Followers

Sunday, August 04, 2019

காஷ்மீருக்கு 'அச்சே தின்' வந்துவிட்டது.

காஷ்மீருக்கு 'அச்சே தின்' வந்துவிட்டது.
காஷ்மீரில் திடீரென பருவநிலை மாறிவிட்டது. இரண்டு நாட்களில் என்னன்னவோ நடந்துவிட்டது.
முழு ஊரடங்கு பள்ளத்தாக்கை முடக்கிவிட்டது. முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரசியல்வாதிகளும் இயக்கவாதிகளும் முடக்கப்பட்டுவிட்டனர்.
காஷ்மீரில் எல்லாவிதமான தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. வழக்கம்போல முதலில் மொபைல் இன்டர்நெட் நிறுத்தப்பட்டது. இறுதியில் லேண்ட்லைன்கூட மண்டையைப்போட்டுவிட்டது என்று கடைசியாக செய்தி வந்திருக்கிறது. அதிகாரிகளின் கைகளில் வாக்கி டாக்கி தரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு, உள்நாட்டு பத்திரிகையாளர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். பொது சாட்சியாக நிற்கவாய்ப்புள்ள எல்லோரும் காஷ்மீரை விட்டு அப்புறப்படுத்தப் பட்டுவருகின்றனர்.
சாட்சியங்களற்ற ஒரு போர் தொடங்கவுள்ளதோ என்று அஞ்சப்படுகிறது. முழு பள்ளத்தாக்கும் முள்ளிவாய்க்காலாகிவிடுமோ என அனுபவம் கொண்டவர்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
இனி உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றும் காஷ்மீர் மண்ணின் மைந்தர்களும் மட்டுமே அங்கே இருக்கப்போகிறார்கள். ஏற்கனவே விழிகளை இழந்தவர்களும் அதில் அடங்கும்.
என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது அல்லது எல்லோருக்கும் தெரியும்.
புரளிகளை நம்பாதீர்கள் என்று தில்லி சொல்கிறது. இனி எது புரளி, எது வதந்தி, எது பொய்ச் சேதி என்று யாருக்குத் தெரியும்? இனி அரசாங்கம் சொல்வதே செய்தி. அரசாங்கம் சொல்வதே பொய். உண்மையை அல்லது பொய்யைச் சொல்ல வேறு யார் இருக்கப்போகிறார்கள்?
ஆனால் இந்த நாகரீக உலகம் இதைக் கண்டும் காணாமலும்போகத்தான்போகிறது.
இந்தியாவிலுள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் கைகட்டி நிற்கிறார்கள். அச்சம் நமது ஆசாரமாகிவிட்டது. The Idea of India என்றெல்லாம் சொன்னவர்கள் இப்போது என்னச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்?
இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இடையிலான சட்டபூர்வ தொப்புள்கொடியான இந்திய அரசியல்சாசனத்தின் பிரிவு 370 எந்த நேரமும் வெட்டப்படலாம். பின்பு அது ஒரு சர்வதேசப் பிரச்சினையாக மாற்றப்படலாம். அப்போது, "வாக்குறுதி கொடுத்த இந்தியா வேறு, இன்றைய இந்தியா வேறு" என்று மோடி - ஷா கூறலாம். உலகம் அதை ஏற்றுக்கொள்ளலாம். It's a new normal.
வலதுசாரி அலைவீசும் உலக அரங்கில் ஈழம், காஷ்மீர், திபெத், குர்திஸ்தான் என எல்லாவற்றுக்கும் ஒரே விதிதானே! ஆசாதி கேட்ட காஷ்மீரிகளுக்கு தண்டனை காத்திருக்கிறது. அது ஆசாதி கேட்கவிரும்பும் அனைவருக்குமான பாடமாக இருக்கவும் போகிறது.
ஆனால் இன்னொன்றையும் சாம்ராஜ்யவாதிகள் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவு இப்படித்தான் அமையும் என்பதும் வரலாறு.
இந்தியாவை ஒற்றையாட்சியாக. ஒற்றை மதத்தின் ஆட்சியாக மாற்றமுயல்வது இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சிதான்.
ஆனால் இப்படி நாம் கத்துவதால் ஏதேனும் பலன் இருக்கப்போகிறதா என்ன? ஜெய் ஸ்ரீராம் பெருங்கூச்சல் முழக்கத்தின் மத்தியில் இது யார் காதிலாவதுப் படப்போகிறதா என்ன?
ஆனால் கத்துவதை நிறுத்தமாட்டோம். அந்த வரலாற்றுப்பிழையை நாம் செய்யமாட்டோம். இதுவரை தங்கள் அரசியல் உரிமைகளுக்காக நின்ற காஷ்மீர் மக்கள் இப்போது உயிர் பிழைத்து வாழ்வதற்கான உரிமைக்காக நிற்கிறார்கள். அவர்கள் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என நாம் குரலெழுப்புவோம்.
எங்கள் மீது இடியே விழுந்தாலும் விழட்டும். ஓ, காஷ்மீரத்து மக்களே, உங்கள் கரங்களை இவ்வேளை நாங்கள் ஆதரவோடு பிடித்துக்கொள்கிறோம். உங்கள் துயரத்தில் பங்கு வகிக்கிறோம்.
காஷ்மீர் பிரச்சினை அமைதியாக தீர்க்கப்படட்டும் என்றே கூறுகிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிவரும் ஆட்டம் நிறுத்தப்பட்டு, இரு தரப்பிலுமுள்ள காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைகளை மையப்படுத்தி ஒரு தீர்ப்பு எழுதப்படவேண்டும் என்று குரல்கொடுக்கிறோம்.
அதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் கைகோர்த்து நிற்போம் - அமைதிக்காக.
ஜனநாயகத்தின் மீதும் சமாதானத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் இந்தியாவின் கோடிக் கணக்கான மக்கள் இந்த நொடியில் வாய்மூடிக்கிடக்கக்கூடாது.
வாய் திறந்திடுங்கள். எந்த அசம்பாவிதமும் நடக்கும் முன்பு உங்கள் கருத்துகளைத் தைரியமாக வெளிப்படுத்துங்கள்.
தீராத துயரத்துடன் -
ஆழி செந்தில்நாதன்
ஆகஸ்ட் 5, 2019

6 comments:

Dr.Anburaj said...

தேசவிரோதிகளின் கூடாரமாக மாறியிருந்தது காஷ்மீா்.

4 லட்சம் இந்துக்களை ஓட ஒட விரட்டிய மதவெறியர்களின் குகையாக மாறியிருந்தது.

இதற்கு துணைபோன சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இந்துக்களின் மனதில் பால் வார்த்துள்ளார் திரு.நரேந்திர மோடி அவர்கள்.

காஷ்மீரில் இந்துக்களின் நலன் காக்கப்பட ஒரே வழி 370 யை தொலைத்து கட்டுவதுதான்.

சாதித்து விட்டாா் ஆர்எஸ்எஸ தொண்டரான நமதுபிரதமா் திரு.மோடிஅவர்கள்.

பொருளாதாரத்தில் காஷமீர் முஸ்லீம்களுக்குப் போக மிச்சம் எச்சில்இலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அளவிற்கு ஜம்மு விற்கும் லடாக்கிற்கும் அளித்து வந்தாா்கள் ஷேக் அப்துல்லா மற்றும் ஆட்சியாளா்கள்.கொள்ளைக்காரா்கள். இவர்கள் செய்துள்ள ஊழல் ப ல ஆயிரம் கோடியைத் தொடும்.ஒரு பெட்டை நாய் ஒன்று சற்று வேகமாக குரைக்குமே அவள்வீட்டுக் காவலில்.ராணுவ பாதுகாப்பில்.
இனி லடாக் தனி யுனியன் பிரதேசம். மத்திய அரச நேரடி நிர்வாகம். பொருளாதார சமூக வளா்ச்சித் திட்டங்கள் அள்ளிக் குவிக்கப்படும்.
காஷ்மீர் -ஜம்முவும் மாநிலஅந்தஸ்தைஇழந்து சட்டசபைஉள்ள யுனியன் பிரதேசம் போல் ஆகிவிட்டது.
மோடி- அமித்ஷா தாங்கள் பெரிதும் வெறுக்கும் திரு.அஜித் தோவல் ஆகிய மூன்று பேர்களின் அற்புதமான ” வியுகம் ” என்றும் வெற்றி பெறும். பெற்றுள்ளது.
அடுத்து பாக்கிஸ்தான் ஆதரவு காலிகளை வேட்டையாடும் படலம் தொடரும். இனி எவனாவது ராணுவம் காவல்துறை தொண்டா்கள் மீது கலலெறிந்து பார்க்கட்டும்.நடப்பதைப் பாருங்கள்.
நேரு வின் முட்டாள்தனங்களால் ஏற்பட்ட கோணல்கள் நிமிா்க்கப்பட்டுள்ளது.பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எந்த காஷமீா் பன்றியும் கோர முடியாது.ஜெய்ஹிந்த.

Dr.Anburaj said...

