Followers

Monday, September 30, 2019

மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் யோகி ஆதித்நாத் ஆட்சி

மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் யோகி ஆதித்நாத் ஆட்சி, டாக்டர் கபீல் கானை குற்றவாளியாக்க யோகியின் பரிவாரங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் Dr. கபீல் கான் குற்றமற்றவர் என விசாரனை அமைப்பு தீர்பளித்துள்ளது.
பாஸிசம் எங்கு தோற்று போகின்றது என்பதை இஸ்லாமிய சமூக மக்கள் உணர வேண்டும். அடுக்குமுறையை எதிர்த்து வாழ்வுரிமையை நிலை நாட்ட கல்வி எப்படி உதவியாக இருந்திருகின்றது என்பதை அறிந்திருப்பது அவசியம்.
முஸ்லீம்களை ஒடுக்குவதில் முன்னனியில் உள்ள மாநிலம் உ.பி, அதிகாரத்தில் இருப்பவர்கள் வைப்பது தான் அங்கு சட்டம், இப்படி பட்ட சூழ்நிலையில் எப்படி ஒரு முஸ்லீமால் யோகி போன்ற முதல்வரை எதிர்த்து வெற்றி பெற முடிந்தது. இத்தனைக்கும் உ.பியில் தமிழகத்தை போல் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இல்லை, பின்னர் எது தான் அவரின் வெற்றிக்கு மூல காரணமாக இருந்திருக்கும் ?
டாக்டர் கபீல் கான் மற்றும் அவரின் மனைவி டாக்டர் ஷபிஸ்தா கானின் கல்வி அறிவுதான் அதிகாரத்தில் இருக்கும் பாஸிச சக்திகளை தோல்வி அடைய செய்துள்ளது.
2017 -ஆம் ஆண்டு உ.பி மாநிலம் கோரக்புரியில் உள்ள BRD மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலின்டர் தட்டுபாட்டால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். இங்கு மருத்துவராக இருந்த டாக்டர் கபீல் கான் தனது சொந்த பணத்தில் 8 ஆக்ஸிஜன் சிலின்டர் வாங்கி பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.
குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் யோகி ஆதிநாத் ஆட்சியின் அவலத்தை உலகிற்க்கு எடுத்துகாட்டியது. இந்த பழியை ஒரு மூஸ்லீமின் மீது போட்டு உ.பி மக்களை ஏமாற்றி விடலாம் என யோகி முடிவு செய்து Dr.கபீல் கானை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Dr.கபீல் கான் சிறையில் இருக்கும் போது மருத்துவரான அவரின் மனைவி டாக்டர் ஷபிஸ்தா கான் இந்த பிரச்சனையை இந்தியன் மெடிக்கல் அசோசியேசனுக்கு (IMA) கொண்டு சென்றார். இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் உ.பி மாநில அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டு, குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உயர் மட்ட குழு விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியது. அதன் பின்னர் Dr.கபீல் கான் சிறையில் இருந்து விடுதலை ஆனார். விசாரனை குழுவில் தேவையான ஆவணங்கள், சாட்சிகள் மூலம் குற்றமற்றவர் என தற்போது தீர்பளிக்கப்பட்டுள்ளார்.
கல்வி எப்படி அடக்கு முறையில் இருந்து காப்பாற்றும் ?
கல்வி அறிவு இருந்தால் அடக்கு முறைக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அறிவு நமக்கு இருக்கும் அல்லது இணைய தளங்களில் இருந்து அந்த விபரங்களை பெற்று கொண்டு செயல்படலாம்.
நீங்கள் படித்து நல்ல வேலையில் இருந்தால் உங்கள் கல்லூரி நண்பர்கள், உடன் வேலை பார்த்தவர்கள் என ஒரு வட்டாரம் உங்களுக்கு இருக்கும். உடன் படித்தவர்களில் சிலர் அரசு அதிகாரிகளாக ஆகி இருக்கலாம், சிலர் காவல் துறையில் , சிலர் சட்ட துறையில் இருக்கலாம், அல்லது உங்களுடன் வேலை பார்ப்பவர்களின் உறவினர்கள் நண்பர்கள், மேற்சொன்ன துறையில் இருக்கலாம், கல்வி கற்றவராக இருந்தால் இப்படி உங்களை சுற்றி ஒரு கல்வியாளர்கள் வட்டாரம் இருந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும் போது இப்படிபட்டவர்களின் உதவியின் மூலமும், உங்களின் கல்வி அறிவின் மூலமும் உங்கள் உரிமையை மீட்டெடுக்க முடியும். இது தான் யோகி போன்றோரின் அடக்கு முறையை தவிடு பொடியாக்க Dr.கபீல் கானுக்கு உதவியது.
முஸ்லீம் பெண்களின் கல்வி அவசியத்தையும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. Dr.கபீல் கான் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், மனைவி கல்வி அறிவு பெற்று இருந்ததால் , கணவனை மீட்கும் வழி முறையை அறிந்து, அடுக்கு முறைகளை முறியடிக்கும் வகையில் சரியான அரசு அமைப்புகளை அனுகி தேவையான சான்றுகளை சமர்பித்து, 9 மாதத்தில் கணவனை சிறையில் இருந்து மீட்டு கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளார்.
கபில் கான் நீதியை நிலை நாட்ட ஊடக வெளிச்சம் தான் உதவியாக இருந்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம், ஊடக வெளிச்சம் ஜுனைத், அஹ்லாக் படுகொலைகளுக்கும் இருந்தது, இந்த சம்பவங்களில் நீதி கிடைத்ததா ? அடக்கு முறையை எதிர்க்க ஊடக வெளிச்சம் உதவியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் கல்வி அறிவுதான் நடைமுறையில் வெற்றியை தேடிதரும்.
கல்வி கற்றோரும் , கல்வி கற்காதவர்களும் சமமாக மாட்டார்கள் என திருக்குரான் அறிவுறை கூறுகின்றது.
முஹமது முஹ்ஸீன் என்ற முஸ்லீம் IAS அதிகாரி மோடியின் ஹெலிகாப்டரையே சோதனை செய்து, மோடியை எதிர்த்து இன்னும் IAS அதிகாரியாக தொடர்கின்றார். Dr.கபீல் கான் உ.பியின் முதல்-அமைச்சர் யோகி ஆதிநாத்தை எதிர்த்து வென்று காட்டியுள்ளார்.
கல்வி கற்ற முஸ்லீம்மும், கல்வி கற்காத முஸ்லீமும் சமமாக மாட்டார்கள், எந்த முஸ்லீம் பாஸிசத்தால் பாதிக்கப்படுகின்றான், எந்த முஸ்லீம் பாஸிசத்தை மண்டியிட வைகின்றான் என்பதை ஆய்வு செய்யுங்கள்
பாஸிசத்தை மண்டியிட வைத்த Dr.கபீல் கான், முஹமது முஹ்ஸீன்IAS சம்பவங்கள் இஸ்லாமிய மக்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும், எனவே இது போன்ற
நம்பிக்கையூட்டும் செய்திகளை இஸ்லாமிய சமூகதில் அதிகம் பரப்புங்கள். இது படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கும் கல்வியின் அவசியத்தையும், தேவையையும் உணரவைக்கும்
கையில் வெரும் டிகிரியை வைத்து கொண்டு உரிமையை வென்றெடுக்க முடியாது, கல்வியை பயனுள்ள வகையில் கற்க வேண்டும், படித்த படிப்பில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும் , படித்தற்க்கு ஏற்ற வேலையில் சேரும் அளவிற்க்கு திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். எந்த துறையில் வேலைக்கு சேர்ந்தாலும் அந்ததுறையின் முன்னோடியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும், இயன்ற வரை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு சாதி, மதம் பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். இப்படி செய்தால் இறைவனின் அருளால் எப்படி பட்ட அடக்கு முறையையும் உங்களால் வெல்ல முடியும்
ஆக்கம்
S.சித்தீக்.M.Tech


