விநாயகர் சதுர்த்தி விழாவால் ஒரு கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
இரு குழுவாக பிரிந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடியதால் சேலத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் திலிப் குமார் அடித்து கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்த திருநாவுக்கரசு, சூர்யா, சரவணன் போன்றோரை காவல் துறை கைது செய்துள்ளது.
சில நாட்கள் முன்பு தான் திருப்பூரில் நன்கொடை தர மறுத்ததால் தொழிற்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தை படித்திருப்போம்.
மேலும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற 20 வயது இளைஞர் தினேஷ் என்பவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். விநாயக சதுர்த்தி வசூல் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம்.
இவ்வாறு விநாயக சதுர்த்தி விழாவானது இந்து இளைஞர்களின் உயிரை எடுக்கும் விழாவாக உருவெடுத்துள்ளது. முன்பெல்லாம் சிறிதாக பிள்ளையாரை செய்து அவரவர் சொந்த செலவில் நீர் நிலைகளில் கரைப்பதுதான் வழக்கமாக இருந்தது. என்று இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இதனை கையில எடுத்ததோ அன்று தொடங்கியது பிரச்னை. இறந்து போன அந்த உயிர்களை இந்துத்வாக்கள் திருப்பி தருவார்களா? பொன் ராதா கிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றவர்கள் வாய் மூடி மவுனமாக இருப்பதேன். இறந்தவர்கள் அவர்கள் சாதி இல்லை என்பதாலா?
பார்பனியம் சுகமாக வாழ்வை கழிக்க இவ்வாறு ரத்தம் சிந்தும் இந்த அறியாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை நினைத்து கோபப்படுவதா? அல்லது பரிதாபப்படுவதா?
No comments:
Post a Comment