Followers

Thursday, August 29, 2019

உபியின் பாலியா மாவட்டத்தில் நடந்த நவீன தீண்டாமை!

உபியின் பாலியா மாவட்டத்தில் நடந்த நவீன தீண்டாமை!
மதிய உணவு பரிமாறப்படும் போது எல்லா மாணவ மாணவிகளுக்கும் சில்வர் தட்டில் உணவு பரிமாறப்பட்டு இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு மட்டும் இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. உபியின் பாலியா மாவட்டத்தில் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இதே போன்று முஸ்லிம் சிறுவர் சிறுமிகளை அவமானப்படுத்தும் நோக்கில் பாராபங்கி, மீரட் மாவட்டங்களிலும் நடந்துள்ளது.
ஒன்றுமறியா குழந்தைகளிடம் வீரத்தைக் காட்டும் இந்த கோழைகளை மனித இனத்திலேயே சேர்க்க இயலாது. யோகி ஆதித்யநாத்தின் அரசின் லட்சணம் இதுதான்.
இதை எல்லாம் எதற்கு செய்கிறார்கள்? இவ்வாறெல்லாம் கொடுமை மற்றும் அவமானப்படுத்தினால் வெறுப்புற்று இந்து மதத்துக்குள் முஸ்லிம்கள் வந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள்.
மூடர்களே! உயிரும், உடைமைகளையும் இழப்போம்: பல அவமானங்களையும் சகித்துக் கொள்வோம். உயிரே போனாலும் எங்கள் நம்பிக்கையான ஏக இறைக் கொள்கையை மட்டும் விட்டுத் தர மாட்டோம். இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை நிகழ்த்த வேண்டுமோ அத்தனையையும் நிகழ்த்தி விடுங்கள். நீங்கள் எந்த அளவு எங்களுக்கு கொடுமைகளை கொடுக்கிறீர்களோ அந்த அளவு எங்களின் இறை நம்பிக்கையானது மேலும் வலுப்பெறும்.


1 comment:

Dr.Anburaj said...


தட்டு கொண்டுவர வேண்டியது மாணவர்களின் பொறுப்பாக இருக்கலாமே.
எனக்கு உண்மை நிலை தெரியாது.
அநியாயம் என்பது உறுதியாக தெரிந்தால் முறையாக பாராளுமன்றம் வரை இந்த விசயததை கொண்டு செல்ல வேண்டும்.

ஆவன செய்யங்கள்.

முஸ்லீம்களை நம்பி அரசியில் செய்யும் திமுக கம்யுனிஸ்ட போனறவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும்.ஓவைசி என்று ஒருபன்றி அடிக்கடி உறுமுமே அது என்ன செய்கிறது ?அதனிடம் சொன்னீர்களா ?