Followers

Monday, September 16, 2019

மதங்களை கடந்த மனித நேயம்...

மதங்களை கடந்த மனித நேயம்...
குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் உள்ளது சமர் குண்டா கிராமம். இக்கிராமத்தில் திப்பு குரைஷி, பானு சங்கர் பாண்டே என்ற இரு கூலி தொழிலாளிகள் நண்பர்களாக பழகியுள்ளனர். இந்த நட்பானது 40 வருடங்கள் தொடர்ந்துள்ளது.
இடையில் ஒரு விபத்தில் பாண்டேயின் கால் விபத்தில் சிக்கி முறிவு ஏற்படுகிறது. சொந்தங்கள் இன்றி தவித்த பாண்டேயை தனது வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார் குரைஷி. இவர்கள் வீட்டில் நிகழும் அனைத்து விழாக்களிலும் பாண்டேயும் குடும்ப உறுப்பினரைப் போல கலந்து கொள்வார். 3 வருடங்களுக்கு முன்பு நோய் வாய் பட்டு குரைஷி இறந்து விடுகிறார். பாண்டே மிகவும் மன வேதனை படுகிறார்.
குரைஷியின் மகன்கள் அபு, நசீர், ஜூபைர் என்ற மூவரும் தாத்தா என்று அழைத்து அவரை அன்பாக கவனித்துக் கொண்டனர். தற்போது உடல் நலக் குறைவால் பாண்டேயும் இறக்கிறார். ஜூபைரின் மகன்கள் மூவரும் பாண்டேயை அவரது இந்து மத முறைப்படி அடக்கம் செய்ய எண்ணுகின்றனர். எனவே பிராமனரை அழைத்து வந்து ஒரு இந்து எப்படி அடக்கம் செய்யப்படுவாரோ அவ்விதமே அடக்கம் செய்துள்ளனர் ஜூபைரின் மகன்கள்.
ஜூபைரின் குடும்பமானது இஸ்லாமிய நடைமுறைகளை ஒன்று விடாமல் பின்பற்றும் குடும்பமாகும், நோன்பு, தொழுகை என்று இஸ்லாமிய சட்டங்களை மூன்று மகன்களும் கடை பிடித்து வருபவர்கள். இருந்தாலும் தங்கள் தந்தையின் நண்பரை அவரது மத நம்பிக்கையின்படியே அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியுள்ளனர். இஸ்லாமும் இதைத்தான் போதிக்கிறது. கட்டாயமாக எவரையும் மத மாற்றம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதனை ஜூபைரின் குழந்தைகள் உணர்ந்ததாலேயே அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்துள்ளனர்.
மோடியும் அமீத்ஷாவும் இந்த மக்களின் நல்லெண்ணத்தை கண்டு வெட்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகளாக பழகி வரும் மக்களை பிரித்து அதன் மூலம் அரியணையில் அமர தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சிறந்த செய்தியை ஜூபைரின் மகன்கள் சொல்லியுள்ளனர்.


No comments: