அஸ்ஸாமில் குடியுரிமை மறுக்கப்பட்ட ஏறத்தாழ 15 இலட்சம் இசுலாமியர்களுக்கு கட்டப்பட்டு வரும் சிறைச்சாலை!
ஒரு சிறைச் சாலையில் 3000 பேர் வரை அடைக்கப் போவதாக செய்தி வெளி வந்துள்ளது.
இதன் மூலம் இஸ்லாமியரின் எண்ணிக்கையை குறைக்க மோடி அரசு முயற்சிக்கிறது. இது மேலும் பல பிரச்னைகளை உருவாக்கும். அநீதி இழைக்கப்பட்ட இளைஞர்கள் தீவிரவாத குழுக்களில் சேர இது வழி வகுக்கும். மற்றொரு காஷ்மீரை உருவாக்குகிறார்கள். பல கோடி ரூபாய்கள் இந்திய அரசின் பொருளாதாரம் இம்முகாம்களுக்கு செலவழிக்கப்படும். உணவு, சுகாதாரம், கழிப்பிட வசதி, கல்வி போன்றவற்றை நமது இந்திய அரசுதான் இனி கவனிக்க வேண்டும். இல்லை என்றால் ஒட்டு மொத்த மக்களும் போராட்டத்தில் குதிப்பர். கோபத்தில் உள்ள 15 லட்சம் பேரை சமாளிப்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல.
ஜிஎஸ்டி வரி யால் இழப்பு
பண மதிப்பிழப்பால் பொருளாதார இழப்பு
வங்கி கடன்களால் பொருளாதாரம் இழப்பு
காஷ்மீர் 370 நீக்கத்தினால் இழந்த பொருளாதாரம்
அடுத்து 15 லட்ச அஸ்ஸாமியர்களால் பாதிப்படையக் கூடிய பொருளாதாரம்.
இதை எல்லாம் மேலும் மேலும் வரி கட்டி சாமான்ய மக்களான நாம்தான் சுமக்கப் போகிறோம்.
இந்த அரசுக்கு ஆலோசனை கொடுக்க சரியான நபர்கள் இல்லை. கத்தியும், அரிவாளும் கொண்டு பழக்கப்படுத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் குண்டர்களால் இந்திய பொருளாதாரம் இனி நிமிர வழியில்லை. ப.சிதம்பரம் போன்றவர்களை வஞ்சமாக சிறையில் அடைத்தாகி விட்டது. பொருளாதார மேதைகள் ஒவ்வொருவராக பதவி விலகுகின்றனர். இது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல.
அஸ்ஸாமில் இது வரை உள்ளவர்கள் அனைவருக்கும் குடியுரிமை கொடுத்து வருங்காலத்தில் கள்ள குடியேற்றம் நிகழாமல் எல்லைகளை பாதுகாப்பதுதான் ஒரு சிறந்த அரசு எடுக்கும் முடிவாக இருக்கும். ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரிலிருந்து ஆலோசனை பெறும் ஒரு அரசிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. நாடு நாசமாவதை நாம் வருத்தத்தோடு நமது கண்ணால் பார்க்க மட்டுமே முடியும்.
ஆக்கம் சுவனப்பிரியன்.
No comments:
Post a Comment