Followers

Sunday, September 15, 2019

ஒரு பாகிஸ்தானிய பெண்ணும் ஒரு கொரிய ஆணும்...

ஒரு பாகிஸ்தானிய பெண்ணும் ஒரு கொரிய ஆணும் சந்தித்து கொள்கின்றனர். பாகிஸ்தானிய பெண் அந்த கொரிய இளைஞனுக்கு உருது மொழியை கற்றுக் கொடுத்தால்...... ?
இனி வீடியோவை பாருங்கள்.
-----------------------------------------
தாய் தந்தைக்கு அம்மா அப்பா என்போம் தமிழர்களாகிய நாம். உருதுவிலும் கொரியாவிலும் தாய் தந்தைக்கு அம்மா, அப்பாதான் என்ற செய்தி எனக்கு புதுமையாக இருந்தது.
அடுத்து உருது மொழியானது பாரசீகம், ஹிந்தி, அரபி, துருக்கி போன்ற பல மொழிகளின் கூட்டுக் கலவை. ஹிந்தி மொழி கூட சமஸ்கிரதம், உருது, பாரசீகம், அரபி போன்ற மொழிகளின் கலவையே. இந்த கலவை மொழியைத்தான் இந்தியாவை இணைக்கும் மொழி என்று அமித்ஷா புருடா விட்டுக் கொண்டுள்ளார். 


1 comment:

Dr.Anburaj said...

நாம் தொழில்நிமித்தம் ஒரு உறவினா் திருமண நிகழ்சசி போன்றகாரியங்களுக்காக மும்பை டெல்லி செல்ல வாய்ப்பு வரலாம் .அன்று மொழி என்பது பெரும் பிரச்சனையாக இருக்கும்.

நான்எம் எஸ்சி படித்தவுடன் ஆந்திராவில் உள்ள அனந்தப்புரில் உள்ள oil technology research centre ல் இளநிலை விஞ்ஞானி பதவிக்கு விண்ணப்பித்தேன்.நோ்முகத்தோவில் கலந்து கொள்ள சென்ற போது அது மிகவும் சிறிய ஊர்.ஒலை வேய்நத கடைகள்தான் பஜாரில் இருந்தது. அங்கு கூலி வேலை தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் கூட இந்தியில் என்னிடம் பேச முயன்றனா். எனக்கு தமிழ் ஆங்கிலம்தான் தெரியும்.அவர்களுக்கு அது தெரியாது. 3 நாள் நான் சாப்பிடவும் காபி குடிக்கவும் பஜாருக்கு செல்லும் போது எல்லாம் ஊமையாக நடித்தேன். ஹிந்தி கூட தெரியாதை என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். அதுபோல் மும்பைக்கு பணியிடை பயிற்சிக்காக போனபோதும் கல்லூர வளாகத்தை விட்டு வெளியே வந்தால் மொழிப்பிரச்சனை கடுமையாக இருந்தது. இந்தியில் உளறி கொட்டினால் அவனவன் ஓடி வந்து உதவுகிறான். ஊமையாக நின்றால் என்ன உதவி தேவை என்பதை கூட மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

அரபு நாடுகளில் கூட ஹிந்தி தெரிந்தால் வேலை பெற வேலை அனுமதி பெற மிகவும் உதவியாக இருக்கும் என்று நண்பா் சொன்னதாக நினைவில் உள்ளது.

இந்தியாவில் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இந்தி கற்றதனால் கேரளமக்கள் அரபு நாடுகளில் அதிக வேலை வாய்ப்புக்களை பெறுகின்றார்கள்.இந்திய ராணுவத்திலும் Non- commission Officer post அதிகாரிகள் அல்லாத பணியிடங்களில் இந்தி மொழிதான் பயிற்சி மொழியாக உள்ளது.
இன்று கேரளத்து மக்கள் . கடற்படை விமானப்படை தரைப்படை அதிகாரிகளாக அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள்.கேரள முஸ்லீம் ஒருவா் தரைப்படையில் துணை தளபதி நிலையில் கிழக்கு பிராந்திய தளபதியாக பணியாற்றி வருகின்றாா்.

குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட நமது உள்துறை அமைச்சா் சரியாகத்தான் சொன்னாா்.
01. தாய்மொழியில் சிறப்பாக படித்து பேசப் பழகுங்கள்
02. இந்தி மொழியையும் படித்துக் கொள்ளுங்கள்.

இந்திய முஸ்லீம்கள் அனைத்து நாடுகளிலும் தொழில் செய்கின்றார்கள். பலமொழிகளையும் கற்கும் ஒரு சமுதாயத்திற்கே இது சாத்தியம்.

அரபு நாடுகளில் இந்தி மொழியின் செல்வாக்கை நன்கு உணா்ந்த சுவனப்பிரியன் போன்ற ஒருவா் இப்படி ஒரு பதிவை போடுவது விஷத்தனம்.

உங்கள் மனதில் தாய் நாட்டின் மீது இந்திய நாட்டின் மீது இவ்வளவு துவேசம் ஏன் ?????????
மு்ஸ்லீம்களுக்கு தாய் மண் விசுவாசம் என்பது கிடையாதே. அரேபியாவிற்கும் சக முஸ்லீம்களுக்கும்தான் விசுவாசம்-அவன் பாக்கிஸ்தான் பயங்கரவாதியாக இருந்தாலும் சரி.