Followers

Thursday, August 01, 2019

பிராமணியம் என்றால் என்ன?

இந்த உரையை கேளுங்கள். பிராமணியம் என்றால் என்னவென்று புரிபடும். அது மனிதர்களை
நாய்களாக, அரிசி, பருப்பு, காய்கறியாக பாவிப்பது விளங்கும். அவற்றில் எப்படி மரபணு மாற்று
கூடாதோ அப்படித்தான் சாதிகளிடமும் கலப்பு கூடாதாம்!
சாதி என்பது இயற்கையானது அல்ல, இவரை போன்றவர்களால் செயற்கையாக இடைக் காலத்தில், அதுவும் இங்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.
----------------------------------
'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22
மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.
மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.
'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.


3 comments:

vara vijay said...

I never supported brahminium, i know all the ugly sides of it and am ready to acknowledge it. Suvi will you able to do self crtise islam.

Dr.Anburaj said...

அந்தணா் என்போா் அறவோா் எவ்உயிருக்கும் செந்தண்மை புண்டு ஒழுகுவதால் -குறள்.

இந்து மதததின் நோக்கம் மக்களை பிறாமணர்கள் ஆக்குவதே.

அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆறமுதே பள்ளி எழுந்தருளாயே என்று திருவாசகம் அருள்கின்றது.

பிறாமணா்கள்க தோன்றிய வரலாறு உண்மை. சில கலாச்சார மாண்புகளை காக்க நினைப்பவர்கள் கலாச்சார மாண்புகளைப் பின்பற்றுபவர்களைத்தான் துணை கொள்ள முடியும். பிறாமணா்கள் சில ஆச்சாரம் சில கலாச்சார வாழக்கை முறைகளைப் பினபற்றி வாழ வேண்டியது அவசியம். பிறாமணன சாதி இன்றும் பல மகத்தான மனிதர்களை அளித்துள்ளது.அளித்து வருகின்றது.

நீதிமன்றங்களில் கொலை கொள்ளை திருட்டு விபச்சாரம் போன்ற வழக்கில் குற்றம் சாட்டி சிறைகளில் இருப்பவர்களில் பிறாமணசாதியினா் எத்தனை ? பிற சாதி மக்கள் எத்தனைபோ் ? புள்ளி விபரம் உண்டா ? அலபமாக கூட இருக்காது என்று நினைக்கின்றேன்.ஆக இன்றும் பிறாமண சாதி தன்வீரியத்தை இழந்து விடவில்லை. உயா்ந்த லட்சியம் கொண்ட மனிதர்களை மதிக்க வேண்டியது நமது கடமை.

அப்படி 2000 ஆண்டுகள் உழைத்ததன் பயனாக பிறாமண சாதி உருவாகியுள்ளது.ஒருநாள் பள்ளியில் படித்தால் பிறாமன சாதி உருவாகதாது.

அதை அழி்ப்பது சமூகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். தீண்டாமை -தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு. நல்ல தண்ணி எடுக்கும் கிணற்றில் சாதி தெருவில் நடக்க சாதி என்று தீண்டாமைதான் பிரச்சனை.

தீண்டாமையை யாரும் ஆதரித்துப் பேசவில்லை.எனவே இது ஜனநாயக உரிமை என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

முஸ்லீம்கள் பன்றிக் கறி சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு.

பன்றிகறி சாப்பிடா கலாச்சாரம் முஸ்லீம்களின் ஜனநாயக உரிமை.

ஆனால் இந்துக்களை காபீர் என்று இழிவுபடுத்துவது பெரும் பிழை.

பார்ப்பனன் விதித்த தீண்டாமையை ஒழிக்கப்பட்டு விட்டது.ஆனால் துலுக்கன் இந்துக்களை காபீர் என்று இழிவு செய்யம் தீண்டாமையை என்று ஒழிக்கப் போகின்றோம்.

சுவனப்பிரியன் தங்களது கருத்து என்ன ?

Dr.Anburaj said...

இந்த பிறாமணாள் சொல்வதும் சரிதானே! வாழ்க்கை முறை மாறும் போது இனக்கலப்பு தவிர்க்க முடியாது. நேரில் பேசினால் இந்த பெரியவா் ஒப்புக் கொள்வாா். ஒரு பிறாமணன் ஒரு அருந்ததிய பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? அருந்ததியா் கலாச்சாரமாற்றம் பெற வேண்டும் . பின் சாத்தியமாகும். 3 தலைமுறையாக உயா்ந்த கலாச்சாரத்தை பின்பற்றிய பின் அப்பெண் -குடும்பம் பார்ப்பன சாதியோடு உறவாட முடியும்.முஸ்லீம்களிடமும் இந்த பிரச்சனை உள்ளது.

இசுலாத்தின் ஸ்தாபகா் அரேபிய தளபதி முஹம்மது அவர்களுக்கு குலப்பெருமை இருந்தது. குரைஷி கோத்திரத்தில் பிறந்தவா் முஹம்மது.

”இரண்டு குரைசி இருக்கும் வரை ஆட்சி அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்று அன்னாா்
திருவாள் மலா்ந்துள்ளாா். ஆதாரம் புகாரி 3501.

ஏன் ஆட்சி செய்யும் உயா் தகுதி அன்சாரிகளுக்கு இருக்காதா ? அன்சாரிகளில் தகுதியாவர்கள் யாரும் இல்லை.வருங்காலத்திலும் இருக்க மாட்டாா்கள் எனற முடிவுக்கு ஏன் அவர் வந்தாா்.???
குரான் கூட குரைஷிகளின் பேச்சு வழக்கில்தான் இருக்க வேண்டும் என்று உமா்கத்தாப் முஹம்மதுவின் மாமனாா் இரண்டாம் கலிபா உத்தரவிட்டுள்ளதை ஏன் மறைக்கின்றீர்கள்.

இசுலாத்தைப் பற்றியாவது பொய் சொல்லாமல் இருந்தால் என்ன ?