Followers

Wednesday, September 25, 2019

தமிழா - திராவிடமா?

தமிழா - திராவிடமா?
தற்போது தமிழா திராவிடமா என்ற வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. மொழி என்பது மனிதர்கள் ஒருவரை ஒருவர் விளங்கிக் கொள்வதற்காக இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 14:4)
அந்த வகையில் உலகில் மூல மொழிகளால் 6 அல்லது ஏழு மொழிகளை வகைப்படுத்துகின்றர். தமிழ், அரபி, கிரேக்கம், லத்தீன், சமஸ்கிரதம், சீனம் என்று வரிசைப்படுத்துவர். இதில் அவரவர் வசதிக்கேற்ப சில மொழிகள் உள்ளே வரும் சில மொழிகள் வெளியே போகும்.
நான் இங்கு சொல்ல வருவது இன்று உலகில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பல்கி பெருகியிருப்பது அனைத்தும் இது போன்ற மூல மொழிகளில் இருந்து பிரிந்தவையே.
உருது மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். மொகலாயர்கள் இந்தியா, பாகிஸ்தான் முழுமையையும் ஆளுவதற்காக பொது மொழி இருக்க வேண்டும் என்ற ரீதியில் அரபி, பாரசீகம், துருக்கி, சமஸ்கிரதம், ஹிந்தி போன்ற பல மொழிகளை கலந்து உருது என்ற புது மொழியை உருவாக்கினார்கள்.
நமக்கு தெரிந்து தமிழையும், சமஸ்கிரதத்தையும் கலந்து மலையாள மொழி உருவானது. இது போல்தான் தமிழ் மொழியிலிருந்து தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகளும் உருவாகின. இவை எல்லாம் ஒரே மொழிக் குடும்பங்கள். மக்களின் வாழ்க்கை மாற்றங்களினால் சில மாறுதல்களை மொழிகள் பெறுவது இயல்பு. அரபு மொழி பேசுபவர்களில் எகிப்தியரின் அரபும், சிரியர்களின் அரபும், சவுதி களின் அரபு வித்தியாசமாக இருக்கும். சிலருக்கு புரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். எனவே ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்களை பிரித்துப் பார்ப்பது சரியான அணுகு முறைதானா என்று நாம் சிந்திக்க வேண்டும். கீழடி ஆய்வில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம் சார்ந்த மக்களோடு தொடர்புடையாதகவெ இருக்கும். எனவே சீமான் போன்றவர்கள் தங்கள் கொள்கைகளை பரிசீலித்து பொது எதிரி யார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வளவு சிறந்த கல்வியறிவு பெற்ற மக்களை சூத்திரர்களாக மாற்றி அடிமைபடுத்தியது யார்? தமிழனனின் அறிவு சார்ந்த படைப்புகளை கொளுத்தியும் ஆற்றில் எரிந்து நாசமாக்கியதும் யார்? என்ற ஆய்வில் இறங்க வேண்டிய தருணம் இது.
எனது தாய் மொழி தமிழ் எனபதால் மற்ற மொழிகளை இளக்காரமாக பார்க்க வேண்டியதும் இல்லை. என் தாய் மொழிக்கு சற்று அதிக அந்தஸ்தை கொடுக்கலாம். அதே நேரம் மற்ற மொழிகளையும் வெறுக்க வேண்டியது இல்லை. தேவ மொழி என்று எந்த மொழிக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. எனவே தான் அரபியரான நபிகள் நாயகம் மொழி வெறி கூடாது என்பதனை இவ்வாறு கூறுகிறார்.
அரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அரபு மொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை.
நூல் : அஹ்மது 22391
மொழி வெறியின் உச்சத்தில் இருந்த அந்த மக்களிடையே ஒரு அரபியரான நபிகள் நாயகம் இவ்வாறு மொழி வெறியை உடைத்தெறிந்தது மிகப் பெரும் புரட்சி எனலாம்.



2 comments:

vara vijay said...

All these things are done by Allah only. Because he only decides what all have to do. We dont have any role in our life. Whatever happens it is done Allah. Do why suvi is getting angry. In the same article suvi had already stated that all good and evil are done by Allah according to Quran.

suvanappiriyan said...

இறைவன் மேல் பழி போட்டு தப்பிக்க முடியாது. இன்று நமக்கு வருமானம் இவ்வளவுதான் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதற்காக நாம் உழைக்காமல் வீட்டில் அமர்ந்திருப்பதில்லை.