Followers

Friday, August 02, 2019

சங்கர் என்கிற அப்துல் ஹமீது

புனித பயணமான ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது பல இஸ்லாமியர்களின் ஆசை கனவாக உள்ளது.பல ஆண்டுகள் முயற்சித்தும் இது வரை ஹஜ் செய்ய முடியவில்லையே என்ற கவலை பல பேருக்கு உண்டு.
ஆனால் 5 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்று கொண்ட ஸ்ரீரங்கத்து பிராமணராக சங்கராக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய அப்துல் ஹமீது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் சாதிக்கின் தங்கையை மணம் முடித்தார். இஸ்லாத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அப்துல் ஹமீது உம்ரா புனித பயணத்தை மிக ஆர்வத்துடன் மேற்கொண்டார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட பேச்சாளராகவும் ஆனைமலை வடக்கு தலைவராகவும் மார்க்க பணிகளை செய்து வருகிறார்.இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக விண்ணப்பித்த உடன் இறைவனின் கிருபையால் முதல் ஆண்டில் இந்த வருடம் ஹஜ் செய்ய கூடிய வாய்ப்பை பெற்றார்.
இதோ புனித மக்காவில் ஹஜ் கடைமையை நிறைவேற்ற புறப்பட்டுவிட்டார்.அல்லாஹ் உண்மையான இறையச்சத்தையும் ஈமானின் உறுதியையும் பார்த்து எல்லாவற்றையும் கொடுக்க நாடி விட்டால் கொடுத்து விடுவான் என்பதற்கான சான்று.
சங்கர் என்கிற அப்துல் ஹமீது போல இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்று கொண்ட லட்சக்கணக்கான சகோதர,சகோதரிகளுக்கும், நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்வோம்....


No comments: