மோடியின் டிஜிட்டல் இந்தியா - தலித்துக்கு தனி பானை
மோடியின் மாநிலமான குஜராத்தின் தலை நகர் அஹமதாபாத்தில் உள்ளது சுரேந்திர நகர். இங்குள்ள அரசு பள்ளிகளில் தலித் ஆசிரியர்களுக்கும், மேல் சாதி ஆசிரியர்களுக்கும் தண்ணீர் குடிக்கும் பானைகள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள பானை உயர்சாதியினருக்கானது. இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள பானை தலித் ஆசிரியர்களுக்கானது. இந்த சட்டங்களை காலம் காலமாக யாரும் மீறுவதில்லை. ஆசிரியர்கள் மட்டுமல்ல மாணவர்களுக்கும் இதே போன்ற சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தவறுதலாக தலித் ஆசிரியர் பரையா உயர் சாதியினர் பானையில் தண்ணீர் குடித்து விட்டார். இதனை பார்த்து விட்ட மேல் சாதியான பட்டேல் இனத்தைச் சேர்ந்த ரதோட் என்ற ஆசிரியர் கோபமாக 'நீ வால்மீகி சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவன். எங்களுக்கான பானையில் நீ எவ்வாறு நீர் அருந்தலாம்' என்று கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த மேல் சாதி மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் அறிவித்து ஒரு நாள் பள்ளியை மூட வைத்துள்ளனர். இதன் பிறகு தலித் ஆசிரியர் மீது எஃ ஐ ஆர் பதியப்பட்டு அவர் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளாராம்.
இது பற்றி கருத்து கூறிய வேதகம் தொகுதி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறும்போது 'தீண்டாமையை ஒழிக்க இந்த அரசு எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மக்களின் மனதில் காதி வெறி புரையோடிப் போயுள்ளது. அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்' என்கிறார்.
மொழி பெயர்ப்பு ; சுவனப்பிரியன்
-------------------------------------------------
நபிகள் நாயகம் சொன்னார்கள்....
"மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(நூல்: அஹ்மத் 22391)
1 comment:
தவறுதான்.ஆனால் இந்த காலத்தில் இப்படி நடக்க முடியுமா ? நீதிமனறம் காவல்துறை என்ன செய்கினறது ? சமூக பிரச்சனைகள் விஷயத்தில் இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகள் அரசு சுயமாக செய்ய வேண்டும் என்பதைக்காட்டுகின்றது. இதில் இந்துமதம் பாரதிய ஜனதாக அரசு என்று பிரச்சனையை எங்கோ திசை திருப்ப வேண்டாம். திருவள்ளுவா் கூட ஆயிரம் சொல்லியிருக்கின்றாா். ஸ்ரீராமா் மலைசாதி மகனான குகனை கட்டித்தழுவி தம்பியாக ஏற்கவில்லையா ? பிற மக்களை காபீர்கள் கொன்று குவித்த அரேபிய தளபதி முஹம்மது குறித்து இங்கு பேசுவது முட்டாள்தனமானது. தகுதியற்றது.
Post a Comment