Followers

Tuesday, September 17, 2019

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு

சுலைமான் அஹமத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அருகில் வரும் போது மூன்று திருடர்கள் வழி மறிக்கின்றனர். சுலைமானிடம் இருந்த பணத்தையும் பொருளையும் அபகரிக்க முனைகின்றனர். அங்கு நடந்த போராட்டத்தில் கொள்ளையர்களால் சுலைமான் சுடப்பட்டு இறக்கிறார். பணத்தையும், உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறது அந்த கொள்ளைக் கும்பல்.
கொலைகாரர்களில் ஒருவன் பிடிபடுகிறான். காவல் துறையினர் அந்த கொள்ளைக் கூட்டத்தில் ஒருவனான ருகியே என்ற திருடனை பிடித்து நீதி மன்றத்துக்கு அழைத்த வந்தபோது சுலைமானின் தாய் அவனை கட்டி அணைத்து 'உன்னை நான் வெறுக்கவில்லை: உனக்காக பரிதாபப்படுகிறேன்: இறைவன் உனக்கு நேர் வழியைக் காட்ட பிரார்த்திக்கிறேன். இஸ்லாம் எங்களுக்கு அதைத்தான் போதிக்கிறது. நீ தண்டனை முடிந்து திரும்பி வரும்போது திருந்திய மனிதனாக வா.. அது பொதும் எனக்கு. உன்னிடமிருந்து வேறு எதுவும் எனக்கு தேவையில்லை'
என்று கண்ணீர் மல்க கூறினார். இந் நிகழ்வை அங்கிருந்த அனைவரும் உணர்ச்சி வசத்தோடு பார்த்து வியந்தனர்.
-----------------------------------------------
அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.
அல்குர்ஆன் 2:178, 179
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் 5:45
அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்
அல்குர்ஆன் 17:33


No comments: