Followers

Monday, September 30, 2019

மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் யோகி ஆதித்நாத் ஆட்சி

மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் யோகி ஆதித்நாத் ஆட்சி, டாக்டர் கபீல் கானை குற்றவாளியாக்க யோகியின் பரிவாரங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் Dr. கபீல் கான் குற்றமற்றவர் என விசாரனை அமைப்பு தீர்பளித்துள்ளது.
பாஸிசம் எங்கு தோற்று போகின்றது என்பதை இஸ்லாமிய சமூக மக்கள் உணர வேண்டும். அடுக்குமுறையை எதிர்த்து வாழ்வுரிமையை நிலை நாட்ட கல்வி எப்படி உதவியாக இருந்திருகின்றது என்பதை அறிந்திருப்பது அவசியம்.
முஸ்லீம்களை ஒடுக்குவதில் முன்னனியில் உள்ள மாநிலம் உ.பி, அதிகாரத்தில் இருப்பவர்கள் வைப்பது தான் அங்கு சட்டம், இப்படி பட்ட சூழ்நிலையில் எப்படி ஒரு முஸ்லீமால் யோகி போன்ற முதல்வரை எதிர்த்து வெற்றி பெற முடிந்தது. இத்தனைக்கும் உ.பியில் தமிழகத்தை போல் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இல்லை, பின்னர் எது தான் அவரின் வெற்றிக்கு மூல காரணமாக இருந்திருக்கும் ?
டாக்டர் கபீல் கான் மற்றும் அவரின் மனைவி டாக்டர் ஷபிஸ்தா கானின் கல்வி அறிவுதான் அதிகாரத்தில் இருக்கும் பாஸிச சக்திகளை தோல்வி அடைய செய்துள்ளது.
2017 -ஆம் ஆண்டு உ.பி மாநிலம் கோரக்புரியில் உள்ள BRD மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலின்டர் தட்டுபாட்டால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். இங்கு மருத்துவராக இருந்த டாக்டர் கபீல் கான் தனது சொந்த பணத்தில் 8 ஆக்ஸிஜன் சிலின்டர் வாங்கி பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.
குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் யோகி ஆதிநாத் ஆட்சியின் அவலத்தை உலகிற்க்கு எடுத்துகாட்டியது. இந்த பழியை ஒரு மூஸ்லீமின் மீது போட்டு உ.பி மக்களை ஏமாற்றி விடலாம் என யோகி முடிவு செய்து Dr.கபீல் கானை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Dr.கபீல் கான் சிறையில் இருக்கும் போது மருத்துவரான அவரின் மனைவி டாக்டர் ஷபிஸ்தா கான் இந்த பிரச்சனையை இந்தியன் மெடிக்கல் அசோசியேசனுக்கு (IMA) கொண்டு சென்றார். இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் உ.பி மாநில அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டு, குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உயர் மட்ட குழு விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியது. அதன் பின்னர் Dr.கபீல் கான் சிறையில் இருந்து விடுதலை ஆனார். விசாரனை குழுவில் தேவையான ஆவணங்கள், சாட்சிகள் மூலம் குற்றமற்றவர் என தற்போது தீர்பளிக்கப்பட்டுள்ளார்.
கல்வி எப்படி அடக்கு முறையில் இருந்து காப்பாற்றும் ?
கல்வி அறிவு இருந்தால் அடக்கு முறைக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அறிவு நமக்கு இருக்கும் அல்லது இணைய தளங்களில் இருந்து அந்த விபரங்களை பெற்று கொண்டு செயல்படலாம்.
நீங்கள் படித்து நல்ல வேலையில் இருந்தால் உங்கள் கல்லூரி நண்பர்கள், உடன் வேலை பார்த்தவர்கள் என ஒரு வட்டாரம் உங்களுக்கு இருக்கும். உடன் படித்தவர்களில் சிலர் அரசு அதிகாரிகளாக ஆகி இருக்கலாம், சிலர் காவல் துறையில் , சிலர் சட்ட துறையில் இருக்கலாம், அல்லது உங்களுடன் வேலை பார்ப்பவர்களின் உறவினர்கள் நண்பர்கள், மேற்சொன்ன துறையில் இருக்கலாம், கல்வி கற்றவராக இருந்தால் இப்படி உங்களை சுற்றி ஒரு கல்வியாளர்கள் வட்டாரம் இருந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும் போது இப்படிபட்டவர்களின் உதவியின் மூலமும், உங்களின் கல்வி அறிவின் மூலமும் உங்கள் உரிமையை மீட்டெடுக்க முடியும். இது தான் யோகி போன்றோரின் அடக்கு முறையை தவிடு பொடியாக்க Dr.கபீல் கானுக்கு உதவியது.
முஸ்லீம் பெண்களின் கல்வி அவசியத்தையும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. Dr.கபீல் கான் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், மனைவி கல்வி அறிவு பெற்று இருந்ததால் , கணவனை மீட்கும் வழி முறையை அறிந்து, அடுக்கு முறைகளை முறியடிக்கும் வகையில் சரியான அரசு அமைப்புகளை அனுகி தேவையான சான்றுகளை சமர்பித்து, 9 மாதத்தில் கணவனை சிறையில் இருந்து மீட்டு கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளார்.
கபில் கான் நீதியை நிலை நாட்ட ஊடக வெளிச்சம் தான் உதவியாக இருந்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம், ஊடக வெளிச்சம் ஜுனைத், அஹ்லாக் படுகொலைகளுக்கும் இருந்தது, இந்த சம்பவங்களில் நீதி கிடைத்ததா ? அடக்கு முறையை எதிர்க்க ஊடக வெளிச்சம் உதவியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் கல்வி அறிவுதான் நடைமுறையில் வெற்றியை தேடிதரும்.
கல்வி கற்றோரும் , கல்வி கற்காதவர்களும் சமமாக மாட்டார்கள் என திருக்குரான் அறிவுறை கூறுகின்றது.
முஹமது முஹ்ஸீன் என்ற முஸ்லீம் IAS அதிகாரி மோடியின் ஹெலிகாப்டரையே சோதனை செய்து, மோடியை எதிர்த்து இன்னும் IAS அதிகாரியாக தொடர்கின்றார். Dr.கபீல் கான் உ.பியின் முதல்-அமைச்சர் யோகி ஆதிநாத்தை எதிர்த்து வென்று காட்டியுள்ளார்.
கல்வி கற்ற முஸ்லீம்மும், கல்வி கற்காத முஸ்லீமும் சமமாக மாட்டார்கள், எந்த முஸ்லீம் பாஸிசத்தால் பாதிக்கப்படுகின்றான், எந்த முஸ்லீம் பாஸிசத்தை மண்டியிட வைகின்றான் என்பதை ஆய்வு செய்யுங்கள்
பாஸிசத்தை மண்டியிட வைத்த Dr.கபீல் கான், முஹமது முஹ்ஸீன்IAS சம்பவங்கள் இஸ்லாமிய மக்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும், எனவே இது போன்ற
நம்பிக்கையூட்டும் செய்திகளை இஸ்லாமிய சமூகதில் அதிகம் பரப்புங்கள். இது படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கும் கல்வியின் அவசியத்தையும், தேவையையும் உணரவைக்கும்
கையில் வெரும் டிகிரியை வைத்து கொண்டு உரிமையை வென்றெடுக்க முடியாது, கல்வியை பயனுள்ள வகையில் கற்க வேண்டும், படித்த படிப்பில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும் , படித்தற்க்கு ஏற்ற வேலையில் சேரும் அளவிற்க்கு திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். எந்த துறையில் வேலைக்கு சேர்ந்தாலும் அந்ததுறையின் முன்னோடியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும், இயன்ற வரை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு சாதி, மதம் பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். இப்படி செய்தால் இறைவனின் அருளால் எப்படி பட்ட அடக்கு முறையையும் உங்களால் வெல்ல முடியும்
ஆக்கம்
S.சித்தீக்.M.Tech


