Followers

Monday, August 05, 2019

சூரியன் நகர்கிறது என்பது உண்மைதானா!

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தலைப்பில் நான் எழுதிய ஒரு இடுகையை மேலதிக விபரமாக இங்கு தருகிறேன்.
'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33
ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் ஓடுகிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.
தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.
அறிஞர் ஹெர்ஷலின் கண்டுபிடிப்பு!
அறிஞர் ஹெர்ஷவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவியல் அறிஞர் டூயிக் பின்வருமாறு விளக்குகிறார்.
'ஏனைய நட்சத்திரங்களைப் போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத் தொகுதி ஒன்றில் பிரகாசமான வேகா எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையில் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார்.
இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்கு காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார்.
இதை தெளிவாக விளங்குவதற்கு ஹெர்ஷல் ஒரு உதாரணத்தையும் கொடுக்கிறார். ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாக கற்பனை செய்வோம். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வருவதாகவும் உணர்வீர்கள். இந்த தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்தத் திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சந்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிகிறது. இதே போல் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமேயாகும்.
-அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமேன், பக்கம் 297-98
இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் எத்தனை அறிஞர்கள் இரவு பகல் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஆய்வுகளையும் மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்லும் குர்ஆனின் வார்த்தைகள் வெறும் மனிதனின் வார்த்தை என்று எண்ண முடியுமா?
'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
-குர்ஆன் 13:2
'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38
'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5
Posted by சுவனப் பிரியன் at 2:57 PM


11 comments:

vara vijay said...

Suvi, Why there is qubla in a spherical world. How to see qubla from poles and Americas.

How to observe Ramadan fasting in poles and Norwegian countries where sunlight time is almost 24 hrs in half of the months.

Why the islamic calendar is deficient, instead of 365 days, islamic calendar only have 355 days. So the seasons are not able to tract due to this agriculture process cannot happen.

If you are able to print and follow prayertime ahead of a year. Why not do so for month and Ramadan. Why you are still looking at sky crescent. If you want to follow Muhammad sunnah then why don't you follow for prayer timings also. Who gave you wahabi slaves to use scientific knowledge to calculate prayer times, which is not Muhammad sunnah.

I know you will never answer these question logically.

suvanappiriyan said...

https://www.moroccoworldnews.com/2019/05/272426/ramadan-2019-longest-shortest-fasting-hours/

North and South America
Muslims living in the United States and Canada will fast for 16 to 18 hours, depending on their exact location.

In Brazil and Argentina where they, like in Australia are coming up on winter, Muslims will fast for 12 hours.

suvanappiriyan said...

1 ஐஸ்லாந்து 21hrs 03mins
2 ரஷ்யா 20hrs 23mins
3 ஜெர்மனி 20hrs 11mins
4 நார்வே 20hrs 07mins
5 சுவீடன் 20hrs 03mins
6 கனடா 19hrs 15mins
7 இங்கிலாந்து 18hrs 44mins
8 பெல்ஜியம் 18hrs 31mins
9 பிரான்ஸ் 18hrs 5mins
10 அமெரிக்கா 16hrs 22mins


வளைகுடா நாடுகள் : 15 – 16 Hrs



இந்தியா 14hrs 11mins

suvanappiriyan said...

https://nagorenews33.wordpress.com/2015/06/20/22-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

vara vijay said...

Qubla?

vara vijay said...

Norway there is no sunset

Dr.Anburaj said...

அரேபியர்கள் ஜாகிலியாக்கள்.இவர்களிடம் ஆழ்ந்த வானியல் அறிவு இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம்.
கதிரவனை மையமாக வைத்து பல கிரகங்கள் கதிரவனைச் சுற்றி வருவது ஒரு யுனிட் எனறு எடுத்துக் கொண்டால் இதபோன்ற யுனிட்கள் பல கொண்ட ஒரு மெகா கதிரவனை இந்த யுனிட் சுற்றி வருகின்றது.இப்படி பல மண்டலங்கள் உள்ளன.இன்று இவைகள் சக்தி வாயந்த தொலைநோக்கும் கருவிகள் மற்றும் நவீக கருவிகள் கணக்கீடுகள் கொண்டு ஆராயந்து அறியப்படுகின்றது. இவை ஒரு பிரமாண்டமான அறிவியல் உண்மை.

இந்த அறிவையும் 1800 ஆண்டுகளுக்கு முன்பு உண்பதற்கும், கொல்வதற்கும், பெண்களோடு சல்லாபிப்பதற்கும் மட்டும் அறிந்த காட்டறவிகளுக்கும் சம்பந்தம் கிடையாது.

கதிரவன் நீந்துகின்றது என்பது மிதக்கின்றது என்ற பொருளில் அல்லாவின் சிம்மாசனத்தை சுற்றி வருகின்றது என்ற அளவில் .............................
கண்கள் பார்க்கும் காட்சி அவவளவுதான்.
தயது செய்து முஸ்லீம்களையும் பிற மக்களையும் ஏமாற்ற வேண்டாம்.அதுவும் மதத்தின் பெயரால் இறைவனின் பெயரால் ஏமாற்ற வேண்டாம்.விஞ்ஞான உண்மைகளை இடைச்செறுகலாக குரானில் நுழைக்க வேண்டாம். ஒட்டாது.

Dr.Anburaj said...

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5
------------------------------------------
பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான்.
இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம் தாங்கள் விளங்கிக்கொண்டீர்கள். பதிவு செய்ய வேண்டு்ம்.

Dr.Anburaj said...

பதில்
அளிக்க
வக்கில்லையோ ?

MuslimMasteryTamil said...

உவமை மொழியியல் பற்றிய அறிவு இருக்கிறதா?

MuslimMasteryTamil said...

QIBLA is a direction towards which we offer salah(prayer)..
It just denotes a direction not exact view of Kaaba..
For example let me explain
In mecca , there 6 floor building which is above Kaaba.if we pray from there , like it's just direction not exact view