கடல் கடந்து வந்த இனிய செய்தி..!
துபாயில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜேஷ் என்கிற இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு,
துபாய் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, எண்பது நாள்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலும், இருபத்து நான்கு மணி நேரமும் செவிலியர்களின் கவனிப்பிலும் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு,
முழுமையாகக் குணமடைந்தார். அந்த அதிநவீன மருத்துவமனையில் அவருடைய சிகிச்சைக்கான கட்டணம் ஒன்றரை கோடி ரூபாய் ஆனது.
ராஜேஷின் நிலைமையை அறிந்து துபாய் வாழ் இந்திய உழைப்பாளர்கள் சொசைட்டியைச் சேர்ந்த நரசிம்மா களம் இறங்கி, மருத்துவமனைக்கு ராஜேஷின் இயலாமையை உணர்த்த, மனிதநேய அடிப்படையில் கட்டணம் கட்டத் தேவையில்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
தொடர்ந்து அசோக் கோட்சா என்கிற சாமிநாராயண் அறக்கட்டளை நிர்வாகி பயணச் சீட்டும், கைச்செலவாக பத்தாயிரம் ரூபாயும் கொடுக்க நாடு திரும்பிவிட்டார் ராஜேஷ்.
இவையெல்லாவற்றையும் தெலுங்கானா அரசின் என்ஆர்ஐ செல்லைச் சேர்ந்த சிட்டிபாபு ஒருங்கிணைத்திருக்கின்றார்.
மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சைக்கான பணத்தைக் கட்டவில்லை என்பதற்காக முதியவர் ஒருவரின் கால்கள் கட்டிலுடன் கட்டப்பட்டிருந்த காட்சி நினைவுக்கு வருகின்றதா?
இன்னொன்றையும் கவனியுங்கள். தெலுங்கானா அரசாங்கமே என்ஆர்ஐ செல் ஒன்றை அமைத்து இந்த மாதிரியான சிக்கல்களைத் தீர்த்து வருகின்றது.
1 comment:
இந்தியாவில் சோறும் போட்டு மருத்துவ சிகிட்சை இலவசமாக வீடு தேடி வந்து அழைத்துச் சென்று கொடுத்து காப்பாற்றி வருகின்றார்கள். இந்த லட்சணத்தில்
துபாய் நாட்டில் அந்த அதிநவீன மருத்துவமனையில் அவருடைய சிகிச்சைக்கான கட்டணம் ஒன்றரை கோடி ரூபாய் ஆனது.
இது என்ன பகல் கொள்ளையா ? அரசு மருத்துவமனை அங்கு கிடையாதா ? பெட்ரோல் விற்று வரும் பணத்தை அரேபிய சேக்குள் தின்று தீர்த்தா வருகின்றார்கள் ? அரேபிய நாடுகளின் லட்சணம் மிகக் கேவலமாக உள்ளதே!
துபாயில் அரசு மருத்துவமனை இருந்திருந்தால் நண்பரை அங்கு சோ்த்து இருப்ார்கள்.
ஏழை நாடு இந்தியாவில் மருத்துவம் இலவசம். பெரும் பணக்கார நாட்டில் மருத்துவ சேவை கட்டணம் ........??????? கொடுமை.
Post a Comment