குஜராத்தில் மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பெண்கள்!

குஜராத்தில் மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பெண்கள்!
பாஜக பெண்கள் அணியினர் மோடி அரசின் சாதனைகளை தங்கள் முதுகுகளில் எழுதியும் வரைந்தும் அசத்துகிறார்கள்... 
வேலையில்லா திண்டாட்டம், டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பிழப்பு, விவசாயிகளின் தற்கொலைகள் போன்றவற்றையும் இதே ரீதியில் பிரசாரம் செய்வார்களா? பெண்களை மதிக்கும் லட்சணம் இதுதானா? இவ்வாறு பெண்களை காட்சிப் பொருளாக மாற்றித்தான் சாதனைகளை விளக்க வேண்டுமா?




டெப்பி ரோஜர் தற்போது ஆயிஷாவாக வாழ்வை கழிக்கிறார்!

டெப்பி ரோஜர் தற்போது ஆயிஷாவாக வாழ்வை கழிக்கிறார்!
ஆயிஷா மட்டுமல்ல.... இவரது பிரசாரத்தால் இவரது மொத்த குடும்பமும் இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. குடும்பம் மட்டுமல்லாது அக்கம் பக்கத்தவர் 30 பேரை தனது அழைப்புப் பணியால் சத்திய மார்க்கத்தை ஏற்க வைத்துள்ளார் டேப்பி ரோஜர் என்ற ஆயிஷா...
இவரது முயற்சியால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் செய்யும் நல்ல செயல்களின் பலன்கள் ஆயிஷாவையும் சேரும். உலக முடிவு நாள் வரையில் இதன் நன்மைகள் ராயல்டியாக ஆயிஷாவுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்.
---------------------------------------------
“My husband and I worked on my mum and dad, telling them about Islam and they saw the changes in me, like I stopped answering back!”
Her mother soon followed in her footsteps. Marjory Rogers changed her name to Sumayyah and became a devout Muslim. “
She wore the hijab and did her prayers on time and nothing ever mattered to her except her connections with God.”
Aisha’s father proved a more difficult recruit, so she enlisted the help of her newly converted mother (who has since died of cancer). “
My mum and I used to talk to my father about Islam and we were sitting in the sofa in the kitchen one day and he said: “What are the words you say when you become a Muslim?”
“Me and my mum just jumped on top of him.”
Three years later, Aisha’s brother converted “over the telephone - thanks to BT”, then his wife and children followed, followed by her sister’s son.
It didn’t stop there. Her family converted, Aisha turned her attention to Cowcaddens, with its tightly packed rows of crumbling, gray tenement flats. Every Monday for the past 13 years, Aisha has held classes in Islam for Scottish women. So far she has helped to convert over 30. The women come from a bewildering array of backgrounds.
Source: The Guardian Newspaper, England, Thursday 8th May 1997


மாட்டின் மீது காட்டும் பாசத்தில் ஒரு 10 சதமாவது

உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் தலித் என்பதால் மருத்துவ மனைக்குள் அனுமதிக்காமல் சாலையில் குழந்தை பிறக்கிறது.
அதே உத்தர பிரதேசத்தில் ஒரு பசு கன்றை ஈனுகிறது. அந்த பசுவையும், கன்றையும் உபி முதல்வரும் பிரதமரும் சென்று வருடிக் கொடுக்கின்றனர்.
மாட்டை பாசத்தோடு வருடுங்கள் . தவறென்று சொல்லவில்லை. அதே நேரம் மாட்டின் மீது காட்டும் பாசத்தில் ஒரு 10 சதமாவது மனிதர்கள் மீது காட்டலாமே மோடி அவர்களே!



Saturday, September 28, 2019

எனது தாயாரிடம் சொல்லி விட்டேன்.....

"முடிவில் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை எனது தாயாரிடம் சொல்லி விட்டேன். அதன் பின் என்ன நடந்தது?"


பிரபல பாலிவுட் நடிகர் #ஜான்ஆபிரகாம்

பிரபல பாலிவுட் நடிகர் #ஜான்ஆபிரகாம் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவரிடம் “உங்கள் சொந்த மாநிலமான #கேரளாவில், பிரதமர் #மோடிக்கு_ஏன் #செல்வாக்கு_இல்லை?” என்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் ஜான் ஆபிரகாம், “கேரளத்தில், மோடியால் ஏன் இன்னும் ஜெயிக்க முடியவில்லை எனக் கேட்கிறீர்கள். சொல்லப்போனால் #அதுதான்_கேரளத்தின்_அழகு. கேரளாவில் ஒவ்வொரு 10 அடி இடைவெளியிலும் ஒரு #இந்துகோயில்_மசூதி_தேவாலயம் இருக்கும். அவை மூன்றையும் அங்கு பார்க்க முடியும்.
அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக வழிபாடு நடக்கும்
கேரளத்தில் ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் #ஒரு_கம்யூனிஸ்ட்_இருக்கிறான். சமத்துவமான வாழ்க்கை, சமமான பொருளாதார பங்கீடு ஆகியவை தான் எங்களின் நம்பிக்கை. #அந்த_நம்பிக்கையில்_ஜொலிக்கும்_கோயில்_தான்_கேரளா” என அவர் தெரிவித்தார்.


