Followers

Sunday, July 26, 2020

13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால்....

13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 68 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலரும் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காக சில சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடியால் பலரும் விமான டிக்கெட்டிற்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 68 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த 13 வயது சிறுமி ஷார்ஜாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தானும் உதவி செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். அதனால் ஐக்கிய அரசு அமீரகத்தில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கு உதவியுள்ளார். தான் சேமித்து வைத்திருந்த ரூ.61,000 பணத்தை வைத்து இரண்டு பேருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான அஜ்மல் ரூ.20 லட்சம் செலவு செய்து 66 பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்திய மக்கள் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளதை அறிந்து அவர்களுக்கு உதவுவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். அவர்கள் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தரவுகள் படி, 4,50,000க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்ப அனுமதி கோரி பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,.
தகவல் உதவி
நியூஸ் 7
26-07-2020


No comments: