Followers

Sunday, August 04, 2019

விளம்பரத்திற்கு பயன்படும் ராணுவம்:

விளம்பரத்திற்கு பயன்படும் ராணுவம்:
தேதி 4 ஆகி விட்டது. நாடு முழுவதும் உள்ள BSNL ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் இன்னும் போடவில்லை.
30 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மாதத்திற்கு 15 நாள் மட்டுமே செயல்படுகிறது.
இந்திய ரயில்வேயில் மட்டும் 3 லட்சம் பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதாக செய்தி வந்துள்ளது.
நாடு முழுவதும் முன்னணியில் இருந்த 30 க்கு மேற்பட்ட ஸ்டீல் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன..
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 2000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அம்பானியின் ஜியோ 500 கோடி லாபத்தில் இயங்குவது வேறு விஷயம்.
மேற்கண்ட விஷயங்களை எல்லாம் ராகுல் காந்தி தொடங்கி மகேந்திரா நிறுவன தலைவர் வரையும், சாதாரண பத்திரிக்கை முதல் முன்னணி பத்திரிக்கையாளர் வரை கேள்வி எழுப்பினர். காபி டே VG சித்தார்த்தா மரணம் அதற்கான விவாதத்தை உருவாக்க, உடனே காஷ்மீரில் ராணுவம் இறக்கப்படுகிறது. எல்லா சுற்றுலா பயணிகளும் வெளியேற்றப்படுகின்றனர்.
ஏன், எதற்கு திடீரென ராணுவம் என்ற கேள்விக்கு பதிலே இல்லை. ஏன் எதற்கு என்று சொன்னால் தான் விஷயம் "சப்" என்று ஆகிவிடுமே.
தற்போது எல்லோரும் ராணுவத்தை பற்றியே பேசுகிறோம். வெள்ளைக் கொடியுடன் வந்து உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று செய்தி வெளியிடப்படுகிறது. உடனே நாம் கெத்துடா, ராணுவம் டா என்று பேச ஆரம்பித்துவிட்டோம்.
எல்லா ஆட்சி காலத்திலும் அவர்கள் ராணுவ வீரர்கள். அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் மோடியின் ஆட்சியில் மட்டும் தான், அவரின் ஆட்சி குறையை மறைக்க ராணுவம் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்கு இது நினைவிருக்கலாம்.
2019 தேர்தலில் நாட்டின் பொருளாதார சீர்குலைவு மற்றும் ரபேல் ஊழல் பற்றி மக்கள் பேசிவிடக்கூடாது என்பதற்காக, உளவுத் துறை எச்சரித்தும் காஷ்மீரில் 45 ராணுவ வீரர்கள் சாவதை வேடிக்கை பார்த்தது மத்திய அரசு. பின்பு நடந்தவை நமக்கே தெரியும். நாட்டின் பொருளாதாரம் ஊழலைப் பற்றி யாருமே பேசவில்லை. பாகிஸ்தானுக்கு பதிலடி என்று மட்டுமே பேச வைத்தனர். தேர்தல் பிரச்சாரமும் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்த அரசியலே இருந்தது. இந்தியாவும் ஏமார்ந்தது.
அயோக்கியர்களின் கடைசி ஆயுதம் தேசபக்தி என்றார் பெரியார். அந்த பக்தியை தூண்டி விட்டு, கேவலமான ஆட்சி பற்றியும், நாட்டின் பொருளாதார சீர்குலைவு குறித்தும் மறக்கடிக்கிறார்கள்.
யாசிர்

1 comment:

Dr.Anburaj said...

2019 தேர்தலில் நாட்டின் பொருளாதார சீர்குலைவு மற்றும் ரபேல் ஊழல் பற்றி மக்கள் பேசிவிடக்கூடாது என்பதற்காக, உளவுத் துறை எச்சரித்தும் காஷ்மீரில் 45 ராணுவ வீரர்கள் சாவதை வேடிக்கை பார்த்தது மத்திய அரசு. பின்பு நடந்தவை நமக்கே தெரியும். நாட்டின் பொருளாதாரம் ஊழலைப் பற்றி யாருமே பேசவில்லை. பாகிஸ்தானுக்கு பதிலடி என்று மட்டுமே பேச வைத்தனர். தேர்தல் பிரச்சாரமும் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்த அரசியலே இருந்தது. இந்தியாவும் ஏமார்ந்தது.
------------------------------------------------------------------------
துலுக்கனின் பயஙகரவாத செயலால் புல்வாமா படுகொலை அரங்கேற்றப்பட்டது.அரசின் எதிர்வினை அனைவரும் அறிவோம். காங்கிரஸ் அரசு தாஜா செய்யும்.கூஜா தூக்கும்.திரு.மோடி அரசு தூக்கி அடித்துக் கொல்லும். வித்தியாசம் இதுதான். பாக்கிஸ்தானின் மதரசாவை பால கோட் மதரசாவை இந்திய விமானப்படை தூள்ாக்கியது திரு.மோடியின் சாதனை . இயற்கையான எதிர்வினை.
சுவனப்பிரியன் பாக்கிஸ்தானுக்கு சாதகமான விஷ கருத்துக்களை பரப்பி வருகின்றான் என்பதுதான் உண்மை.