ரியாத்துக்கு மீண்டும் வருகை புரிந்த திருச்சி சிவா!

ரியாத்துக்கு மீண்டும் வருகை புரிந்த திருச்சி சிவா!
சென்ற வியாழக்கிழமை இரவு முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள திருச்சி சிவா எம்பி அவர்கள் ரியாத் மாநகரம் வந்திருந்தார். பணி முடிந்த கையோடு நண்பர் ராஜாவோடு விழா நடக்கும் அரங்கத்துக்கு சென்றோம். சென்ற 10 நிமிடத்தில் சிவா அவர்கள் உரையாற்றத் தொடங்கினார். அதிலிருந்து சில துளிகள்...
'ரியாத்துக்கு இரண்டாம் முறையாக வருகிறேன். பழகிய இடத்துக்கு வருவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. பல நாடுகளில் இது போன்ற கூட்டங்களுக்கு 10 அல்லது 20 பேர்தான் வருவர். ஏனெனில் அவர்களின் வேலைகள் அப்படி. ஆனால் தமிழ் ஆர்வத்தால் தழிழை சுவைக்க வேண்டும் என்ற ஆவலால் இங்கு அரங்கம் நிறைந்து காணப்படுகிறீர்கள்.
திமுக மருத்துவர் அணியானது 400 பேருக்கு மேல் அவரவர் கேம்ப்களில் சென்று சிகிச்சை அளித்த விபரம் எனக்கு உற்சாகத்தை தந்தது. இது பற்றி தளபதியிடமும் பேசுகிறேன். திமுக என்ற பேரியக்கமானது அரசியல் கட்சி என்பதை விட சுய மரியாதை மற்றும் சமூக விழிப்புணர்விலும் முதன்மையாக செயல்படக் கூடியது என்பது இதிலிருந்து விளங்கும். சுய மரியாதை திருமணங்கள் முன்பு நடந்தாலும் அது சட்டமாக்கப்படாமல் இருந்தது. அண்ணா முதல்வராக பதவியேற்றவுடன் சுய மரியாதை திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன. இது போன்று அரசியல் களம் மட்டுமல்ல சமூக சீர்திருத்தங்களிலும் திமுக முனைப்பாக செயல்பட்டு வந்துள்ளது.
நபிகள் நாயகம் பிறந்த நாட்டுக்கு செல்வது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். பெண்களுக்கு சொத்துரிமையை உலகில் முதலில் பெற்றுத் தந்தவர் நபிகள் நாயகம் அவர்கள். பிறகு தமிழகத்திலும் தந்தை பெரியாரால் முன் எடுக்கப்பட்டு இன்று பலரும் பலனடைகின்றனர். இந்திய நாடும் சவுதி அரேபியாவும் தொழில் துறையிலும் நட்புடன் மிக நெருங்கி வருவது வரவேற்கத்தக்கது. இது தொடரவேண்டும்.
தேர்தல் வேலைகள், முப்பெரும் விழாக்கள், பாராளுமன்ற பணிகள் என்று பல பணிகள் காத்துக் கிடப்பதால் அதிக நாள் உங்களோடு செலவிட முடியாமைக்கு வருந்துகிறேன். அடுத்தடுத்து நமது தொடர்புகள் தொடரும்' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
---------------------------------------
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்: யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கணியன் பூங்குன்றனார் அன்றே கூறி விட்டு சென்றுள்ளார். எனவே தான் அந்த வழியில் வந்த சிவா அவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மேல் இந்த அளவு பற்று உள்ளது. நபிகள் நாயகமும் மொழி வெறி, இன வெறி, போன்றவற்றை தனது காலடியில் போட்டு மிதிப்பதாக சொன்னார்கள். இந்த பரந்த உலகத்தின் அனைத்து இடங்களும் எனக்கு இறைவனை தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார்கள். எனவே தான் எந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டாலும் முதல் குரல் முஸ்லிமுடைய குரலாக இருக்கிறது. பிறருக்கு உதவுவதில் அவர்களே முன் நிற்பதன் காரணம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் என்ற எண்ணம் உள் மனதில் இருப்பதால்தான்.





இந்தி சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்க வேண்டாம்!"



"தமிழ்நாட்டில் 50 லட்சத்துக்கும் மேல் முஸ்லிம்கள் உள்ளனர். அதில் 12 லட்சம் பேரே உருது பேசும் மக்கள். பெரும்பான்மையினர் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் எனது ஊர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து போராடி, தாய் தமிழகத்துடன் இணைந்த தமிழர்கள் நாங்கள். குமரி மாவட்டத்தில் உள்ள முஸ்லிமல்லாத மக்களுக்கு எப்படி உருது தெரியாதோ அப்படியே முஸ்லிம்களுக்கும் தெரியாது.
தமிழ்நாட்டில் உருதுவை தாய்மொழியாகக் கொண்டோரின் தமிழ்ப் பங்களிப்பும் சிறப்பானது. கவிக்கோ அப்துல் ரகுமான் அதற்குச் சான்றாக வரலாற்றில் வாழ்கிறார். தமிழ் இலக்கியத்திற்கு புதிய வடிவங்களைத் தந்த ஆளுமை அவர். அவர்போல் எண்ணற்றவர்கள் உண்டு. அவரது தந்தை கவிஞர் மஹதி உட்பட.
அரபு என்பது உலக முஸ்லிம்களுக்கு வேதம் அருளப்பட்ட மொழி. எனவே அதில் ஓதுகின்றனர். ஆனாலும், திருக்குர்ஆன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரியாரின் நண்பர் அப்துல் ஹமீது பாக்கவி அவர்களே திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழாக்கம் செய்தார். குர்ஆனை அரபியில் ஓதுவார்களே தவிர, அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் தமிழில் படித்தே இங்குள்ள முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். மேலும், பள்ளிவாசல்களில் சொற்பொழிவும் வேண்டுதலும் தமிழிலேயே நடக்கிறது.
தமிழில் இலட்சக்கணக்கான கலைச் சொற்களை தொகுத்தளித்த தமிழறிஞர் மணவை முஸ்தபா, திருக்குறளை போற்றிப் பரப்பிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் அரபுப் பெயர்களே. அதற்காக அவர்களின் தமிழ்ப்பற்று கேலிக்குரியதோ கேள்விக்குரியதோ அல்ல. அவர்கள் போலவே தான் நாங்களும்.
வேணுகோபாலன் அவர்களே!
அரபியையும் உருதுவையும் உங்கள் மீது யாரும் திணிக்கவில்லை. அதுபோல் இந்தி சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்க வேண்டாம்!"
(ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் வேணுகோபாலன் அவர்களுக்கு Twitter-இல் நான் அளித்த பதில்) Aloor Sha Navas


30000 பேர் தொழும் வசதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு!

