Followers

Tuesday, July 28, 2020

73 வருடங்களுக்குப் பிறகு சீக்கியர்களுக்கு கிடைத்த குருத்வாரா!

73 வருடங்களுக்குப் பிறகு சீக்கியர்களுக்கு கிடைத்த குருத்வாரா!
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நகரம் குவெட்டா. இங்கு பிரிவினைக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் இந்தியா சென்று விட்டனர். எனவே பயன்பாடு இல்லாத இந்த 200 வருட பழமையான குருத்வாரா பெண்கள் பள்ளியாக மாற்றப்பட்டது. ஹையர் செகண்டரி படிக்கும் பெண்கள் பள்ளியாக இந்த குருத்வாரா இதுவரை கடந்த 73 வருடங்களாக பயன்பாட்டில் இருந்தது.
தற்போது அங்கு கணிசமாக சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் வழிபாடு செய்ய எங்களின் குருத்வாரா திரும்ப வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீக்கியர்களுக்கு சொந்தமான குருத்வாராவை திரும்ப ஒப்படைக்கும் படி உத்தரவிட்டனர். அதன்படி சென்ற வாரம் சீக்கியர்களிடம் குருத்வாரா முறையாக ஒப்படைக்கப்பட்டு தற்போது வழிபாடுகளும் நடந்து வருகிறது.
இங்கு ஏற்கெனவே படித்து வந்த பெண் குழந்தைகள் அருகில் உள்ள வேறொரு அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
'இது மிகச் சிறந்த முடிவு' என்று பலுசிஸ்தான் சிறுபான்மை பிரிவு ஆலோசகர் தினேஷ்குமார் கூறியுள்ளார்.
'எங்களின் கனவு நனவானது' என்று ஜக்பீர் சிங் என்று சீக்கியர் சந்தோஷத்தோடு கூறுகிறார்.
14000 ஸ்கொயர் ஃபீட் உள்ள இந்த இடமானது பல பில்லியன்கள் பெருமானமுள்ளது. ஆனால் உரியவர்கள் வழக்கு தொடுத்ததால் நியாயம் நிலை நிறுத்தப்பட்டது. இஸ்லாம் கட்டளையிடுவதை பாகிஸ்தான் நீதிமன்றம் செயல்படுத்திக் காட்டியுள்ளது. மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட பலுசிஸ்தான் அரசுக்கு எமது நன்றிகள்.
ஆக்கம்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
கல்ஃப் நியூஸ் &
முஸ்லிம் மிர்ரர்
25-07-2020
---------------------------------------------------------
1123. ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட பிறர் தவறவிட்ட பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் அதன் சுருக்குக் கயிற்றையும் அறிந்து பாதுகாத்து வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து அதை அடையாளம் சொல்லக் கேட்டுவிட்டால் அவரிடம் கொடுத்து விடு. இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள்.
அதற்கு அவர், ‘பிறரின் தொலைந்து போன ஆடு நம்மிடம் வந்து சேர்ந்தால்…?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அது உனக்குச் சொந்தமானது. அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது. அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அவர், ‘தொலைந்து போன ஒட்டகம் நம்மிடம் வந்து சேர்ந்தால்?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. எனவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு” என்று கூறினார்கள்.
புஹாரி : 2372 ஜைது பின் காலித் (ரலி).




7 comments:

Dr.Anburaj said...

சு...ன் பொய் - இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் இந்தியா சென்று விட்டனர்.
உண்மை ---
பாக்கிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம் சிறுபான்மையிினா்கள் மிகவும் பாதுகாப்பாக சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். இன்றும் பலூகி பெருகி வாழ்ந்து வருகின்றார்கள்.ஆனால் பாக்கிஸ்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழ்ந்து வந்த பகுதியில் வாழ்ந்த இந்து சிறுபான்மையினா் கொடும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். எனவே செத்தவன் போக கற்பழிக்கப்பட்டு குமுஸ் பெண்ணாக்கப்பட்ட பெண்கள் தவிர தப்பி ஒடியவர்கள் இந்தியா வந்து சோ்ந்தனா்.
-------------------------------------------------------------------------

தற்போது அங்கு கணிசமாக சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் வழிபாடு செய்ய எங்களின் குருத்வாரா திரும்ப வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். 14000 ஸ்கொயர் ஃபீட் உள்ள இந்த இடமானது பல பில்லியன்கள் பெருமானமுள்ளது.