அம்பேத்கர் வரவேற்பார்! தினமணி

ஜம்மு-காஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாரதிய ஜனதாவால் இன்று நேற்றல்ல, 1980-இல் அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோதே கூறப்பட்டது. எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், நரேந்திர மோடி அரசின் இந்த முடிவில் தவறுகாண முடியாது.
கடந்த 70 ஆண்டுகாலமாக 370, 35 (ஏ) சட்டப் பிரிவு ஜம்மு-காஷ்மீரத்தின் அமைதிக்கோ, வளர்ச்சிக்கோ எந்தவிதத்திலும் உதவவில்லை எனும் நிலையில், அவை மறு பரிசீலனை செய்யப்படுவதிலும், அகற்றப்படுவதிலும் தவறில்லை. எந்தவொருசட்டமும் காலமாற்றத்துக்கும், தேவைக்கும் ஏற்ப திருத்தப்படுவது தவிர்க்க முடியாதது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சந்தர்ப்பவாத அரசியல் குடும்பங்களான அப்துல்லாக்களும், முஃப்திகளும், பிரிவினைவாதத் தலைவர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு, இந்தியாவின் ஏனைய பகுதியில் வாழ்பவர்களின் வரி வருவாய் பயன்படுகிறது என்பதை எத்தனை காலம்தான் சகித்துக்கொண்டிருப்பது? தங்களது குழந்தைகளை லண்டனிலும், நியூயார்க்கிலும் படிப்பதற்கு அனுப்பிவிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள அப்பாவி இளைஞர்கள் கல்லெறிந்து போராட்டம் நடத்தவும், கல்வியைப் புறக்கணிக்கவும் அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் தூண்டிவிடுவதற்கு என்றைக்காவது ஒரு நாள், யாராவது முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு அதைத்தான் செய்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது ஒரு சிறிய பகுதிதானே தவிர, மொத்த மாநிலமும் அல்ல. 22 மாவட்டங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு என்கிற பகுதி மூன்றரை மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், 35 (ஏ) சட்டப்பிரிவின்படி நிரந்தரக் குடிமக்களாக அவர்கள் கருதப்பட்டு அந்தப் பகுதியில் அவர்கள் மட்டுமே அசையா சொத்து வைத்திருக்க முடியும், அரசு வேலை வாய்ப்புப் பெறமுடியும், கல்லூரியில் படிக்க முடியும் என்று சொன்னால், அது எந்த விதத்தில் நியாயம்?

Dr.Anburaj said...

2
காஷ்மீரிகளை இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்வது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்று காஷ்மீர் ஒப்பந்தத்தின்போது பிடிவாதம் பிடித்த ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு இடம் கிடையாது என்று தடுத்த கதை எத்தனை பேருக்குத் தெரியும்?
2002-இல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஃபரூக் அப்துல்லா மாநில அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதன்படி 2026 வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்தவிதத் தொகுதி சீரமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனால், 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் அவையில் வெறும் மூன்றரை மாவட்டங்கள் மட்டுமே உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 46 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் கேலிப் பொருளாக்கி, தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த அப்துல்லாக்களுக்கும், முஃப்திகளுக்கும் இப்போதைய முடிவு, முடிவுகட்டும்.
ஜவாஹர்லால் நேரு என்கிற தனி மனிதரின் பிடிவாதத்தால்தான் 370, 35(ஏ) சட்டப் பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டன. அன்றைய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவரும் சட்ட அமைச்சருமாக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் இந்தப் பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்க மறுத்தார். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல், அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்காரின் உதவியுடன் காஷ்மீர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவும், 370, 35 (ஏ) சட்டப்பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்கவும் வற்புறுத்தி வெற்றி கண்டார் என்பது வரலாறு.
நீங்கள் உங்கள் எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள். உங்கள் பகுதிகளில் நாங்கள் சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்கிறீர்கள். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு நிகரான அந்தஸ்தை காஷ்மீர் பெறவேண்டும் என்கிறீர்கள். அதே நேரத்தில், இந்திய அரசுக்கு உங்கள் பகுதியில் எந்தவித அதிகாரமும் இருக்கக்கூடாது, இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள். இதற்கு நான் ஒத்துக்கொண்டால், இந்தியாவுக்கு துரோகம் இழைத்தவனாக நான் கருதப்படுவேன். இந்தியாவின் சட்ட அமைச்சர் என்கிற முறையில் அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ஷேக் அப்துல்லாவின் முகத்துக்கு நேரே சொன்னவர் பாபா சாகேப் அம்பேத்கர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


Dr.Anburaj said...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற்றம் ஏற்பட்டு அந்த இனம் அழிந்துவிடும் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் போலவே சம உரிமை பெற்ற மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டும், அடித்து விரட்டப்பட்டும் உடைமைகள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள்? சட்டப்பிரிவு 370-இன் அடிப்படையில் சம உரிமை பெற்றவர்கள்தானே காஷ்மீரி பண்டிட்டுகளும்?
இனப் படுகொலை என்பது மதம் சார்ந்ததல்ல, மனிதம் சார்ந்தது. அரசியல் சாசனமும், சட்டமும் ஒருமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும்தானே தவிர, பிரிவினைவாதத்தை அனுமதிப்பதற்காக அல்ல. இதை உணர்ந்து கொண்டால், காஷ்மீரின் தனி அந்தஸ்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முடிவை நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்!

Dr.Anburaj said...

` Thanks a lot.
Please publish all other posts regarding 370 article and Kashmir state.

Dr.Anburaj said...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற்றம் ஏற்பட்டு அந்த இனம் அழிந்துவிடும் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள்,

காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் போலவே சம உரிமை பெற்ற

மண்ணின் மைந்தர்களான
காஷ்மீரி பண்டிட்டுகள் -Hindus

ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டும், அடித்து விரட்டப்பட்டும் உடைமைகள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள்?