Followers

Saturday, September 07, 2019

அப்படி என்ன பிழை செய்தார் #தஹில் #ரமணி ?

#ஃபாஸிஸத்திற்கு பலியாகி இருக்கிறார் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி #தஹில் #ரமணி....
இனிமேலும் அவர் நீதிபதியில்லை....
அப்படி என்ன பிழை செய்தார் அவர்?
மோடி #குஜராத் முதல்வராக இருந்த போது காவல் பணியிருந்த மாநில காவல் அதிகாரியாக இருந்த பாக்ரா என்பவரை IAS தகுதிக்கு உயர்த்துகிறார்..
அந்த ஆள் தகாத் நகர துணை கமிஷனர்..
#கோத்ரா_ரயில் எரிப்பில் நடந்த இஸ்லாமியர் படுகொலைக்கு பிந்தைய கலவரத்தை களத்தில் நின்று தடுக்க வேண்டிய காவல் அதிகாரி பாக்ரா....
ஆனால் அவனும் அவனோடு சேர்ந்த காவலர்களும் பரிவாரங்களோடு சேர்ந்து #பில்கிஸ்_பானு என்ற #கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தில் 7 பேரை #கொலை செய்ததோடு #அப்பெண்ணை_பிணங்களுக்கு ஊடாக போட்டு மாறி மாறி #கற்பழித்தனர்...
குஜராத் விசாரணை நீதிமன்றம் காவல் அதிகாரி பாக்ராவும் மற்றவர்களும் குற்றமற்றவர் என விடுதலை செய்தது... குஜராத் உயர்நீதி மன்றத்தில் செய்யப்பட்ட முறையீடும் அதே திசையில் விசாரணையை துவக்க, பயந்து போன பில்கிஸ் பானு
உச்சநீதிமன்றம் வழக்கை மோடி அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது...
இப்போது வழக்கு நம்ம #நீதிபதி
#தஹில்_ரமணியிடம்...
துரிதமாய் நேர்மையான விசாரணை ..
இறுதியில் அனைவருக்கும் #ஆயுள்_தண்டனை.. தடயங்களை அழிக்க காவல் அதிகாரிகளுக்கு துணை போன இரண்டு #மருத்துவர்களுக்கும்_ஆயுள்_தண்டனை ...
ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு மோசடியால் IPS பதவி உயர்வு பெற்ற பாக்ரா மத்திய காங் அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்....
கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு #குஜராத் அரசு 50 #லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்...உடனடியாக #அரசு_பணி வழங்கவும் ஆணையிட்டார்...
அது அப்போது. இப்போது சர்வாதிகாரத்தில் மோடி
வஞ்சம் தீர்க்கும் இடத்தில் மோடி.....
வஞ்சிக்கப்பட வேண்டிய இடத்தில் ரமணி...
75பேருக்கு #தலைமை_நீதிபதியாக இருப்பவரை..இரண்டே நீதிபதிகள் கொண்ட #மேகாலயாவிற்கு மாற்றி உத்தரவு வருகிறது
உச்சநீதிமன்ற #கொலிஜியத்திடமிருந்து...
#பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பல் பிடுங்கப்பட்ட தலைமை நீதிபதி #கோகாய்க்கு வேறென்ன இயலும்.
இத்தனைக்கும் #ரமணிதான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிலேயே #சீனியர். 2020 ஓய்வு பெற வேண்டியவர் இப்போதே வெளியேறுகிறார்....
நல்லதுதான் உச்சநீதிமன்றத்திற்கு வந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கோகாய் போல் மோடியின் அடிமையாகி
#குப்பையாய்_மாறுவதற்கு பதில்
குட் பை சொல்லி மும்பை போய் #மானத்தோடு
வாழ்வதே மேல்....
வாழ்த்துக்கள் ரமணி மேடம்
#மானம் பெரிதென பதவி விலகியதற்கு..
-ஜான் கென்னடி


1 comment:

Dr.Anburaj said...

பல நீதிபதிகள் அரசுக்கு எதிராகபல தீர்ப்களை வழங்கியுள்ளனா்.இதெல்லாம் ஒரு நீதிபதியின் வாழவில் சகஜம். இதற்கு மோடி வஞ்சம் தீர்த்து விட்டார என்பது கேவலமான ஈனத்தனமான பதிவு. இது முற்றிலும் நீதிமன்றத்திற்குட்பட்ட விசயம்.இதில் நமது பிரதமா் தியாக தீபம் தொணடு செய்து உயா்ந்த உள்ளம் கொண்ட திரு.நரேநத்ரமோடிஅவர்களுக்கும் சம்பந்தமில்லை.

பாக்கிஸ்தான் பிரதமா் தூண்டுதல்பேரில் சுவனப்பிரியன் இப்படி இந்தியாவின் தலைவர்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றாா் என்பதுதான் உண்மை.