1 comment:

Dr.Anburaj said...

நானும் பத்திரிகையில் படித்தேன்.தவறு நடந்துள்ளது.

திரு.கான் ஒரு முஸ்லீம் என்பதற்காக அல்ல.

அரசு பணியில் எப்போதும் உயா் மட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு கீழ்மட்ட அதிகாரிகளை பொறுப்பாக்குவது வாடிக்கை.தந்திரம். நயவஞ்சகம்.

இங்கும் அதுதான் நடந்துள்ளது.

சுவனப்பரியன் தாங்களுக்கு பாஸ்போரட் ரேசன் கார்டு ஆதார்காட்டு போன்ற பலவும் வழங்கியுள்ள இந்திய நாட்டின் ராணுவத்தின் தரைப்படையில் உள்ள Lt.General அந்தஸ்தில் கேரளத்தை சோ்ந்த முஸ்லீம் ஒருவா் பணியாற்றி வருகின்றாா்.

மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.மறந்து விடாதீர்கள்.
முஸ்லீம்களுக்கு தேசபற்று கூடாது. கூடும் என்று குரானோ நபியோ சொல்லவில்லை என்று சம்சுதீன் ஆஸ்மி என்ற காடையன் அறிவிப்பு அளித்துள்ளான்.வாடஸ்அப்பில் உலாவருகின்றது.தங்களுக்கு வேண்டுமானால் தாய்நாடு அந்தஸதில் அலலாவின் தூதர் பிறந்த மண் இருக்கலாம்.பிற பகுதிகள் அனைத்தும் போரிட்டு வீழ்த்த வாய்ப்பு கிடைக்காத நாடுகள் தாம்.அதுதான் இசுலாம் கற்றுத்தந்த பாடம்.