கல்வியாளர்களாக மாற்றிவிட்டால், பிறகு மோதல் ஏது என்பதைக் கவனத்தில்கொண்டு, பள்ளி டிராப்-அவுட்களையும் குறைக்க, கலெக்டர் முகமது அலி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார்.
கண்ணூரில் உள்ள அத்தனை அரசுப் பள்ளிகளிலும் ஸ்க்ரீன், புரொஜெக்டர், ஸ்பீக்கர் என்று ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பறைகளை ஏற்படுத்தினார். பொதுவாக 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு படிப்பைக் கைவிடும் போக்கு அதிகம் இருந்தது. இதனால், 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற சில மாணவ - மாணவிகளைத் தேர்வுசெய்து கண்ணூரிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். ஒரு நாள் முழுக்க மாணவர்கள் கொச்சியைச் சுற்றிப்பார்த்த பிறகு, மீண்டும் விமானத்திலேயே கண்ணூருக்கு அழைத்து வரப்பட்டனர். 10-ம் வகுப்பு மாணவனுக்கு விமானத்தில் பறப்பது என்பது, பசுமையான நினைவாக அமைந்துவிடும் என்பதால், படிப்பில் நாட்டம்கொள்ள ஆரம்பித்தனர். இந்தத் திட்டம் நல்ல பலன் கொடுத்தது. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவதும் குறைந்தது. பழங்குடி மாணவர்களும் பள்ளிக்கு வந்து உற்சாகமாகப் படிக்கத் தொடங்கினர்.
அடுத்ததாக,
#லஞ்சத்தை_ஒழிப்பதில் கவனம் செலுத்தினார் மிர் முகமது அலி. இதற்காக `we are kannur’ என்ற பெயரில் ஆப் உருவாக்கப்பட்டது.
அரசு அலுவலர்கள் விவரங்கள் அனைத்தையும் இந்த ஆப்பில் நாம் அறிந்துகொள்ள முடியும். லஞ்சம், ஊழல், அரசுப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக இந்த ஆப்பில் புகாரைப் பதிவுசெய்யலாம். மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஆப் செயல்படுவதால், அரசு ஊழியர்களுக்கு உதறல் ஏற்பட்டு பணிகளில் கவனம் செலுத்தினர்.
`ஆப்’ மூலம் ஏதாவது புகார் வந்தால் `முதல்வன்’ பட பாணியில், அதிரடி நடவடிக்கை அடுத்த நிமிடமே பாய்ந்துவிடும். அரசு ஊழியர்களை கலெக்டர் நடவடிக்கை எடுக்க எடுக்க, மாவட்ட நிர்வாகமும் சிறக்கத் தொடங்கியது. மிர் முகமது அலி காட்டிய அக்கறையாலும் சிரத்தையாலும் கலவர பூமியாக அறியப்பட்ட கண்ணூர் மாவட்டத்தில், தற்போது அமைதி தவழத் தொடங்கியுள்ளது.
இன்னொரு விஷயம் தெரியுமா... கேரளாவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே கண்ணூர்தான் முற்றிலும்
#பிளாஸ்டிக்_ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம். இதற்காக `நம்ம நாடு நல்ல மண்ணு' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, வெறும் ஐந்து மாதத்தில் சாதனை படைக்கப்பட்டது.
``நான் செய்த பணிகள் குறைவுதான். இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது’’ என்று அடக்கத்துடன் கூறும் மாவட்ட ஆட்சியர் மிர் முகமது அலி,
#சென்னை அப்துர் ரகுமான் கிரெசன்ட் பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். 2011-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி, மாவட்ட ஆட்சியர் ஆனார்.
#வாழ்த்துக்கள்..