30000 பேர் தொழும் வசதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு!
ஆப்ரிக்க நாடன செனகல்லின் தலைநகர் டகாரில் புதிய பள்ளிவாசல் 17-09-2019 நேற்று வெள்ளிக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
14 ஏக்கர் நிலப் பரப்பில் இப்பள்ளி கம்பீரமாக காட்சியளிக்கிறது. பல இஸ்லாமிய நாடுகள் இந்த பள்ளி நிர்மாணத்திற்காக பொருளுதவி செய்துள்ளன.
ஒரே நேரத்தில் உள் பள்ளியில் 15000 நபர்களும் வெளிப் பள்ளியில் 15000 நபர்களும் தொழுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.





புதிய இஸ்லாமிய சேனல் ஒளிபரப்பு இனி துவங்கும்!

புதிய இஸ்லாமிய சேனல் ஒளிபரப்பு இனி துவங்கும்!
துருக்கி, மலேசியா, பாகிஸ்தான் இந்த மூன்று நாடுகளும் இணைந்து ஆங்கில மொழியில் புதிய தொலைக் காட்சி சேனலை தொடங்க உள்ளன. இஸ்லாமிய உலகுக்கு எதிராக மேற்கத்திய ஊடகங்கள் பரப்பும் தவறான செய்திகளுக்கு இச் சேனல் பதிலடி தரும். இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
President Erdogan, PM Mahatir and myself had a meeting today in which we decided our 3 countries would jointly start an English language channel dedicated to confronting the challenges posed by Islamophobia and setting the record straight on our great religion - Islam.
-Imran Khan -


Thursday, September 26, 2019

20,000 கோடியை இழந்த எல்‌.ஐ‌.சி... என்ன காரணம்?



2 ஆண்டுகளில் 20,000 கோடியை இழந்த எல்‌.ஐ‌.சி... என்ன காரணம்? - அம்பலமான அதிர்ச்சித் தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எல்‌ஐ‌சி நிறுவனத்திற்கு 20,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
எல்.ஐ.சி நிறுவனம் நாட்டில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனம். 1956ம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனந்தின் மொத்த மதிப்பு 31 லட்சம் கோடியாகும். மோடி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அதைச் சரி செய்ய மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அந்த நிறுவனங்களில் பங்குகளை எல்‌ஐ‌சி வாங்க மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து விருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக ஐ‌டி‌பி‌ஐ வங்கியில் பெரும்பான்மை பங்குகளை (21,624 கோடி) 2018 ஜூன் மாதம் வாங்குவதாக எல்‌ஐ‌சி அறிவித்தது. 2017 அக்டோபர் மாதம் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் 5,641 கோடியும், 2018 மார்ச் மாதம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 2,843 கோடியும் முதலீடு செய்தது. தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் 2017ம் ஆண்டு 4,275 கோடியை முதலீடு செய்திருந்தது.
ஆனால் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு தற்போதைய காலகட்டத்தில் மிகக் குறைந்து இருக்கிறது. ஐ‌டி‌பி‌ஐ வங்கியில் 21,624 கோடி முதலீடு செய்த நிலையில் அதன் தற்போதைய மதிப்பு 10,967 கோடியாக குறைந்து இருக்கிறது. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 5,641 கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில் தற்போதைய மதிப்பு 2,979 கோடியாக குறைந்து இருக்கிறது.
இவற்றின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எல்‌ஐ‌சி நிறுவனத்திற்கு 20,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுகுறித்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் ஆனந்திடம் கேட்டபோது "மத்திய பா.ஜ.க அரசு ரிசர்வ் வங்கியை மிரட்டி எப்படி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பெற்றதோ அதேபோல தான் எல்‌ஐ‌சியிடம் இருக்கக்கூடிய பணத்தை வைத்து நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அந்தப் பங்குகளை வாங்கும்படி மிரட்டப்பட்டது.
அந்த பங்குகள் எல்ஐசி-யால் வாங்கப்படும்போது வீழ்ச்சி அடைந்த பங்குகளின் விலை அதிகரிக்கும்; அதன் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக எல்‌,ஐ‌.சியின் பணம் வெளியில் சென்றது. மத்திய பா.ஜ.க அரசின் இந்த வற்புறுத்தல் காரணமாக இரண்டு ஆண்டுகளில் இத்தகைய கடும் இழப்பை எல்‌ஐ‌சி சந்தித்து இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
- சி.ஜீவா பாரதி
தகவல் உதவி
கலைஞர் செய்திகள்
26-09-2019


Wednesday, September 25, 2019

தமிழா - திராவிடமா?

