Followers

Saturday, September 14, 2019

வாசிப்போர் தானும் புரிந்து... அடுத்தவர்க்கும் அறிவுருத்தனும்:



வாசிப்போர் தானும் புரிந்து... அடுத்தவர்க்கும் அறிவுருத்தனும்:
தற்போதைய இந்திய பொருளாதாரா சூழலைப் பற்றி சர்வதேச ஊடகங்களும் கவனித்து எழுதத் தொடங்கி விட்டன!
இது பொருளதார மந்த நிலை அல்ல!
உண்மையில், இது பொருளாதார வீழ்ச்சி என்றே குறிப்பிடவேண்டும்!
மும்பை பங்குசந்தையில் மூன்றே நாட்களில் சுமார் இரண்டு இலட்சம் கோடி நட்டத்தை சந்திப்பதும்,
சுமார் 28000 இலட்சம் கோடிகளை அந்நிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெறுவதும்,
பெரும் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை குறைப்பதும்,
பெருமுதலீட்டு தொழில்நிறுவனங்கள்கூட தாக்குப்பிடிக்கமுடியாது நிறுவனங்களை மூடுவதும்,
அனைத்தையும் கடந்து ரிசர்வ்வங்கி உபரி நிதியை விடுவிப்பதும் ....
பொருளாதார வீழ்ச்சியின் குறியீடாகும்!
இதன் தாக்கம் மற்றும் விளைவுகளை உடனடியாக மக்களால் உணரமுடியாது!
எனினும், இதன் விளைவுகளை
நாம் முழுமையாக உணரும்காலம் அதி விரைவில்!
ஒரு படி அரிசிக்கு பெரும் விலை கொடுத்துவாங்கும் நிலையில் இருப்போம்!
புரியாத பொருளதார குறியீடுகளில் பேசுவதைவிட,
நமது அன்றாட தேவையில் இந்த நிலையை அவதானிக்க இயலும்!
ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் ஒரு நாள் உணவுசெலவு ரூபாய் 60 ல் இருந்து 150 வரை ஆகும்!
இப்போது அது குறந்தது ரூபாய் 250 முதல் 350 வரை தேவைப்படுகிறது!
இதை வழக்கமான விலையேற்றம் என்று நாம் நினைத்துக்கொள்கிறோம்!
இது பொருட்களின் விலையேற்றத்தால் அல்ல!
மாறாக, இது நமது பொருளாதார வீக்கமே காரணம் என்பதை நம்மால் உணர இயலாது!
வளரும் நாடு...
திடீரென இருமடங்கில் உயர் மதிப்பு ரொக்கத்தை வெளியிட்டு, மக்கள் புழக்கத்தில் திணிக்கிறதெனில்,
அந்த பணம் தன் மதிப்பை கனிசமாக இழந்து வருகிறது என்றே பொருள்!
தற்கால கோமாளி அரசு, இந்த நிலையை உணர்ந்து...
கடந்த ஆட்சியாளர்கள்மீது பழியை சுமத்தி விளையாடுவதை நிறுத்திவிட்டு...
உடனடி நடவடிக்கையில் பொருளாதாரத்தை மீட்க முன்வரவேண்டும்!
இதன் இரண்டு முக்கிய காரணிகளான
ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பின் விளைவுகளை சரிசெய்ய முன்வரவேண்டும்!

-Venkatesh Ayyalu


No comments: