Followers

Wednesday, September 11, 2019

எச்சரிக்கை பதிவு :

எச்சரிக்கை பதிவு :
08 - 09 - 2019
துபாய் - சார்ஜாவில் பணிபுரியும் இரண்டு நபர்களிடையே வாக்குவாதம். குடிபோதையில் தகராறு செய்யும் ஒருவர். மல்லு கட்ட முடியாமல் ஆவேசத்தில் எங்கு மிதிக்கிறோம் என்றே தெரியாமல் கழுத்தில் மிதித்து தள்ளுகிறார் ஒருவர் _ முடிவில் மிதிபட்டவர் மரணம்'
இரண்டு பேருமே மனைவி மக்களுக்கு காக நாடு துறந்து சம்பாதிக்கும் நோக்கோடு வந்தவர்கள்\ இப்போது ஒருவர் மது பழக்கத்தால், மற்றவர் பொறுமை இல்லாததால் தமது வாழ்வை தொலைத்து குடும்பத்தையும் நிர்கதி ஆக்கி விட்டனர்.
இதில் வேதனையான மற்றொரு விடயம் என்னவென்றால்
இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறை விலக்காமல் வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதை வீடியோவும் எடுத்த மற்ற சக ரூம் மேட்ஸ் அனைவர் மீதும் கொலை குற்றம் சாட்டபட்டு இப்போது அனைவரும் ஜெயிலில் -
தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கை என்னவென்றால் குடி தன் குடியை ' மட்டுமல்ல ஊரான் குடியையும் கெடுக்கும்.
வேடிக்கை பார்த்தவன் நமக்கேன் வம்பு
நம் வேலையை பார்ப்போம்
நம் குடும்பத்தை பார்ப்போம் என்று நினைத்தவனும்
இப்போது சிறையில்...
துபாய் சிறையில் மாட்டினால் ... ???
உங்களுக்கே தெரியும் நான் என்னத்த சொல்ல ???
வாட்ஸ்அப் பதிவு
----------------------------------------------------
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219
மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
அல்குர்ஆன் 5:90


No comments: