Followers

Tuesday, September 17, 2019

ஹிந்தியை நஞ்சாக வெறுக்க காரணம் என்ன?

ஹிந்தியை நஞ்சாக வெறுக்க காரணம் என்ன?
அந்நிய மொழியான ஆங்கிலத்தை படித்தாலும் படிப்போம்: ஹிந்தி உள்ளே நுழைய விட மாட்டோம் என்று அனைத்து மக்களும் ஒன்றாக குரல் எழுப்ப காரணம் என்ன?
இன்று வர்ணாசிரம கொள்கை இந்த அளவு இந்து மதத்தில் பிடிப்போடு இருக்க காரணமே மனுஸ்ருமிதி, ராமாயணம், மகாபாரதம், ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள். . இந்த நூல்கள் எல்லாம் எழுதப்பட்டது சமஸ்கிரதம் மற்றும் ஹிந்தி மொழிகளில். பார்பனர்கள் சுகமாக வாழ இந்த புத்தகங்கள் எல்லாம் வழிகோலின. இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் இதனால் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டனர். எத்தனை உயர் பதவிகளை அடைந்தாலும் தலித் என்றால் தீண்டாமை தனது மூக்கை நுழைக்கும். இன்றைய ஜனாதிபதி கூட கோவில்களில் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பது நமக்கு விளங்கும். நேற்று கூட ஒரு எம்பி தலித் என்பதால் ஊருக்குள்ளேயே ஆந்திராவில் அனுமதிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் மூல காரணம் ஹிந்தி மொழியிலும் சமஸ்கிரத மொழியிலும் அமையப் பெற்ற நூல்களே. எனவே தான் தங்களின் இழி நிலைக்கு காரணமான இந்த ஹிந்தி மொழியையும் சமஸ்கிரத மொழியையும் இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் நஞ்சாக வெறுக்கின்றனர்.
தொலைக் காட்சி விவாதங்களில் கூட முக்கியமான இந்த விஷயத்தைப் பற்றி எவரும் பேசுவதில்லை. ஒரு பிரச்னையின் மூல காரணத்தை ஆராயாமல் ஒரு தீர்வையடைய முடியாது. மக்கள் மனதில் என்று தீண்டாமை ஒழிகிறதோ அன்று ஒருக்கால் தமிழர்கள் இந்தியை வரவேற்பர் என்பது எனது எண்ணம்.
ஆக்கம் : சுவனப்பிரியன்


1 comment:

Dr.Anburaj said...



ரூ100 மற்றும் குவாட்டா் மது பாட்டலுக்கும் கூடிய கூட்டம்.

இருட்டில் கயிறை பாம்பு என்று அலறியவன் போல் ஏதும் நடக்காமல் இவர்கள் தன்பயத்தால் பாரதிய ஜனதாக் கட்சி வெகு வேகமாக வளா்வது பொறுக்காமல் இப்படி கோஷம் போடுகின்றார்கள். திரு.மோடி அவர்களின் தியாகம் தமிழக மக்களின் உள்ளததை படிப்படியாக வென்று வருகின்றது.தொடரும் வெற்றிகள் திரு.மோடி அவர்களுக்குதான். நாய்கள் குரைத்துக் கொண்டேயிருக்கும்.