சு..ன் பொய் - ஆனால் உரியவர்கள் வழக்கு தொடுத்ததால் நியாயம் நிலை நிறுத்தப்பட்டது.
ஐநா சபை இந்திய பிரதமா் திரு.நரேந்திர மோடி அவர்களின் கடும் நடவடிக்கைகள் பாக்கிஸ்தான் அரசை கடும் நிா்பந்தத்திற்கு ஆளாக்கி உள்ளது. இந்தியா மற்றும் சா்வதேச நாடுகளின் கடும் கண்டனம் காரணமாகவும் இடத்தை மீட்க தொடா்ந்து முயன்று வந்த(பாக்கிஸ்தானில் வாழும் ) இந்து சீக்கிய சகோதரா்களின் சாதனை இது.
---------------------------------------------------------------------------
சு..ன் பொய்--- இஸ்லாம் கட்டளையிடுவதை பாகிஸ்தான் நீதிமன்றம் செயல்படுத்திக் காட்டியுள்ளது.
உண்மை - இசுலாம் பிற மதத்தவர்களையும் அவர்களது வழிபாட்டு இடங்களையும் அழிக்கச் சொல்கிறது.
-------------------------------------------------------------------------------

மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட பலுசிஸ்தான் அரசுக்கு எமது நன்றிகள்.
உண்மை- பலுசிஸ்தானில் அரேபிய மத வெறி சற்று குறைந்து வருகின்றது.

Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

கண்டால் எடு கேட்டால் கொடு என்பது கிராமிய ஹிந்து பழமொழி.


ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட பிறர் தவறவிட்ட பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் அதன் சுருக்குக் கயிற்றையும் அறிந்து பாதுகாத்து வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து அதை அடையாளம் சொல்லக் கேட்டுவிட்டால் அவரிடம் கொடுத்து விடு. இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள்.

மேற்படி உபதேசத்திற்கு முரணாக

அதற்கு அவர், ‘பிறரின் தொலைந்து போன ஆடு நம்மிடம் வந்து சேர்ந்தால்…?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘அது உனக்குச் சொந்தமானது. அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது. அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள்.

மேற்படி உபதேசத்திற்கு முரணாக

அதற்கு அவர், ‘தொலைந்து போன ஒட்டகம் நம்மிடம் வந்து சேர்ந்தால்?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. எனவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு” என்று கூறினார்கள். புஹாரி : 2372 ஜைது பின் காலித் (ரலி).

ஆட்டிற்கு ஏன் அவகாசம் இல்லை .

முஹம்மது என்றாலே மனம் போன போக்குதான்.

suvanappiriyan said...

//ஆட்டிற்கு ஏன் அவகாசம் இல்லை .//

காரணம் தனி ஆட்டை ஓநாய்கள் அடித்து சாப்பிட்டு விடும். பாலைவனத்தில் மேயும் ஒட்டகம் அதன் கூட்டத்தோடு நாளடைவில் சேர்ந்து கொள்ளும்.

Dr.Anburaj said...

பையையும் ..... பாதுகாப்பது போல் ஆட்டையும் பாதுகாத்து வருவது இந்தியாவில் இன்றும் நடைமுறையில் உள்ளது. உடையவன் வந்து கேட்டால் பராமரித்ததற்கு இழப்பீடு பெற்று திரும்ப கொடுப்பது கிராம பண்பாடு.

ஆட்டை அறுத்து தின்னலாம் என்ற ஆசையில் நியாயங்கள் மாறுகின்றது.
அரேபியர்கள் என்றால் அவர்களது சாதனை தின்பது ... அடுத்தது பெண்களை ......பதும்தான்.