Followers

Saturday, September 21, 2019

குவாண்டனோமோ சிறை அதிகாரி ஹோல்ட் ப்ரூக்ஸ்.....

குவாண்டனோமோ சிறை அதிகாரி ஹோல்ட் ப்ரூக்ஸ்.....
மிகக் கடுமையான சித்தரவதைகள் நடத்தப்படும் இடமான குவாண்டனோமோ சிறை அதிகாரியாக பணிபுரிந்தவர் ஹோல்ட் ப்ரூக்ஸ். உலகிலேயே அதிக பாதுகாப்புடன் கைதிகளை பராமரிக்கும் சிறைச் சாலைதான் குவாண்டனோமோ. ஈராக், பாலஸ்தீன் என்று தங்கள் நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பல நாட்டு கைதிகளை அமெரிக்கா இந்த சிறைச் சாலையில்தான் அடைக்கும்.. இங்குள்ள சிறைவாசிகளாக உள்ள முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுவதும், ரமலானில் நோன்பு பிடிப்பதும் அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்வதும் சிறை அதிகாரியான ஹோல்ட் ப்ரூக்ஸூக்கு ஆச்சரியத்தை தந்தது. இவ்வளவு நல்ல மனிதர்களுக்காக இத்தகைய கொடூரமான குவாண்டகாமோ சிறை என்று வியந்தார். முஸ்லிம்களை பற்றியும் முஸ்லிம்களை இந்த அளவு மாற்றிய குர்ஆனைப் பற்றியும் ஆய்வு மேற் கொள்ள தொடங்கினார்.
சிறையில் மொராக்கோ தேசத்தவரான அஹமத் எர்ராசிதி என்பவரிடம் இஸ்லாம் பற்றி நிறைய விவாதித்தார். இசை, குர்ஆன், குற்றவியல் சட்டங்கள் என்று தினமும் அவரிடம் பல விவாதங்கள் செய்தார். அஹமத் எர்ராசிதி அல்கய்தாவுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு பிறகு குற்றம் நிரூபணமாகாததால் விடுதலை செய்யப்படுகிறார். சிறை அதிகாரியான ஹோல்ட் ப்ரூக்ஸூக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதற்காக இந்த சிறைச் சாலைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்ததோ? 
குர்ஆனின் வார்த்தைகள் புரிந்து கொள்ள மிக இலகுவாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ஹோல்ட் ப்ரூக்ஸ். “The Quran is the simplest book in the world to read. It doesn’t have magic. It doesn’t contradict itself. It’s simply an instruction manual for living.”
அவரின் மனதை மாற்றியது குர்ஆன். 2003 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு குவாண்டனாமோவிலிருந்து சிறை பொருப்பிலிருந்து விலகுகிறார். 2005 ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்தும் விலகுகிறார். இதற்குள் பல பிரச்னைகள். புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு வரும் வழக்கமான பிரச்னைகள். இவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிகிறார். அடுத்தடுத்து நடந்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் மதுவை நாடுகிறார். இஸ்லாமிய நடவடிக்கைகளிலிருந்து தூரமாகிறார். மன நிம்மதியின்றி அலைந்து திரிந்து திரும்பவும் இஸ்லாத்தை நோக்கி வருகிறார். குடிப்பதையும், சிகரெட் பிடிப்பதையும் விடுகிறார். ஐந்து நேரமும் தொழுகையை ஆரம்பிக்கிறார். இன்று வரை சிறந்த இஸ்லாமியனாக வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு தனது அனுபவங்களை 'ட்ரைடர்' என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டார்.
தகவல் உதவி
All americam Muslim.com
மொழி பெயர்ப்பு: சுவனப்பிரியன்



1 comment:

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா் அன்வா் ஷேக் ஈரானைச் சோ்ந்த அலிசேனா போன்றவர்கள் அரேபியவல்லாதிக்க இயக்கமான இசுலாத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து விமா்சிக்கின்றார்களே!அதை வெளியிட்டு ரசிப்பதுதானே.