தமிழா - திராவிடமா?
தற்போது தமிழா திராவிடமா என்ற வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. மொழி என்பது மனிதர்கள் ஒருவரை ஒருவர் விளங்கிக் கொள்வதற்காக இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 14:4)
அந்த வகையில் உலகில் மூல மொழிகளால் 6 அல்லது ஏழு மொழிகளை வகைப்படுத்துகின்றர். தமிழ், அரபி, கிரேக்கம், லத்தீன், சமஸ்கிரதம், சீனம் என்று வரிசைப்படுத்துவர். இதில் அவரவர் வசதிக்கேற்ப சில மொழிகள் உள்ளே வரும் சில மொழிகள் வெளியே போகும்.
நான் இங்கு சொல்ல வருவது இன்று உலகில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பல்கி பெருகியிருப்பது அனைத்தும் இது போன்ற மூல மொழிகளில் இருந்து பிரிந்தவையே.
உருது மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். மொகலாயர்கள் இந்தியா, பாகிஸ்தான் முழுமையையும் ஆளுவதற்காக பொது மொழி இருக்க வேண்டும் என்ற ரீதியில் அரபி, பாரசீகம், துருக்கி, சமஸ்கிரதம், ஹிந்தி போன்ற பல மொழிகளை கலந்து உருது என்ற புது மொழியை உருவாக்கினார்கள்.
நமக்கு தெரிந்து தமிழையும், சமஸ்கிரதத்தையும் கலந்து மலையாள மொழி உருவானது. இது போல்தான் தமிழ் மொழியிலிருந்து தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகளும் உருவாகின. இவை எல்லாம் ஒரே மொழிக் குடும்பங்கள். மக்களின் வாழ்க்கை மாற்றங்களினால் சில மாறுதல்களை மொழிகள் பெறுவது இயல்பு. அரபு மொழி பேசுபவர்களில் எகிப்தியரின் அரபும், சிரியர்களின் அரபும், சவுதி களின் அரபு வித்தியாசமாக இருக்கும். சிலருக்கு புரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். எனவே ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்களை பிரித்துப் பார்ப்பது சரியான அணுகு முறைதானா என்று நாம் சிந்திக்க வேண்டும். கீழடி ஆய்வில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம் சார்ந்த மக்களோடு தொடர்புடையாதகவெ இருக்கும். எனவே சீமான் போன்றவர்கள் தங்கள் கொள்கைகளை பரிசீலித்து பொது எதிரி யார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வளவு சிறந்த கல்வியறிவு பெற்ற மக்களை சூத்திரர்களாக மாற்றி அடிமைபடுத்தியது யார்? தமிழனனின் அறிவு சார்ந்த படைப்புகளை கொளுத்தியும் ஆற்றில் எரிந்து நாசமாக்கியதும் யார்? என்ற ஆய்வில் இறங்க வேண்டிய தருணம் இது.
எனது தாய் மொழி தமிழ் எனபதால் மற்ற மொழிகளை இளக்காரமாக பார்க்க வேண்டியதும் இல்லை. என் தாய் மொழிக்கு சற்று அதிக அந்தஸ்தை கொடுக்கலாம். அதே நேரம் மற்ற மொழிகளையும் வெறுக்க வேண்டியது இல்லை. தேவ மொழி என்று எந்த மொழிக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. எனவே தான் அரபியரான நபிகள் நாயகம் மொழி வெறி கூடாது என்பதனை இவ்வாறு கூறுகிறார்.
அரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அரபு மொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை.
நூல் : அஹ்மது 22391
மொழி வெறியின் உச்சத்தில் இருந்த அந்த மக்களிடையே ஒரு அரபியரான நபிகள் நாயகம் இவ்வாறு மொழி வெறியை உடைத்தெறிந்தது மிகப் பெரும் புரட்சி எனலாம்.



பொதுவெளியில் மலம் கழித்த இரு தலித் குழந்தைகள் அடித்துக் கொலை



பொதுவெளியில் மலம் கழித்த இரு தலித் குழந்தைகள் அடித்துக் கொலை
மத்தியில் இரண்டாம் முறையாக பா.ஜ.க ஆட்சியமைத்த நாள் முதற்கொண்டு நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறையும், கொடூரத் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் அதிக அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற மதவாத கும்பல் நடத்தும் தாக்குதல்களால் இதுவரை பலர் தங்களது உயிரையும், உடமைகளையும் இழந்திருக்கின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்திலும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாவ்கேதி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன் ரோஷ்னி மற்றும் அவினாஷ் ஆகிய இரு குழந்தைகள் மலம் கழித்துள்ளனர். இதனைப் பார்த்த ஹக்கிம் யாதவ், ரமேஷ்வர் யாதவ் இருவரும் அக்குழந்தைகளை செல்போனில் போட்டோ எடுத்ததோடு, லத்திகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.
இதனால் மயக்கமடைந்த சிறுவர்கள் அக்கிராம மக்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் இரண்டு பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தைகளைத் தாக்கிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில், “கடவுள்தான் அவர்கள் இருவரையும் கொல்லச்சொன்னார். அதனால், கொன்றோம்” என்று திமிராக பதிலளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுவெளியில் மலம் கழித்ததற்காக 10 வயது குழந்தைகளை அடித்துக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் உள்ள சிறுபான்மையினர், தலித்துகளை குறிவைத்தே இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் அரங்கேறி வருவதும், இதுகுறித்து மத்திய பா.ஜ.க அரசு வாய் திறக்காமல் மெளனம் சாதிப்பதும் பெரும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
தகவல் உதவி
கலைஞர் செய்திகள்
26-09-2019



இது *பரங்கிப்பேட்டை* *முஸ்லீம் ஜனாஜா கூடம்*

இது *பரங்கிப்பேட்டை* *முஸ்லீம் ஜனாஜா கூடம்* சம்மந்தமான... காணொளி உங்கள் பார்வைக்கு...
*இன்ஷாஅல்லாஹ்* *இதுபோன்ற ஒரு வசதியை ஒவ்வொரு ஊரிலும் வல்ல இறைவன் ஏற்படுத்த வாய்ப்பு வசதிகளை உண்டாக்கி தருவானாக!
தற்போதய கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை எல்லா வீடுகளிலும் உள்ளது. முன்பு போல் வீட்டை விசாலமாக கட்ட பொருளாதார வசதி எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. சில வீடுகளில் இறந்த உடலை எப்படி குளிப்பாட்டுவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை நான் நேரிலேயே பார்த்துள்ளேன்.
எனவே வசதியுடையவர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்தாலே இறந்தவர்களை குளிப்பாட்டும் இடம் கட்டி விடலாம். உலக முடிவு நாள் வரை இதன் பலன் இதனை கட்டியவர்களை போய்ச் சேரும். இங்கு சவுதியில் குறிப்பிட்ட பள்ளிகளில் குளிப்பாட்டும் வசதி: பிறகு இறந்த உடலை உறவினர்களை பார்க்க தனி அறை என்று சகல வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். பள்ளி நிர்வாகிகள் இதற்கு ஒத்துழைப்பு தந்தால் அனைத்து ஊர்களிலும் இது சாத்தியப்படும்.




பல ஆய்வுகளுக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்....

