அமெரிக்க வாழ் இந்தியரான ஹசன் மின்ஹஜ், நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் 'இந்தியத் தேர்தல்' என்ற தலைப்பில் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது இணையவெளியில் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
யார் இந்த ஹசன்?
உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிமான ஹசன் மின்ஹஜ் அமெரிக்காவில் 'தி டெய்லி ஷோ' என்ற நிகழ்ச்சியை நடத்தும்போது பிரபலமானார். நடிகரும் ஸ்டேண்ட் காமெடியனுமான ஹசன், தற்போது உலக அரசியல் விமர்சகராகவும் மாறிவிட்டார்.
என்ன நிகழ்ச்சி?
நெட்ஃப்ளிக்ஸில் 'Patriot Act' என்னும் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள இணைய ரசிர்களைத் தன்வசப்படுத்தியவர் ஹசன். இந்நிகழ்ச்சியில் சர்வதேச அரசியல் குறித்தும் அதன் தலைவர்கள் (அதிபர்கள், பிரதமர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்) குறித்தும் பகடி செய்வது அவரின் வழக்கம்.
இந்நிலையில் கடைசியாக வெளியான எபிசோடில் 'இந்தியத் தேர்தல்' குறித்து தெரிவித்துள்ளார் ஹசன். முன்னதாக இந்திய அரசியல் குறித்துப் பேசப்போகிறேன் என்று தன்னுடைய உறவினர்களிடம் பகிர்ந்துகொள்கிறார் ஹசன். உடனே அவர்கள், ''அமெரிக்காவில் வசிக்கும் உனக்கு இந்திய அரசியல் எப்படித் தெரியும்?'', ''வெளியே கிடக்கும் குப்பைகள் அனைத்தும் உன் முகத்தில் வீசப்படும்'', ''முஸ்லிம் என்பதால் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுவாய்'', ''பேசாமல் போய் கிரிக்கெட் பற்றிப் பேசு'' என்று எச்சரிக்கை செய்கின்றனர்.
என்ன பேசினார்?
ஆனால் அவை குறித்துக் கவலைப்படாத ஹசன், இந்தியாவின் பன்முகத் தன்மை, பல்வேறு மொழிகள், மதங்கள் தாண்டிய கலாச்சாரத்தோடு தனது பேச்சைத் துவங்குகிறார். பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை எப்படி இந்து தேசியவாதமாக மாற்றப்பட்டது என்பது குறித்தும் காஷ்மீர் பாலகோட் தாக்குதல் குறித்தும் தனக்கே உரிய எள்ளல் பாணியில் விவரிக்கிறார்.
மரங்கள் மீது குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து சூழலுக்கு எதிரான தீவிரவாதத்தை இந்தியா முன்னெடுத்தது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டையும் சுட்டுக்காட்டுகிறார். இதன்மூலம் பாஜகவுக்கு ஆதரவான சூழல் மெல்ல அதிகரிப்பதையும் சொல்கிறார் ஹசன்.
இந்தியா முழுவதும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று மோடி முன்வைத்த வாக்குறுதியையும் அதற்காக 'இந்தியா ஃபர்ஸ்ட்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியதையும் குறிப்பிடும் ஹசன், ட்ரம்ப்பின் 'அமெரிக்க ஃபர்ஸ்ட்' வாக்குறுதியோடு அதை ஒப்பிடுகிறார்.
ஏராளமான விவகாரங்களில் இருவருக்கும் ஒத்துப்போவதையும் பொது மேடைகளில் முழக்கமிடும் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கத் தயங்குவதையும் முன்வைக்கிறார்.
இந்தியத் தேர்தல் குறித்த தனது நிகழ்ச்சி பற்றிப் பேசத் தான் அழைத்தபோது, பாஜக தலைவர்கள் யாரும் முன்வராததைக் குறிப்பிடும் ஹசன், காங்கிரஸின் சசி தரூர் பேசிய விதத்தைச் சிலாகிக்கிறார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி முந்தைய ஆண்டுகளில் பல்வேறு விதமான ஊழல்களில் சிக்கியதையும், மாபெரும் ஊழலாக 2ஜி ஊழல் உருவெடுத்ததாகவும் விமர்சிக்கிறார்.
49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜகவின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதையும் இதுதொடர்பான தரவுகளை தேர்தலுக்காக பாஜக மறைப்பதாகவும் கூறுகிறார்.
கருப்புப் பணத்தை ஒழிக்க அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாகவும் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்ததாகவும் கூறுபவர் இதைச் சொன்னால் என்னை 'பாகிஸ்தானின் ஏஜெண்ட்' என்பார்கள் என்கிறார்.
துப்பாக்கியோடு இருக்கும் துறவி என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் குறிப்பிடும் ஹசன், ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள், அதன் தீவிர இந்துத்துவா கொள்கைகள், பசுவின் பெயரால் தலித்துகளின் மீதும் முஸ்லிம்களின் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து வெவ்வேறு ஊடகங்களின் காணொலிகள், பேட்டிகள் மூலம் தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார்.
இறுதியாக, ''இந்தியா ஜனநாயக நாடாக இருக்குமா இருக்காதா என்பதை 1977-தேர்தல் முடிவுசெய்தது. இந்தத் தேர்தல் (2019) தேர்தல் இந்தியா இனி இந்தியாவாக இருக்குமா?'' என்ற யோகேந்திரா யாதவின் கருத்தோடு நிகழ்ச்சியை இறுதி செய்கிறார்.
TamilHindu
21-03-2019
21-03-2019
3 comments:
அரேபிய அடிமைகளின் கணிப்பு கருத்தும் என்றும் சரியாக இருக்க முடியாது.இவரது கருத்து அனைத்தும் இவரது வக்கிர புத்தியின் காரணமாக எழுந்துள்ளது. திரு.மோடியின் தலைமையிலான அரசிற்கு உலகம் முழுவதும் நற்பெயா்தான்.
1.சவுதி அரேபியா தங்கள் நாட்டின் உயரிய விருதான அப்துல் அஜீஸ் விருதை திரு.மோடி அவர்களுக்கு வழங்கியுள்ளது.இந்த விருது நமது நாட்டின் பாரத ரத்னா விருதிற்கு சமம் ஆனது.
2.ஆப்கானிஸ்தான் நாட்டின் உயா்ந்த விருதை திரு.மோடி அவர்களுக்கு வழங்கியுள்ளது.இந்த விருது நமது நாட்டின் பாரத ரத்னா விருதிற்கு சமம் ஆனது.
3.தென் கொரியாவும் உயா்ந்த விருதை வழங்கியுள்ளது.
இப்போது சொல்லுங்கள் திரு.மோடி அவர்களுக்கு உலகெங்கும் நல்ல பெயா்தானே!
தோ்தல் களம் கிறிஸ்தவ தேவாலயங்களில் இப்போதே திமுக அணிக்கு ஆதரவாக பிரார்த்தனைகள் துவங்கிவிட்டன. மசுதிகளிலும் அதுதான் நிலைமை
---------------------------------------------------------------------------------
சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்கு வங்கி மட்டுமே இப்போதைக்கு திமுகவின் ஒரே நம்பிக்கை. அதிமுக, பாஜகவின் தோழமைக் கட்சியாக மாறியதால், சிறுபான்மையினர் தங்களையே ஆதரிப்பார்கள் என்று மனப்பால் குடிக்கிறது திமுக. அதேசமயம், திமுகவின் ஹிந்து விரோதப் போக்கால் பெரும்பான்மை சமுதாயத்தின் அதிருப்தி பெருகி வருவதை கடைசி நேரத்தில்தான் ஸ்டாலின் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. “திமுக ஹிந்துக்களுக்கு எதிரியல்ல, பாஜகவுக்கு மட்டுமே எதிரி” என்று சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. முஸ்லிம் லீக் கட்சியை தனது அணியில் வைத்துக்கொண்டே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று தனது அணியை ஸ்டாலின் அழைப்பது அரசியல் நகைச்சுவை. இந்த அணியை மனிதநேய மக்கள் கட்சி என்ற இஸ்லாமியக் கட்சியும் வேறு வழியின்றி ஆதரிக்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் இப்போதே திமுக அணிக்கு ஆதரவாக பிரார்த்தனைகள் துவங்கிவிட்டன. .
