Followers

Sunday, July 19, 2020

வேறு யாரும் உள்ளே நுழைந்து விடக் கூடாது

கருவறைக்குள் தனது சாதி பார்பனர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார் ராஜா.
ஏனெனில் அந்த அளவு மற்ற சாதியினரால் படையலாக பொன்னும் பொருளும் பாலும் நெய்யும் கடவுளுக்கு படைக்கப்படுகிறது. அத்தனையும் அர்ச்சகர்களின் குடும்பங்களுக்குச் செல்கிறது. அது வேறு சாதிக்கு செல்வதை ராஜா அனுமதிப்பாரா? எனவேதான் குதிக்கிறார்.


2 comments:

Dr.Anburaj said...

அரேபிய அடிமைகளுக்கு இந்து சம்பிராதயம் முறைகள் விளங்காது.ஆகவே தான் இந்து மதத்தை சீா்திருத்தும் பொருப்பு இந்துக்களுக்குதான் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கோவிலிலும் கருவறைக்குச் செல்ல தகுதி பெற்றவர்கள் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடந்து வருகின்றது.

1.இதில் சாதி அடிப்படையில் பெருமையோ சிறுமையோ இல்லை.
2. அதிக எண்ணிக்கையில் கோவில்களில் பார்பனா் அல்லாத மக்கள்தான் கோவில் பணியாளா்கள்ாக அர்ச்சகா்களாக இருக்கின்றார்கள்.
3. கோவிலில் பணியாற்றம் அர்ச்சகர்களுக்கு திருக்கோவில் நிா்வாகம் வழங்கும் ஊதியத்தை சு..ன் பதிவு செய்ய வேண்டும். நிா்வாக அதிகாரியின் சம்பளத்தையும் பதிவு செய்து பாருங்கள் அநியாயத்தை.
4.பல கோவில்கள் இன்றளவும் பிறாமணர்களின் தியாகத்தால் .......இருக்கி்ன்றது.அதனை நிாவகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை தெண்டம் மாக இருக்கின்றது.

உண்மை நிலை தெரியாமல் ஒரு அரேபிய பயங்கரவாதியாக மாறி விஷத்தை கக்க வேண்டாம்.

Dr.Anburaj said...

விளக்கை ஏற்றத் தெரிந்தவர்கள் தமிழக அரசியலில் இல்லை. பிரச்சனை அதுதான்.

ஒரு நாட்டைஆளும் அரசிற்கு” பார்பன் ஒழிப்பு” என்று ஒரு சாதி மக்களை அழிக்க நினைப்பது தவறு என்று உணர வேண்டும்.

கட்டுகுத்தகை நிலங்களில் உழவனுக்கு உரிமை உண்டு.பரம்பரையாக உழவனாக பணியாற்றியதால் அவனுக்கு அந்த உரிமை உள்ளது என்பதை அரசு சட்டம் நீதித்துறை ஒப்புக் கொள்கிறது. அதுபோல் குறிப்பிட்ட இந்து ஆலயங்களில் சில ஆகம முறைப்படி வழிபாடு நடந்து வருகின்றது. அந்த வழிபாடு முறைகளில் தோ்ச்சி பெற்றவர்கள் அந்த வழிபாடு முறைகளில் தெரிவித்தபடி வாழக்கை வாழ்ந்து வருபவர்கள் பிறாமணா்கள். எனவே பாரமபரிய உரிமை அவர்களுக்கு உள்ளது. இதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
நியாயமான சொத்துக்கள் வருமானம் உள்ள அனைத்து இந்து கோவில்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
01. பிறபட்ட வகுப்பினா் அட்டவனை சாதியினா் வாழும் ஊராகப் பார்த்து பிறப்டட மக்களுக்கு ஏற்ற வகையில்

”நவீனமான புதிய கோவில் வழிபாடு முறையை வகுத்து”

அதன் படி மேற்படி கோவிலைக் கட்டி பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக நியமிக்காமல் பிறசாதி மககளுக்கு பயிற்சி அளித்து கோவில் பணிவிடை செய்ய ஏற்பாடு செய்யலாம்.பிரமாண்டமான திருவிழாக்களை தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமே. ஏற்கனவே உள்ள ஆலயத்தின் வழிபாடு முறைகளை மாற்ற வேண்டாம் என்பதுதான் கொள்கை.அதைத் தொட்டால் பிரச்சனை எழும். விட்டு விடுங்கள்.

இந்துமதத்தில் புதிய முறைகளை உருவாக்கி அந்த முறையில் புதிய கோவில்களை உருவாக்க எந்த தடையும் இல்லை.

அறநிலையத்துறை நிதியில் இருந்து புதிதாக உருவாக்கப்படும் கோவி்ல் கத்தோலிக்க தேவாலயம் சாயலில் கலையரங்கமாக தியான முறை சார்ந்து அமைதியான முறையில் வழிபாடு செய்வதாக ஏற்ற முறையிலஅமைக்கலாம்.

அப்படி உருவாக்கி பெரும் வெற்றி பெற்றவா் ஸ்ரீநாராயணகுரு. ஐயா வைகுண்டசாமி.இந்த மகான்களை பின்பற்றி மாநிலத்தில் கோவில்களை உருவாக்கி பிறப்டட அட்டவணை சாதியினரை கோவில் கருவறை பணியாளா்களாக நியமித்து சிறப்பாக சமயகல்வி அளித்து
பிற்பட்ட அட்டவணை சாதி மக்களின் கண்ணியத்தைஉ யா்த்தலாம். ஆசையை நிறைவேற்றலாம்.

இந்து சமய அறநிலையத்துறை முன்வருமா ? வராது.

இங்கோ பிறாமணா்களை புலி வருது புலி வருது புலி வருது புலி வருது
என்ற பயம் காட்டியே.......அரசியல் செய்து பழகி விட்டார்கள். புலி ஆடாக மாறி அநேக வருடங்கள் ஆகி விட்டது. இன்னும் புலி வருது என்றுதான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

விளக்கை ஏற்றத் தெரிந்தவர்கள் தமிழக அரசியலில் இல்லை. பிரச்சனை அதுதான்.