வெளிநாட்டில் தவித்த இந்திய இளைஞர்கள்..! – அரவணைத்த பாகிஸ்தானியர்..! UAE- ல் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
சிவகுமார், முகமது உஸ்மான் என்ற இந்தியர்களுக்கு ஆஸ்திரேலியாவில் குடியேறும் ஆசை வந்தது.
இதைப் பயனபடுத்திக்கொண்ட நூர் முகமது எனும் டிராவல்ஸ் தரகர், சிவகுமார்,உஸ்மான் ஆகிய தலா 7 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு இவர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு ரிசார்ட்டில் தங்கவைத்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.அப்போது சிவகுமார் உஸ்மான் இருவரிடமும் தலா 50 திர்ஹாம் மட்டுமே (ரூ:979) இருந்திருக்கிறது.
தாங்கள் கைவிடப்பட்டது அறிந்த இருவரும் பசியும் பட்டினியுமாக வேலை தேடி அலைந்திருக்கிறார்கள்.முறையான அனுமதி இல்லாமல் யு.எ.இயில் தங்கி இருப்பது சட்ட விரோதம் வேறு. இந்த நிலையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பவர் ஒரு பாகிஸ்தானியர்.
முகமது அசதுல்லா என்கிற அந்த பாகிஸ்தானியருக்கு சொந்தமான ரிசார்ட்டில்தான் சிவகுமாரையும் உஸ்மானையும் தங்கை வைத்து விட்டுப் போயிருந்தான் அவர்களின் மோசடி ஏஜெண்ட்.
விபரம் அறிந்த அசதுல்லா,சிவகுமார் ,உஸ்மான் இருவருக்கும் தனது ரிசார்ட்டிலேயே அவர்களை தங்கவைத்து இருப்பதுடன் இருவருக்கும் அவரே உணவளித்து காப்பாற்றி வருகிறார்.
குரான் ஆசிரியராகவும் பணியாற்றும் அசதுல்லா, தனது இந்திய நண்பர்கள் மூலம் சிவகுமாருக்கும்,உஸ்மானுக்கும் எதிர்காலத்துக்கான மாற்று ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்.
சக இந்தியனால் ஏமாற்றப்பட்டு அந்நிய மண்ணில் கைவிடப்பட்ட இந்தியர்களை ஒரு பாகிஸ்தானியர் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் இப்போது வைரலாகிக்கொண்டு இருக்கிறது.
தகவல் உதவி
சத்தியம் டிவி
27-08-2019
27-08-2019
அரவணைத்த பாகிஸ்தானியோடு சிவகுமார் மற்றும் உஸ்மான்.
1 comment:
அந்த பாக்கிஸ்தான் காரன் -மட்டும்- பண்பாடு மிக்கவன். 1947 முன்புவரை நமது சகோதரனாக வாழ்ந்தவன். கஜனி முஹம்மது என்ற காடையன் படையெடுத்து வரவில்லையெனில் இன்றும் இவன் நல்ல இந்துவாக வாழ்ந்து வந்திருப்பான். நம்மீது பாசம் கொண்டிருப்பதில் ஆச்சரியம் என்ன ? வாழ்க.
Post a Comment