உலகின் மிகப் பெரிய மண்ணால் ஆன பள்ளிவாசல்!
ஆப்ரிக்காவில் உள்ள மாலி தேசத்தின் திஜென்னா கிராமம். மழையினாலும், காற்றினாலும் சிதிலமடைந்த பள்ளியை புதிதாக நிர்மாணிக்க முடிவெடுத்தனர். கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மண்ணால் ஆன பள்ளிவாசலை கட்டி முடித்தனர். சிறுவர்களும், பெண்களும் கூட இந்த இறை இல்லப் பணியில் தங்களின் உழைப்பை வழங்கினர். இறை இல்லத்தை கட்டுவதில் அந்த மக்களுக்கு இருந்த ஈடுபாடு நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது. தங்களின் இன இழிவை நீக்கி, தாங்களும் இந்த உலகில் வாழும் மனிதர்கள்தான் என்ற உணர்வை ஊட்டிய இஸ்லாத்துக்கு அவர்களால் முடிந்த ஒரு சிறு உதவி இந்த இறை இல்லத்தை தங்கள் உழைப்பால் அமைத்தது.
சலவைக் கற்கள், குளிர் சாதன வசதி, என்று சகல வசதிகளுடன் உள்ள பள்ளியை விட தூய உள்ளத்தோடு கட்டப்பட்ட இந்த மண்ணால் ஆன பள்ளிவாசல் இறைவனின் அன்புக்கு மிக நெருக்கமானதாக இருக்கும்.
2 comments:
சலவைக் கற்கள், குளிர் சாதன வசதி, என்று சகல வசதிகளுடன் உள்ள பள்ளியை விட தூய உள்ளத்தோடு கட்டப்பட்ட இந்த மண்ணால் ஆன பள்ளிவாசல் இறைவனின் அன்புக்கு மிக நெருக்கமானதாக இருக்கும்.
----------------------------
ஆம் ஆம் நிச்சயம்.

Post a Comment