முந்தைய தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட அதிமுக அணி- திமுக அணி இடையிலான வாக்கு விகித மாறுபாடு இப்போதைக்கு 15 சதவிகிதமாக இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி, சிறுபான்மையினர் ஆதரவு மாற்றம், உயர் பணமதிப்பிழப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யின் எதிர்விளைவுகள் போன்ற காரணங்களால் அதிமுக தலைமையிலான அணியின் வாக்கு விகிதம் குறைய வாய்ப்புகள் இருப்பினும்கூட, அதிமுக அணியின் சரிவு ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்’ என்ற அளவிலேயே இருக்கும்.
காஞ்சிபுரம் பொதுக்கூட்டம்:
மக்கள் திரளின் மகத்தான அடையாளம்.
தவிர, கூட்டணி பலம், பிரதமர் மோடி மீதான அபிமானம் தமிழகத்தில் பெருகி வருவது போன்றவை அதிமுக அணியின் இழப்புகளை சமன் செய்ய உதவும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது, முத்ரா வங்கிக் கடனால் தமிழகத்தில் அதிகமானோர் பயன் பெற்றிருப்பது, விவசாயிகளுக்கு உதவித்தொகை, உள்கட்டமைப்பு வசதி மேம்பாடு, மத்திய அரசில் ஊழலின்மை ஆகியவை பாஜக- அதிமுக அணியின் சாதக அம்சங்கள்.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்துவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடைப்படை பலம். எதிரணியில் அவ்வாறு ஒருவரைக் காட்ட முடியாதென்பதும் பாஜக சார்ந்த அணிக்கு பலம். தவிர, தமிழகத்தில் திமுக அணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம், சிபிஐ ஆகியவை பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுவதும், கர்நாடகத்தில் தமிழக நலனுக்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் வாக்க்குறுதி அளிப்பதும் திமுக அணிக்கு பாதகங்கள்...... 2
மாநில அரசைப் பொருத்த வரை, ஜெயலலிதாவுக்குப் பிறகான கடந்த இரண்டாண்டுகால அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இணை ஓரளவு நற்பெயரையே ஈட்டி இருக்கிறது. அவர்களின் செயல்பாடுகளில் ஆணவப்போக்கு வெளிப்படவில்லை. இவ்விருவரும் தமிழகத்தின் பிரதானமான இரு ஜாதிகளான கொங்கு வேளாளர், முக்குலத்தோர் சமூகங்களைச் சார்ந்திருப்பது அதிமுகவின் கூடுதல் வலிமை. இத்துடன் பாமகவின் வன்னியர் வாக்கு வங்கியும், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக ஆதரவாகத் திரும்பும் நாடார் வாக்கு வங்கியும், தேர்தல் களத்தில் பேரிடம் வகிக்கும். இத்தகைய சாதகமான நிலையை திமுக அணியில் காண முடியவில்லை.
அதிமுகவின் தேர்தல் களப்பணியுடன் திமுகவை ஒப்பிட சற்றும் இயலாது. மேலும், அதிமுக அணியின் கூட்டணி வலிமையும், மோடியின் பிரசாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டக் கற்கள் போன்றவை. உண்மையிலேயே எடப்பாடி ராசியானவர் என்பது ஒவ்வொரு முறையும் நிரூபணம் ஆகி வருகிறது. ஆர்ப்பாட்டமில்லாமல் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் அவரது லாவகத்தைக் கண்டு மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் வாயடைத்துபபோயிருக்கிறார்கள்.......திமுகவும் அமமுகவும் ம.நீ.மையமும் எவ்வளவுதான் போராடினாலும் எட்ட முடியாத தொலைவில் மோடியின் ஆளுமையும் அதிமுக அணியின் வாக்கு வலிமையும் உள்ளன.வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.
தேசப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, மக்கள் நலத் திட்டங்கள், தேசியப் பெருமிதம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி, உலக அளவில் பாரதத்தின் செல்வாக்கு உயர்வு, வரிச் சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சி, விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள், தமிழகத்துக்கு பாஜக அரசு அளித்துள்ள திட்டங்கள் என பன்முகங்களில் சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும்போது, அதில் தமிழகத்தில் பங்களிப்பு நூறு சதவிகிதமாக இருக்க வேண்டும். வெல்வா் மோடி அவர்கள்.
Post a Comment