பல ஆய்வுகளுக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். எல்லா புகழும் இறைவனுக்கே! இஸ்லாம் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் முழுமையாக நான் இஸ்லாத்திற்குள் நுழைய வில்லை. படிப்படியாக நான் ஒரு சிறந்த முஸ்லிமாக மாறிக் காட்டுகிறேன் இறைவன் நாடினால்.
நான் கிருத்தவனாக இருந்த போது எனது பெயர் டேவிட். தற்போது முஸ்லிமாக மாறியுள்ளதால் எனது பெயரை தாவூது என்று மாற்றிக் கொள்கிறேன்.
நான் முஸ்லிமாக பிறக்கவில்லை. என்னோடு என் இறைவன் இருக்கிறான். நேரான வழியைக் காட்டிய அந்த இறைவனுக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
------------------------------------------
Finally I became a Muslim | The moment of Shahada
Bismillah
In the name of God the Most Gracious ,the Most Merciful
.
Assalamualaikum...
Since I became interested in Islam,
many things in my life have changed.
Actually I am not fully prepared,
but I will try to be a good Muslim step by step.
Although I have previously sinned a lot,
I want to repent my sins and stand in front of Allah.
.
Although I am not a born-Muslim,
I know that Allah is always with me.
Thanks to Him to give me the Signal
and help me to recognize it..
Thanks to Him to show me the right path.
.
There is no God but Allah and Muhammad is His messenger.
لا إله إلا الله محمد رسول الله


பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளது

பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளது
செப்டம்பர் 6 ஆம் தேதி, இரவு 11 மணியளவில், 24 வயதுடைய கல்லூரி மாணவர் முதாசிர் அகமது தர், பாரமுல்லா மாவட்டம், குவாஜா பாக்கில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கி 51 நாட்கள் முடிவடைந்துள்ள போதிலும், அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என்பதால், முதாசிர் தனது குடும்பத்தினரை சீக்கிரம் படுக்கைக்குப் போகுமாறு கூறியுள்ளார்.
குடும்பத்தினர் படுக்கச் சென்ற சிறிது நேரத்திலேயே அவர்களது வீட்டிற்கு முன்பு வாகனங்கள் வரிசையாக வந்து நின்றது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக தட்டியதால், வீட்டில் மூத்தவரான முகமது ரம்ஸாம் தர் (60) கதவினைத் திறந்துப் பார்த்தார். ஆயுதத்துடன் போலீசு சீரூடை அணிந்திருந்த சிலர் அவர்களது வீட்டிற்கு முன் வரிசையாக நின்றிருந்தனர்.
“வீட்டில் உள்ளஆண்கள் அனைவரும் வெளியில் வாருங்கள்” என்று உத்தரவிட்டான் சீரூடை அணிந்திருந்த ஒருவன். வயதானவர் உட்பட ஐந்து ஆண்கள் அவர்கள் முன் நின்றனர்.
“அவர்கள் அதட்டும் தொனியில் எங்களது அடையாள அட்டைகளை எடுத்துவரச் சொன்னார்கள். அவர்கள் சிறப்பு செயல்பாட்டுக் குழு, ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து வந்துள்ளார்கள் என்று உடனே கண்டு கொண்டோம். எங்களது அடையாள அட்டைகளைப் பார்த்தவுடன், என் தம்பியையும், உறவினர் ஒருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினர்” என்கிறார் முதாசிர்.
“எதற்கு ஏறவேண்டும்?” என பெண்கள் கேட்டதும் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது போலீசு. அதோடு நிறுத்தாமல், முதியவர் முகமது ரம்ஸாம் தர் தலையில் ஓங்கி பலமாக அடித்தத்தில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். “அடித்ததில் என் தந்தைக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியது. நாங்கள் கதறினோம். ஆனால் அவர்கள் மற்றவர்களையும் தாக்க ஆரம்பித்தார்கள். நான் என் தந்தையைக் காப்பாற்ற விரைந்தபோது, அவர்கள் (காவல்துறையினர்) என்னை நோக்கி பெல்லட் குண்டுகளால் சுட்டனர்” என்கிற முதாசிர் தற்போது ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
முதாசிர் அருகே அவரது சகோதரி மெக்மூதா அக்தர் (31) அமர்ந்திருந்தார். அவர், “போலீஸ் படைகளின் செயல்கள் எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொன்றுவிடும் விதமாக இருந்தது. என் தந்தைக்கு 11 தையல்கள் போடும் அளவிற்கு அவர்கள் மிக மோசமாக தாக்கியுள்ளனர். அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை” என்றார்.
“பெல்லட் குண்டுகளால் சுட்டபின் அவர்கள் எனது சகோதரன் முதாசிரை சந்துக்குள் இழுத்து சென்று இரக்கமின்றித் தாக்கினர். முதாசிரை விட்டுவிடும்படி நாங்கள் கெஞ்சினோம். ஆனால் அவர்களின் காதுகளுக்கு அவை கேட்கவில்லை” என்கிற மெக்மூதா, அவர்களின் மிருகத்தனமாக தாக்குதலில் இருந்து தானும் தப்பவில்லை என்கிறார்.
முதாசிர் உடம்பில் பல காயங்கள் இருந்தது. “பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளதால் பல குண்டுகளை மருத்தவரால் அகற்ற முடியவில்லை. இருதயப் பகுதியில் குண்டுகள் துளைத்துள்ளது” என்கிறார் மெக்மூதா.
முதாசிருடைய குடும்பத்தினரும், பக்கத்து வீட்டுக்காரர்களும் போலீஸ் படையின் தாக்குதலில் இருந்து முதாசிரை மீட்கப் போராடினர். ஆனால் போலீசார் அவர்களையும் தாக்கியுள்ளனர்.
“போலீஸ்காரர்கள் எங்களது வீட்டிற்கு வந்து எங்களை அழைத்தபோது, இந்த இரவு நேரத்தில் பெண்களையும், குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டு வர முடியாது. ஆனால் காலை வந்துவிடுவோம் என்று நாங்கள் உறுதியாகக் கூறினோம். ஆனால் அதன்பிறகுதான் அவர்கள் எங்களை மிருகத்தனமாகத் தாக்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் ஓட்டுநரான 30 வயது இளைஞர் ஜாவேத் அகமது.
ஜாவேத் அகமதுவின் மனைவி ஷுகுஃப்தா ஜன், படைகளின் தாக்குதலில் இருந்து தனது கணவரை மீட்க விரைந்தபோது, அவரை நோக்கி சுட்டுள்ளனர்.
“பெல்லட் குண்டுகளால் என்னை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள். நான் அலறினேன். சூடான இரும்புக் கம்பிகள் எனது உடலை துளைத்ததுப் போல் உணருகிறேன்” என்கிற ஷுகுஃப்தாவிற்கு, ஆகில் ஜாவேத் என்ற 18 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார்.
“எனது உடலில் கடுமையான வலி உள்ளது. ஆனால், என் மகனுக்கு பால் கொடுக்கமுடியவில்லை என்பதே உடல் வலியைவிட கொடுமையான வலி. ஒரு தாயால்தான் இந்த வலியை உணரமுடியும்” என்கிறார் ஷுகுஃப்தா.
மேலும் அவர், “என் மகன் என்னை எதிர்ப் பார்த்துக் கொண்டிருப்பான். நான் இறந்துவிட்டால் அவனை யார் கவனித்துக் கொள்வது?” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியவர், “போலீஸ்காரர்கள் அப்பாவி மக்களைத்தான் பெல்லட் குண்டுகளால் தாக்குகின்றனர்; சித்திரவதை செய்கின்றனர்; வீட்டிற்குள் புகுந்து துன்புறுத்துகின்றனர். அவர்களது கைகளில் எப்பொழுதும் துப்பாக்கிகள் இருக்கின்றன. ஆகையால் அவர்கள் எங்கள்மீது தங்களது அதிகாரத்தைச் செலுத்துகின்றனர்” என்றார் அவர்.
இது குறித்து முதாசிர் பக்கத்து வீட்டுக்காரர்கள், “பெல்லட், கண்ணீர் புகைக் குண்டுகளால் முதாசிர் குடும்பத்தினர்மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய பிறகு, படையினர் வீட்டிற்குள் புகுந்து சன்னல் கண்ணாடிகளையும், வெளியில் நிறுத்தி வைத்திருந்த கால்டாக்சியையும் உடைத்தனர்”. அதைத் தடுக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒன்பது பேர் காயமடந்தனர்; ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
“நாங்கள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்களது மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் கூறினர். அங்கு எங்களுக்கு நான்கு ஆம்புலன்சையும் ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வெளியில் செல்லும் வேளையில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ்சார் வந்து தடுத்து நிறுத்தினர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் எங்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை” என்கிறார் அகமத்.
“பாரமுல்லா மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி போலீஸாரிடம், நாங்கள் மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும், எங்களை வெளியில் செல்லுவதற்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டார். வலியைத் தாங்கமுடியாமல் முதாசிர் துடிப்பதைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர், “நல்லா அனுபவியுங்கள்!” என்று ஏளனமாக சொன்னார்.
முதாசிர் குடும்பத்தினரைக் காப்பாற்றச் சென்ற இக்பால் லத்தீப் கானின் (28) இரண்டு கண்களிலும் பெல்லட் குண்டுகள் துளைத்துள்ளது. தச்சு வேலை செய்யும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
அவரது கண்களில் இரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரது கண்களைத் தொடவும் பயந்தார்கள். “கண்ணீர் புகைக் குண்டினை அவர்கள் (போலீசார்) நேரடியாக என் தலையில் போட்டதுபோல் உணர்கிறேன். நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்” என்றார் கான், மெல்லிய குரலில்.
“அவரது கண்களில் ஆழமாகக் குண்டுகள் துளைத்துள்ளது. இரத்தம் நிற்காமல் அதிகமாக வெளியேறுவதால் எங்களால் எதுவும் சொல்ல இயலாது. நாங்கள் ஒரு அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளோம். இரண்டு கண்களிலும் குண்டுகள் துளைத்துள்ளதால், இக்பால் லத்தீப் கானின் கண் பார்வை சந்தேகத்திற்குறியதுதான்” என்று கண் மருத்துவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்திருக்கும் பெல்லட் குண்டுகளின் தாக்குதலை, சர்வதேச அமைப்புகள் கண்டித்து வருகிறது. இந்தப் பெல்லட் குண்டு தாக்குதலால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் தங்களது பார்வைகளை இழந்துள்ளனர். ஒரு இரவிலேயே காஷ்மீர் மக்களது வாழ்க்கை தலைகீழாக மாற்றப்படுகிறது.
பள்ளத்தாக்கில், துண்டிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தால் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, முதாசிர் குடும்பம் போன்று பொருளாதார ரீதியாகப் பலவீனமான குடும்பங்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
கால் டாக்சியை நம்பிதான் முதாசிர் குடும்பம் இருக்கிறது. “தகவல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து ஒரு நயா பைசாவைக் கூட நான் சம்பாதிக்கவில்லை. இந்தக் கொடூரச் சம்பவம் ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமானதாக்குகிறது” என்கிற ஜாவேத் தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக பெரிதும் சிரமப்படுகிறார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு கான் மற்றும் தர் குடும்பத்தினர், இறுதித் தீர்வு போராட்டம்தான் என்று நம்புகின்றனர். “எத்தனை காலங்களுக்குதான் அவர்களுடைய மிருகத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் பொறுத்துக் கொள்ள முடியும்? காரணங்கள் ஏதுமின்றி நாங்கள் பாதிப்புக்குள்ளாகிறோம்” என்று கானை மருத்துவமனையில் சந்திக்க வந்த உறவினர் மன்சூர் அகமது கூறுகிறார்.
“இந்த நடவடிக்கைகளால் எப்படி அவர்களால் அமைதியை கொண்டுவர முடியும்? அவர்கள் எங்களைத் தவறான செயலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு அமைதியைக் கொண்டு வர விரும்பவில்லை. காஷ்மீரில் எப்போதும் அமைதியின்மையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் அக்மத்.
வினவு செய்திப் பிரிவு
நன்றி : தி வயர்
தமிழாக்கம் : ஷர்மி



Tuesday, September 24, 2019

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கு பலத்த அடி....


மலேசியாவில் வேலைக்கு சென்று பாதிக்கப்பட்ட ஜீவிதா....

மலேசியாவில் வேலைக்கு சென்று பாதிக்கப்பட்ட ஜீவிதா தாயகம் புறப்பட்டுவிட்டார்:
அயராமல் உதவி செய்த கலெக்டர் IAS தினேஷ் ஆலிவர், சித்திக் மற்றும் பாட்ஷா அவர்களுக்கு நன்றி.
ஜீவிதா கடந்து வந்த பாதை:
Link 1
Link 2
இந்த செய்தி பற்றி தெரியாத நண்பர்கள் புரிதலுக்கு
Reporting by: Fathima Shaznah


கீழடி குறித்த ஆய்வு முடிவுகள்

கீழடி குறித்த ஆய்வு முடிவுகள் வந்தவுடன் இங்கு பலர் 'தமிழனின் பெருமை' என எழுதித் தள்ளுகிறார்கள். முகநூல் பக்கங்கள் முழுவதுமாக கீழடி பெருமையில் மூழ்கிக் கிடக்கிறது.
ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை, வரலாற்றைப் பற்றி பெருமைப்பட என்ன இருக்கிறது? கீழடியில், நமது பழந்தமிழ் முன்னோர்கள் சிறந்த நாகரிகத்துடன் இருந்தார்கள் என்று நாம் பெருமைப்பட்டால், அதன் பின் சூத்திரப் பட்டம் சுமந்த நமது சமீபத்திய முன்னோர்களின் முட்டாள்தனத்துக்காகத் தலை குனியவும் வேண்டுமல்லவா?
கீழடியில் வழிபாட்டுச் சிலைகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை, இதனால் தமிழன் பகுத்தறிவோடு வாழ்ந்தான் என் பெருமைப்பட்டால்... மலம் சுமக்கும் சாமியார்களின் காலை கழுவிக் குடிக்கும் இன்றைய தமிழனின் நிலை குறித்து வெட்கப்பட வேண்டுமல்லவா?
கீழடி காட்டும் மற்றும் ஒரு அற்புதம், வரலாற்றுக்கும் தமிழ் இலக்கியத்திற்குமான தொடர்பு. மற்ற மொழிகளில் பெரும்பாலும் இலக்கியங்கள் முழுக்க கற்பனையாகவே இருக்கும். ஆனால், சங்க இலக்கியம் சொல்லும் வரலாறு இன்றைய கீழடியோடு பொருந்திப் போவதை ஆய்வாளர்கள் கண்டு வியக்கின்றனர்.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
இது சங்க நூலாம் குறுந்தொகைப் பாட்டு. தலைவன் தலைவியைப் பார்த்து, "என் தாயும், உன் தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று கலந்துவிட்டன." என்று பாடுகிறான்.
அன்றைய திருமணம் சாதி பார்க்கவில்லை என்பதை இந்தப் பாடல் நமக்கு நிரூபிக்கிறது. இதை நினைத்து அன்று சாதியற்று இருந்தோம் என்று பெருமைப்படுவதா? அல்லது, இன்றும் சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகளை நினைத்து வெட்கப்படுவதா..?
இப்படி பட்டியல் இட்டால் அது நீண்டு கொண்டே போகும்....
உண்மையில் அறிவுள்ள சமூகம் வரலாற்றைக் கொண்டு பெருமைப்படவோ, சிறுமைப் படவோ செய்யாது. மாறாக, நேற்றோடு இன்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து நாளை குறித்துத் திட்டமிடும். நேர்மையாக கீழடி சொல்கின்ற நேற்றை, இன்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தால், நாம் இன்று இருக்கும் இழிநிலையும், அதிலிருந்து நாளை நாம் கடந்து செல்ல வேண்டிய வெகு தொலைவும் புலப்படும்.
பொதுவாக வரலாற்று ஆய்வுகள் நேற்றை விட நாம் இன்று எந்த அளவு வாழ்க்கைத் தரத்தில், பண்பாட்டுத் தளத்தில் உயர்ந்துள்ளோம் என்பதாகத் தான் அமையும். ஆனால், நம்முடைய தமிழர் வரலாற்று ஆய்வு மட்டும் நேற்றைவிட இன்று நாம் எவ்வளவு கீழ் நிலையில் உள்ளோம் என்று ஆய்வதாகவே இருக்கிறது.
கீழடியில் கிடைக்கின்ற பானை எழுத்துக்கள் அன்றைய தமிழனின் கல்வி அறிவை விளக்குகிறது. அதே தமிழன் தான் பின்னாளில் முற்றுமாகக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறான். இன்று பல போராட்டங்களுக்குப் பிறகு படிக்கத் தொடங்கி இருக்கிறான்.
இந்த மாறுபட்ட நிலைகளை உள்வாங்கி, இடையில் நாம் கல்வியற்றவர்களாக இருந்ததற்கு என்ன காரணம்? அந்த நிலை ஏற்படுத்திய நம் பகைவர்கள் யார்? என்று உணர்ந்தால் தான் இன்று இருக்கும் நிலையை நாம் தக்க வைத்துக் கொள்ளவும், இதிலிருந்து நாம் முன்னேறிச் செல்லவும் முடியும்.


பச்சப்பட்டியை சுற்றியுள்ள பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

நேற்று இரவு சேலத்தில் பெய்த கனமழையால் பச்சப்பட்டியை சுற்றியுள்ள பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பச்சப்பட்டி மர்க்கஸில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு டீ மற்றும் காலை உணவு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது, மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மழைநீரினால் நோய் தொற்று பரவாமல் இருக்க இறைவன் நாடினால் நாளை இலவச மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ய இருக்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சேலம் மாவட்டம்
24.9.19


யூதர்களும், இஸ்ரேலும் தானேயொழிய முஸ்லிம்களோ இஸ்லாமோ அல்ல'

பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் ப்ரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் 'உலகின் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது யூதர்களும், இஸ்ரேலும் தானேயொழிய முஸ்லிம்களோ இஸ்லாமோ அல்ல' என்று கூறியுள்ளார்.

உண்மையை இவ்வாறு பொதுவில் போட்டு உடைத்ததால் இவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தங்களுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களை தீர்த்துக் கட்டுவதே பாசிசத்தின் வேலை. இனி இவர் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்வது நல்லது.


வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி அவர்களே!

சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மக்களை அடித்துக் கொல்லும் தேச விரோத இந்துத்வாக்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசு 'மரண தண்டனை ' சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தானுக்கு அடுத்து மேற்கு வங்கம் இச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.
வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி அவர்களே!
A strong message with a stringent law
With the anti-lynching Bill, the Mamata Banerjee government aims to set an example on how to check such crime with an iron fist. Although Rajasthan was the first state to come up with such a Bill, the Bengal government has gone a step ahead and introduced the provision of capital punishment in case of death, making the Bill more stringent. The state government is thus sending a zero-tolerance message against lynching.
The Bill says that anyone found guilty of publishing, communicating and disseminating any offensive material, either physically or electronically, leading to an incident of lynching, shall be liable to imprisonment up to one year and fine up to Rs 50,000.
indianexpress
24-09-2019